திருவள்ளூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (Thiruvallur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 1வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இந்த தொகுதியில் முன்னர் 1951 முதல் 1962 வரை மூன்று தேர்தல்கள் நடைபெற்றது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1951-1957
2009-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்19,20,372[1]
சட்டமன்றத் தொகுதிகள்1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்

தொகுதி மறுசீரமைப்பு

சிறீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி(இப்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. கும்மிடிப்பூண்டி
  2. பொன்னேரி (தனி)
  3. திருவள்ளூர்
  4. பூந்தமல்லி (தனி)
  5. ஆவடி
  6. மாதவரம்

வென்றவர்கள்

ஆண்டுவென்ற வேட்பாளர்கட்சிஇரண்டாம் இடம்கட்சி
1951மரகதம் சந்திரசேகர்இதேகாபி. நடேசன்இதேகா
1957ஆர்.கோவிந்தராஜுலு நாயுடுஇதேகாஏ. ராகவா ரெட்டிசுயேட்சை
1962வி. கோவிந்தசாமி நாயுடுஇதேகாஎம். கோபால்திமுக
2009பொ. வேணுகோபால்அதிமுகஎஸ். கயாத்திரிதிமுக
2014பொ. வேணுகோபால்அதிமுகது. இரவிக்குமார்விசிக
2019கே. ஜெயக்குமார்[2]இதேகாபொ. வேணுகோபால்அதிமுக
2024சசிகாந்த் செந்தில்இதேகாபொன். வி. பாலகணபதிபாஜக

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்ஆண்கள்பெண்கள்மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம்ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 20148,52,2758,49,57726217,02,1142014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 20199,49,6849,70,34734119,20,3722019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல்வாக்குப்பதிவு சதவீதம்முந்தைய தேர்தலுடன் ஒப்பீடுஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 200970.57%-[4]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 201473.73%3.16%[3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

இதேகா வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: திருவள்ளூர்[5]
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
காங்கிரசுசசிகாந்த் செந்தில்796956
பா.ஜ.கபாலகணபதி224801
அஇஅதிமுககு. நல்லத்தம்பி223904
நோட்டாநோட்டா18978
வாக்கு வித்தியாசம்572155
பதிவான வாக்குகள்1430738
காங்கிரசு கைப்பற்றியதுமாற்றம்

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் டாக்டர் கே. ஜெயக்குமார், அதிமுக வேட்பாளரான, பொ. வேணுகோபாலை, 3,56,955 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர்சின்னம்கட்சிதபால் வாக்குகள்பெற்ற மொத்த வாக்குகள்வாக்கு சதவீதம் (%)
கே. ஜெயக்குமார் இந்திய தேசிய காங்கிரசு3,1997,67,29254.49%
பொ. வேணுகோபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்1,0634,10,33729.14%
எம். லோகரெங்கன் மக்கள் நீதி மய்யம்17673,7315.24%
எம். வெற்றிசெல்வி நாம் தமிழர் கட்சி16265,4164.65%
பொன். ராஜா அமமுக7533,9442.41%
நோட்டா--10018,2751.3%

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் பொன். வேணுகோபால் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கட்சிகூட்டணிவாக்குகள்
டாக்டர். பொ. வேணுகோபால்அதிமுகஅதிமுக6,28,499
து. இரவிக்குமார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிமுக3,05,069
வி. யுவராஜ்தேமுதிகபாசக2,04,734
கே. ஜெயக்குமார்காங்கிரசுகாங்கிரசு43,960

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

14 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் பி. வேணுகோபால் திமுகவின் காயத்திரியை 31,673 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர்கட்சிபெற்ற வாக்குகள்
பொ. வேணுகோபால்அதிமுக3,68,294
காயத்திரிதிமுக3,36,621
சுரேஷ்தேமுதிக1,10,452
பி. ஆனந்தன்பகுஜன் சமாஜ் கட்சி10,746

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்