திருவெளிப்பாடு

திருவெளிப்பாடு (கிரேக்கம்: Ἀποκάλυψις Apokálypsis “திரையகற்றல்” அல்லது “வெளிப்படுத்துதல்”) என்பது மானுடகுலத்தில் பெரும்பாலானோருக்கு மறைக்கப்பட்ட ஏதேனும் ஒன்று குறிப்பிட்ட தனிச்சலுகையுடைய மனிதர்களுக்கு வெளியாக்கப்படுவதாகும். இன்று இப் பதம் அர்மாகெடான் அல்லது உலகத்தின் முடிவைக் குறிக்கிறது. இது apokalupsis eschaton என்ற சொற்றொடரின் சுருக்கமாக இருக்கலாம், இதன் சொல்லுக்குச் சொல்லான பொருள், “காலத்தின் அல்லது உலகத்தின் முடிவில் வெளிப்படுதல்” ஆகும். கிறித்தவத்தில், விவிலியத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் யோவானுக்கு அளிக்கப்பட்ட திருவெளிப்பாடாகும்.

பத்மூவில் தூய. யோவான்: வெளிப்படுத்தின தரிசனத்தைப் பெறுதல்

சிறப்பம்சங்கள்

கனவுகள் அல்லது தரிசனங்கள்

வருங்கால சம்பவங்களைப் பற்றி அவருடைய பெயரிலேயே பெயரிடப்பட்டிருக்கும் தானியேல் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, தேவதூதர் தானியேலுக்கு ஒரு கனவு மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது.[1] அல்லது யோவானால் திருவெளிப்பாட்டு நூலில் கூறப்படுவது போன்றதாகும். மேலும், வெளிப்படுத்தலின் விதமும் அதைப் பெற்றவரின் அனுபவமும் கூட மேம்பட்ட விதமாயிருக்கிறது. அந்த சம்பவக்குறிப்பு பொதுவாக தன்னிலையிலேயே அளிக்கப்படுகிறது. வெளிப்படுத்தப்படப்போகிற இரகசியங்களின் முக்கியத்துவத்துடன் சம்பந்தப்பட்ட சூழல்களிலும் ஏதோ ஒரு அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. இரகசியங்களின் கூறுகள், தீர்க்கதரிசனத்திலேயே அடிக்கடி தெளிவாய்த் தெரிகிறபடி முன்பு நேரிட்ட சம்பங்களிலேயே நிழலிட்டு காட்டப்படுகிறது. இந்த வெளிப்படுத்தல் பாரம்பரியத்தின் அம்சங்களில் சில, தரிசனத்துடைய சூழல்கள் மற்றும் ஞானதிருஷ்டிக்காரருடைய தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

வெளிப்படுத்துதல் இலக்கியத்தின் மிக ஆரம்ப உதாரணம் விவிலியத்திலுள்ள தானியேல் புத்தகமாகும். ஒரு நீண்ட கால உபவாசத்திற்குப் பின்,[2] தானியேல் ஒரு நதியோரமாய் நிற்கும்போது, ஒரு தெய்வீக உருவம் தோன்றி, வெளிப்படுத்துதல் ஆரம்பிக்கின்றது (தானியேல் 10:2முதல்). புதிய ஏற்பாட்டு வெளிப்படுத்தலில் (1:9முதல்), யோவானுக்கு அவ்வண்ணமே ஒரு அனுபவம் நேர்கிறது, அதுவும் அதே போன்ற வார்த்தைகளில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. பாருக்கின் கிரேக்க வெளிப்படுத்துதலின் முதல் அதிகாரத்தையும் பாருக்கின் சீரிய மொழி வெளிப்படுத்துலையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் vi.1முதல், xiii.முதல், lவ.1-3; அல்லது, தீர்க்கதரிசி தன்னுடைய ஜனங்களின் எதிர்காலத்தை எண்ணி கலங்கி தன் படுக்கையில் படுத்திருந்தபோது, அவர் மெய்மறந்த நிலையடைந்து, அவருடைய “தலையில் தரிசனங்கள் அடைந்து” வருங்காலம் அவருக்குக் காண்பிக்கப்படுகிறது. இது தானியேல் 7:1 முதல், 2 எஸ்ட்ராஸ் 3:1-3: மற்றும் ஏனோக்கின் புத்தகம் i.2 முதல் ஆகிய இடங்களில் காணப்படுகிறது; தரிசனம் ஞானதிருஷ்டிக்காரரை என்ன செய்தது என்று பார்க்க, தானியேல் 8:27; ஏனோக்கு lx.3; 2 எஸ்ட்ராஸ் 5:14 ஆகிய இடங்களை நோக்கவும்.

தேவதூதர்கள்

வெளிப்படுத்துதலை தேவதூதர்கள் கொண்டு செல்வது நிலையான அம்சமாகும். வேதாகமத்தில் குறைந்தது நான்கு விதமான அல்லது வரிசைகளிலான தேவதூதர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்: பிரதான தேவதூதர்கள், தூதர்கள், கேருபின்[3][4][5][6][7][8][9] மற்றும் சேராபின்.[10] இந்த தெய்வீக தூதுவர்கள் மூலமாக கடவுள் அறிவுறுத்தல்களை வழங்கலாம்; இவர்கள் ஞானதிருஷ்டிக்காரருடைய வழிகாட்டியாகவும் விளங்குகின்றனர். 'புக் ஆஃப் ரிவிலேஷன்'னில் இயேசு கிறிஸ்து என்கிற மனிதரின் வடிவில் வெளிப்படுத்தியது காண்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கடவுள் தாமே கூட வெளிப்படுத்தல்களை அருளலாம். 'தி புக் ஆஃப் ஜெனிசிஸ் “தூதர்” திரு வெளிப்பாட்டை விளைவிப்பது பற்றி பேசுகிறது.

மிருகம் அல்லது கடைசி கால இளவரசன்

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் ஒரு தனிப்பட்ட நபர் கடவுளுடைய சீற்றத்திற்கு ஆளாவதாக தனித்து சுட்டிக்காட்டப்படுகிறான். இந்த நபர் வேதாகமத்தில் “மிருகம்”, “விலங்கு போன்ற மனிதன்",[11][12] “வரப்போகின்ற இளவரசன்” போன்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறான். வேதாகமத்தில் ஒரு பண்டையக் கால 'தீருவின் இளவரசன்' தனித்து சுட்டிக்காட்டப்படுகிறான். இவன் கிறிஸ்துவின் மீது நம்பிக்கையற்றவன் ஒரு ‘உருமாதிரியாக’ கருதப்படக்கூடும்.[13]

தீருவின் இளவரசனுடைய நியாயத்தீர்ப்புக்குப் பின், கடவுள் எசேக்கியேல் தீர்க்கதரிசியை தீருவின் இராஜாவைக் குறித்து ஒரு நியாயத்தீர்ப்பை எழுதும்படி ஏவுகிறார். அந்த வசனங்களை வாசித்துவிட்டு, அது ஒரு மனிதனாக இல்லாமல், “மறைந்துள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப் ” என்று சிலர் கூறுகின்றனர்.[14] அந்த வசனங்களை மேலும் வாசிக்கும்போது அங்கு கூறப்படுகிற கேருப் சாத்தானாக இருக்கலாமென்று தெரிகிறது. ஏனென்றால் அவனுடைய விழுகைக்கு முன் இதுவே கடவுளுடைய சிங்காசனத்துக்கு முன்பு அவனுடைய பதவியாக இருந்தது. முடிவில் நியாயந்தீர்க்கப்படப்போகிற ‘இளவரசன்’[15][16][17] என்றும் சாத்தான் சித்தரிக்கப்படுகிறான். நேரடியாக அர்த்தங்கொள்ள வேண்டுமென்றால் இந்த வசனங்கள் தீருவின் இளவரசனாகிய ஒரு மனிதனையே குறிக்கின்றன. மற்றொரு மொழிப்பெயர்ப்பில், இந்த கேருப் இளவரசனுக்குப் பதிலாக இளவரசன் மீது செயல்புரிபவரைக் குறிக்கின்றது.[18]

எதிர்காலம்

இந்த ஆகமங்களில் வெளிப்படுத்தப்பட்ட தரிசனங்களை எழுதுவதன் மூலமாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை தீர்க்கதரிசிகள் வெளியாக்கினர். இந்த இலக்கிய நடையில் மத நோக்கு தெளிவாக விளங்குகிறது. மனிதகுலத்துடன் கடவுள் ஈடுபடுகிற விதத்தையும், கடவுளுடைய இறுதி நோக்கங்களையும் இவை காண்பிக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர்கள், சில நேரங்களில் வரப்போகும் சம்பவங்களை, அதுவும் இந்த தற்போதைய காலத்தின் முடிவை, மிகவும் தெள்ளத்தெளிவாக சித்தரிக்கின்றனர். இந்த வசனங்களில் சிலவற்றின் கருப்பொருள், “கடைசி நாட்களில் நடக்கப்போகின்றவை” (தானியேல் 2:28:[19] வசனம் 29ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்) என்று சற்றுத் தெளிவில்லாமல் விவரிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் தானியேல் 10:14; “ கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்கு சம்பவிக்கப்போகின்றவை”;[20] ஏனோக்கு i.1, 2; x.2முதல் ஒப்பிடவும். அதே போல். வெளிப்படுத்துதல் 1:1 (தானியேல் 2:28 முதல் செப்டுவாஜிண்ட் மொழிப்பெயர்ப்பை ஒப்பிடவும்), “சிறிது காலத்தில் நடக்க வேண்டியவைகளின்… வெளிப்படுத்துதல்”

கடந்த கால வரலாறு அடிக்கடி தரிசனத்தில் சேர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக இது முன்னறிவிப்பிற்கு ஒரு சரியான வரலாற்று பின்னணியை அளிப்பதற்கு செய்யப்படுகிறதென்று கூறப்படுகிறது. ஏனென்றால், அடுத்தடுத்து வரும் சம்பவங்கள் அறிந்தவை அறியாதவை என்று அவ்வளவு புலப்படாமலேயே மாறி மாறி வருகின்றன. ஆகவே, தானியேலின் பதினொன்றாம் அதிகாரத்தில், அலெக்சாந்தரின் ஆக்கிரமிப்பு துவங்கி ஆண்டியோக்கஸ் எபிஃபேனஸுடைய (3-39ம் வசனங்கள் அனைத்தும் ஒரு முன்னறிவிப்பாகவே வழங்கப்படுகின்றன) கடைசி கால ஆட்சி வரையிலும் கிழக்கிலுள்ள கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் விரிவான வரலாறு, தங்குதடையின்று தொடர்ந்து, இதுவரை நடைபெறாத ஆனால் ஆசிரியரால் எதிர்பார்க்கப்பட்ட சம்பவங்கள் தெள்ளத்தெளிவாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன (40-45 வசனங்கள்): அண்டியோக்கஸின் இறப்பில் முடிய வேண்டிய யுத்தங்கள் மற்றும் அவருடைய இராஜ்ஜியம் வீழ்ச்சியடைய வேண்டியது. தற்போதைய பண்டிதர்கள் இந்த புத்தகம் சுமார் கிறிஸ்து சகாப்தம் 167 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருக்குமென்று கணக்கிடுகின்றனர். இது பன்னிரண்டாம் அதிகாரத்தின் இறுதித் தீர்ப்பு முன்னறிவிப்புகளுக்கு ஒரு அறிமுகவுரையாக விளங்குகின்றன.

அதே போன்று, 2 எஸ்ட்ராஸ் 11 மற்றும் 12ல் கூறப்பட்டிருக்கும் கனவில், ரோம சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கும் கழுகை தொடர்ந்து உறுதியளிக்கும் மீட்பாளராக சிங்கம் தோன்றுகிறது. இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களை விடுதலை செய்து ஒரு நித்திய ராஜ்ஜியத்தை உருவாக்கப்போகின்றவராவார். வரலாற்றிலிருந்து முன்னறிவிப்புக்கான மாற்றம் xii.28ல் காணப்படுகிறது. அங்கு டொமிஷியனின் ஆட்சியின் முடிவும் - அதனுடனான உலகத்தின் முடிவு முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. அதே போன்ற மற்றொரு உதாரணம் சிபிளைன்ஸ் iii.608-623ல் காணப்படுகிறது. அசம்ப்ஷியோ மோசிஸ் vii-ixஐயும் ஒப்பிட்டு பார்க்கவும். வெளிப்படுத்தல்கள் என்று வகையறுக்கப்படும் கிட்டத்திட்ட அனைத்து எழுத்துகளிலும் இறுதித் தீர்ப்பு ஓங்கி நிற்கின்றது. எல்லாவற்றையும் விட வரப்போகின்ற யுகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றியதான ஊகங்கள் வெளிப்படுத்தின இலக்கியத்தின் எழுச்சியிலும் வளர்ச்சியிலும் வெகுவாக தாக்கம் ஏற்படுத்தியது.

உவமானங்கள்

ஆல்ப்ரெக்ட் ட்யூர்ருடைய வுட்கட், த ஃபோர் ஹார்ஸ்மென் ஆஃப் த அப்போகாலிப்ஸ்
வெளிப்படுத்தல் என்ற எக்காள

கருப்பொருளிலும் எழுத்து நடையிலும் காணப்படும் ஒரு மறைபொருள், வெளிப்படுத்தின எழுத்துகளில் சிறப்பம்சமாக விளங்குகிறது. கனவுகள் மற்றும் தரிசனங்களின் இலக்கியத்திற்கு அதன் சொந்த பாரம்பரிய மூலங்கள் உள்ளது. இது யூத (அல்லது யூத-கிறித்தவ) வெளிப்படுத்தின எழுத்துக்களில் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வெளிப்படுத்தலின் தன்மை பிரம்மாண்டமான உவமைகளைப் பயன்படுத்துவதில் மிகவும் தெளிவாகத் தோன்றுகிறது. இதன் மிகப்பெரிய சான்று பல தரிசனங்களில் சித்தரிக்கப்படுகின்ற விசித்திரமான, உயிர்வாழும் ஜந்துக்களாகும் - வெளிப்படுத்தல் 4ம்[21] அதிகாரத்தில் “மிருகங்கள்” அல்லது “ஜீவன்கள்” என்றெழுதப்பட்டிருக்கின்றது. இதில் மிகவும் பளிச்சென்றும் அவ்வப்போது விகாரமாகவும் தோன்றும் வண்ணம் மனிதர்கள், பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன அல்லது முற்றிலும் கற்பனைக்குரிய ஜீவன்களின் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவ்வித சிறப்பம்சம் பின்வரும் வசனங்களில் அப்படிப்பட்ட ஜீவன்கள் அறிமுகப்படுத்தப்படுவதை பட்டியலிடுகின்றன: தானியேல் 7:1-8, 8:3-12 (வெளிப்படுத்தல் இலக்கியத்தின் வரலாற்றில் இவ்விரண்டு பகுதிகளும் மிகப்பெரிய முக்கிய பங்கு வகிக்கின்றன); ஏனோக்கு lxxxv.-xc.; 2 எஸ்ட்ராஸ் 11:1-12:3; பாருக்கின் கிரேக்க வெளி. ii, iii; எபிரேய ஏற்பாடு, நப்தலியின் iii.; வெளிப்படுத்தல் 6:6 முதல் ([சீரிய] பாருக்கின் வெளிப்படுத்தல் li.11ஐ ஒப்பிடவும்), ix.7-10, 17-19, xiii.1-18, xvii.3, 12; எர்மாவின் மேய்ப்பர்கள், “தரிசனம்”, iv.1 எபிரேய வேதாகமத்தில் தோன்றும் சில புராண அல்லது பகுதி-புராண ஜீவன்களும் இவ்வகை புத்தகங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வழியில் பழைய ஏற்பாட்டில்[22][23][24][25] குறிப்பிடப்பட்டிருக்கும் “லிவியாதான்” , மற்றும் அதே பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் “பெஹிமோத்”[26] மற்றும் (ஏனோக்கு, lx.7, 8; 2; 2 எஸ்ட் ராஸ் 6:49-52; பாருக்கின் வெளிப்படுத்தல் xxix.4); “கோகு மற்றும் மாகோகு” (சிபிளைன்ஸ், iii.319முதல், 512முதல்; ஏனோக்கு, lvi.5முதல்; வெளிப்படுத்தல் 20:8 ஒப்பிடவும்). வெளிநாட்டு புராணங்களிலிருந்தும் சில இறக்குமதி நடந்திருக்கிறது (கீழே பார்க்கவும் ).

மறைபொருள் அடையாளங்கள்

வெளிப்படுத்தின வசனங்களில் மறைபொருள் அடையாளங்கள் அடிக்கடி கையாளப்படுகின்றன. இந்த அம்சம் எழுத்தாளரின் அர்த்தத்தை மறைக்க அல்லது அதன் அர்த்தத்தைக் கூட்ட கெமாட்ரியா என்ற யுக்தி கையாளப்பட்ட இடங்களில் மேலோங்கி நிற்கிறது. ஏனென்றால் பல பண்டையக் கால இலக்கியங்கள் எழுத்துக்களை எண்களாகவும் பயன்படுத்தின (அதாவது , ‘ரோம எண்களை’ பயன்படுத்திய ரோமரைப் போல). இதன் விளைவு தான் இரகசியத்தன்மையுள்ள பெயர் “டாக்ஸோ ”, “அசம்ப்ஷியோ மோசிஸ் ”, ix. 1; “மிருகத்தின் இலக்கான ” 666, வெளிப்படுத்தல் 13:18;[27] 888 என்ற இலக்கம் ('Iησōῦς), சிபிளைன்ஸ் , i.326-330.

இதையொட்டின மற்றொரு கருத்து, முன்னறிவிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைவேறவேண்டிய கால அவகாசம் ஆகும். இதன் வழியில், “ஒரு காலமும், காலங்களும் அரைகாலமும்” தானியேல் 12:7ல்[28] காணப்படுகிறது. டிஸ்பென்சேஷனலிஸ்ட்ஸ் இதை பொதுவாக 3½ வருட காலமென்று ஒத்துக்கொண்டுள்ளனர்; ஏனோக்கு, xc.5, “அசம்ப்ஷியோ மோசிஸ் ”, x.11ல் காணப்படும் “ஐம்பத்தெட்டு காலங்கள் ”; “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மீட்பாளர் வருமட்டும் ஏழு வாரம் செல்லும் ” என்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான “வாரங்கள்” அல்லது நாட்கள் சென்றபின் சம்பவம் துவங்குமென்று தானியேல் 9:24,25 கூறுகிறது.[29] பிரமாணம்/அன்றாடபலி நீக்கப்பட்டு 1290 நாட்கள் செல்லுமென்ற குறிப்பு (தானியேல் 12:11),[30] 12; ஏனோக்கு xciii.3-10; 2 எஸ்ட் ராஸ் 14:11, 12; பாருக்கின் வெளிப்படுத்தல் xxvi-xxviii; வெளிப்படுத்தல் 11:3, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளையுடையவர்களாக “இரண்டு சாட்சிகளை ” குறிப்பிடுகிறது,[31] 12:6;[32] அசம்ப்ஷியோ மோசிஸ் vii.1ஐ ஒப்பிடவும். மனிதர்கள், பொருட்கள் அல்லது சம்பவங்களைக் குறிக்கவும் அடையாள மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது; ஆகவே தானியேல் 7 மற்றும் 8ன் “விலங்கு போன்ற மனிதர்கள்”;[33] வெளிப்படுத்தல் 17[34] மற்றும் அதற்கு பின்வருவன; 2 எஸ்ட்ராஸ் மற்றும் அதை தொடர்ந்து வருவனவற்றின் “தலைகள்’ மற்றும் “செட்டைகள்”; வெளிப்படுத்தல் 6ன் ஏழு முத்திரைகள்;[35] வெளிப்படுத்தல் 8ன் எக்காளங்கள்;[36] வெளிப்படுத்தல் 16ன் “தேவனுடைய கோபகலசங்கள்” அல்லது நியாயத்தீர்ப்பின் “கிண்ணம்...”;[37] வெளிப்படுத்தல் 12:3-17 வரை காணப்படும் பெரிய வலுசர்ப்பம்;[38] வெளிப்படுத்தல் 20:1-3;[39] அசம்ப்ஷியோ மோசிஸ் x.8ல் காணப்படும் கழுகு; என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தானியேல் அதிகாரங்கள் 7 மற்றும் 8; மற்றும் 2 எஸ்ட்ராஸ் 11 மற்றும் 12ம் அதிகாரங்களில் காணப்படுபவைகளையல்லாமல், இன்னும் விளாவாரியான தீர்க்கதரிசனங்களும் உவமைகளும் குறிப்பிடப்பட முடியும்: ஏனோக்கு lxxxv மற்றும் அதன் தொடர்ச்சியில் காணப்படும் எருதுகள் மற்றும் செம்மறியாடுகளின் தரிசனம்; பாருக்கின் வெளிப்படுத்தல் xxxvi மற்றும் அதன் தொடர்ச்சியில் காணப்படும் காடு, திராட்சைச் செடி, நீரூற்று மற்றும் கேதுரு; அதே புத்தகத்தின் liii மற்றும் அதன் தொடர்ச்சியில் காணப்படும் பிராகசமும் கருமையுமான தண்ணீர்கள்; எர்மாக்கள், “சிமிலிட்யுடின்ஸ்”, viiiல் காணப்படும் வில்லோ மற்றும் அதன் கிளைகள்.

ரஷ்ஷியன் ஆர்தொடாக்ஸ் ஐகான் அப்போகாலிப்ஸ்

உலகத்தின் முடிவு

யோவானின் வெளிப்படுத்தலான, வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் அவர் மீட்பராக இயேசு கிறிஸ்து “வெளிப்படுத்தப்படுவது” அல்லது “திரையகற்றப்படுவதை” குறிக்கிறார். இப் பதம், பொதுவாக உலகத்தின் முடிவு என்று குறிப்பிடலானது.

பழைய ஏற்பாட்டின் புத்தகங்களில் இந்த யுகத்தின் முடிவு எளிமையாக சித்தரிக்கப்பட்டிருந்தது. துன்மார்க்கர் நியாயத்தீர்ப்படைதல், மற்றும் கடவுளுக்கு முன்பாக நேர்மையானவர்களாக நிறுத்தப்பட்டவர்கள் மரித்துயிர்த்தெழுந்து மகிமைப்படுதல் ஆகியவற்றை குறித்தன. யோபின் புத்தகத்திலும், சில துதிப்பாடல்களிலும், மரித்தவர்கள் பாதாளத்தில், கடைசி நியாயத்தீர்ப்புக்கு காத்திருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளனர். துன்மார்க்கர் பிற்பாடு வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டிருக்கிற ஜெஹின்னம்மின் அக்னி அல்லது அக்னிக் கடலில் நித்திய வேதனைக்குள்ளாகப்படுவார்கள்.[37][40][41][42][43]

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய புதிய ஏற்பாட்டு நிருபங்கள் துன்மார்க்கரின் நியாயத்தீர்ப்பு மற்றும் கிறிஸ்து அல்லது மீட்பரை மகிமைப்படுத்தப்படும் இந்தக் கருப்பொருளை மேலும் விவரிக்கின்றன. கொரிந்தியர் மற்றும் தெசலோனிக்கேயருக்கு அவர் எழுதிய நிருபங்கள் நீதிமான்களின் கடைநிலையை மேலும் விவரிக்கின்றன. கிறிஸ்துவைச் சார்ந்து (அல்லது மீட்பர்) இருப்பவர்கள் ஒரே நேரத்தில் மரித்துயிர்த்தெழுந்து எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறித்து அவர் பேசுகிறார்.

யூத மதத்திலிருந்து பிரிந்து கிறித்தவம் முதலாம் நூற்றாண்டில் உலகமுழுவதும் பரவும் போது அதில் நீதிமான்களை மேன்மைபடுத்துவது என்பது , ஒரு ஆயிர வருட எதிர்பார்ப்பிருந்தது. கவித்துவமும் தீர்க்கதரிசன இலக்கியமும் நிறைந்த எபிரேய விவிலியம், அதிலும் குறிப்பாக ஏசாயா புத்தகம், ஆயிர வருட வாழ்க்கையைக் குறித்து அதிகமாக பேசின. பெந்தெகோஸ்திற்கு பின்பான புதிய ஏற்பாட்டு சபை இந்த கருப்பொருளை தொடர்ந்து மேற்கொண்டது. பத்மூ தீவில் ரோமர்களால் சிறையிலடைக்கப்பட்ட போது, வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதி, யோவான் அவர் கண்ட தரிசனங்களை விளக்கினார். வெளிப்படுத்தலின் 20 ஆவது அதிகாரம் இந்த பூமியில் கிறிஸ்து/ மீட்பரின் ஆயிர வருட அரசாட்சியைக் குறித்து வெகுவாகக் கூறுகின்றது.

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் நவீன கிறித்தவ இயக்கங்கள் இந்த ஆயிர வருட அரசாட்சியை முக்கியப்படுத்தின. கிறித்தவ வெளிப்படுத்தல் முடிவு கால இலக்கியம் வேதாகமம் முழுவதும் குறிப்பிடப்படும் அதே இரண்டு கருப்பொருட்களாகிய “இந்த உலகம் ”, மற்றும் “வரப்போகும் உலகம் ” ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இருந்தது. இந்த உலகத்தின் முடிவில் நன்மை மற்றும் தீமைக்கும் இடையேயான ஒரு பெரிய யுத்தம், அதைத் தொடர்ந்து ஆயிர வருட அரசாட்சி, மற்றும் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்படைந்து, நீதிமான்கள் மகிழ்ச்சிப் பெறும் ஒரு இறுதி போராட்டம் மற்றும் நித்தியத்தின் துவக்கம் என்ற விவிலிய தீர்க்கதரிசனத்தை பிரசித்தப்படுத்துவதில் சுவிசேஷகர்கள் வெகுவாக முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

பெரும்பாலான சுவிசேஷகர்கள் டிஸ்பென்சேஷனலிஸம் என்ற ஒருவகை மில்லியனிசம் கற்பிக்கப்பட்டவர்களாவர். இது 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. டிஸ்பென்சேஷனலிஸம் கிறித்தவ சபைக்கும் இஸ்ரேலுக்கும் வெவ்வேறு விதிகளைக் காண்கிறது. ப்ரீ டிரைபுலேஷன் ராப்சர் ஆஃப் தி சர்ச் என்ற அதன் கொள்கை மிகவும் பிரசித்தமாகியுள்ளது. கைவிடப்பட்டவர்கள் புத்தகங்கள் மற்றும் படங்களில் இதுவே மையக்கருத்தாகும். டிஸ்பென்ஷனலிஸ்ட் வியாக்கியானங்கள் விவிலிய தீர்க்கதரிசனத்தில் வருங்கால சம்பவங்களின் முன்னறிவிப்புகளை காண்கின்றன: சபையின் வெவ்வேறு காலங்கள், உதாரணத்திற்கு, ஏழு சபைக்கு எழுதப்பட்ட நிருபங்களில் காண்பிக்கப்பட்டுள்ளவையைப் போல்; பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் மற்றும் அவருடைய மகிமை; பூமியில் நடைபெறும் குறிப்பிட்ட நியாயத்தீர்ப்புகள்; இறுதியில் புறஜாதிகளின் சக்தியின் ஒரு வகை; பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களின் அடிப்பையில் கடவுள் மறுபடியும் இஸ்ரவேல்[44] தேசத்துடன் ஈடுபடுவது; பகிரங்க இரண்டாம் வருகை; மேசியாவின் ஆயிர வருட அரசாட்சி; சாத்தானை அவிழ்த்துவிட்டு மனுகுலத்தின் பாவ சுபாவத்தை தகுந்த நிலைகளில் கடைசியாக சோதித்தல், இதில் பரலோகத்திலிருந்து நியாயத்தீர்ப்பின் அக்கினி புறப்பட்டு வருதல்; மகா வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு, தற்போதைய வானங்களும் பூமியும் அழிதல், “புதிய வானமும், புதிய பூமியும்[45][46][47] மறுபடியும் சிருஷ்டிக்கப்படுதல். இதுமுதல் நித்தியம் ஆரம்பித்தல். உபத்திரவத்திற்கு பின்பாக எடுத்துக்கொள்ளப்படுவதில் ஒரு வித்தியாசமான வியாக்கியானம் காணப்படுகிறது.

1766 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் முதலில் இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்ட அப்போகாலிப்ஸ் ரிவீல்ட் என்ற வெளிப்படுத்தின விசேஷத்தின் அர்த்தத்தைப் பற்றி மிகவும் முழுமையான ஒரு விளக்க உரையை இம்மானுயல் ஸ்வீடன்போர்க் எழுதினார். ஹென்றி எம். மோரிஸ் எழுதிய “த ரெவெலேஷன் ரிகார்ட்” என்ற புத்தகம் எழுத்துப்படி வியாக்கியானம் செய்த தற்போதைய ஒரு புத்தகமாகும்.[48]

மேலும் பார்க்க

  • 2500 நாள் தீர்க்கதரிசனம்
  • பாழாக்கும் அருவருப்பு
  • டஜ்ஜல், இஸ்லாமிய அந்திகிறிஸ்து நபர்
  • டிரீம் டிக்ஷனரி
  • கோகும் மாகோகும்
  • கலியுகம், இந்து கொள்கை
  • கல்கி, இந்து தீர்க்கதரிசி
  • இஸ்லாமிய முடிவு காலயியல்
  • இஸ்லாமிய முடிவு காலயியலில் ஒரு நபர், மாஹ்தி
  • மனுகுல அழிவு
  • ஏழு வாரங்களின் தீர்க்கதரிசனம்
  • கையாமா, இஸ்லாமிய கொள்கை
  • ரக்னராக்
  • எருசலேமின் முற்றிகை (70)
  • கிறித்தவ முடிவு காலயியலில் வித்தியாசங்களின் சாராம்சம்
  • மரணம்

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

  • அப்போகாலிப்ஸ் நௌ
  • சில்ட்ரன் ஆஃப் மென்
  • ரெவலேஷன்ஸ்
  • மெடலோகாலிப்ஸ்
  • Resident Evil: Apocalypse
  • சௌத்லாண்ட் டேல்ஸ்
  • ரெவலூஷனரி கேல் யுட்டினா
  • அப்போகாலிப்ஸ் நாட்
  • நியான் ஜெனிஸிஸ் இவாஞ்சலியான் (அசைப்படம்)
  • 2012
  • அப்போகாலிப்ஸ் ரெவலேஷன்

இலக்கியம்

  • அப்போகாலிப்ஸ் நெர்ட்
  • த எண்ட் இஸ் நை
  • இங்கிலிஷ் அப்போகாலிப்ஸ் மான்யுஸ்கிரிப்ட்ஸ்
  • ஜஸ்ட் எ கப்புல் ஆஃப் டேஸ்
  • குட் ஓமன்ஸ்
  • X/1999
  • த ரோ, கார்மக் மெக்கார்த்தி

இசை

  • அப்ஸொலூஷன்
  • "சப்பர்ஸ் ரெடி"
  • F♯A♯∞

குறிப்புதவிகள்

 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Apocalypse". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

பகுப்பு:அப்போகாலிப்டிசிஸம்பகுப்பு:எஸ்கடாலஜிபகுப்பு:கிரேக்கத்திலிருந்து பெறப்பெற்ற வார்த்தைகள்பகுப்பு:புராணத்தில் யுத்தம்பகுப்பு:கிறித்தவ இலக்கியநடைகள்பகுப்பு:கிறித்தவ பதங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திருவெளிப்பாடு&oldid=3583007" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்