தியாகராய நகர்

(தி. நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


தியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இது ஒரு முக்கியமான வணிகப்பகுதி. நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திராவிட இயக்கத்தவரில் முக்கியமானவரும் நீதிக்கட்சியைத் ஆரம்பித்தவர்களில் ஒருவருமான சர் பி.தியாகராயாவின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது.

தி. நகர்
—  நகர்ப்பகுதி  —
தி. நகர்
இருப்பிடம்: தி. நகர்

, சென்னை , இந்தியா

அமைவிடம்13°02′30″N 80°14′03″E / 13.041800°N 80.234100°E / 13.041800; 80.234100
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்மு. அருணா, இ. ஆ. ப [3]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பாண்டி பஜாரும், உஸ்மான் சாலையும், ரங்கநாதன் தெருவும் தான் தி.நகரின் மிக முக்கியமான வணிகமையங்கள். ஆடைகள், அணிவகைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இங்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும். இப்பகுதியில், பல்வேறுவகைச் சேலைகள் உட்பட்ட ஆடைகள், தங்க, வைர நகைகள் முதலியவற்றுக்கான, பல மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய விற்பனை நிலையங்களுடன், நடைபாதைக் கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதைக் காணலாம். விடுமுறை நாட்களிலும், பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களிலும் இந்தப்பகுதியில் கூட்டம் நிரம்பி வழியும்.

தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயம்

திருமணம் முதலியவற்றுக்காக ஆடை அணிகள் வாங்குவதற்காகப் பலர் தொலை தூரங்களிலிருந்தும் இப் பகுதிக்கு வருகிறார்கள். உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கூடச் சிறப்புத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்குத் தமிழ் மக்கள் இப்பகுதிக்கு வருவதைக் காணமுடியும். இதனால் பல தங்கு விடுதிகளும், உணவு விடுதிகளும் இங்கே பெருமளவில் உள்ளன.

தியாகராஜ நகரில் பல புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன.

மேற்கோள்கள்



"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தியாகராய_நகர்&oldid=3697504" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்