திருச்சானூர் பத்மாவதி கோயில்

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

திருச்சானூர் பத்மாவதி கோயில் (Padmavathi Temple) அல்லது அலர்மேல் மங்கை கோயில் (Padmavathi Temple)[1][2] என்பது மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடாசலபதியின் துணைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பத்மாவதி தாயார் எனும் அலர்மேல் மங்கை ஆவார். இக்கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதிக்கு அருகே 4 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சானூரில் உள்ளது.[3] இக்கோயில் நிர்வாகம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது. இக்கோயிலின் கட்டிடம், திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இக்கோயிலில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடக் கல்வெட்டுகள் உள்ளது. இக்கோயிலின் புண்ணிய தீர்த்த குளத்திற்கு பத்மாவதி தீர்த்தக் குளம் என்பர். இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள் பத்மாவதி தீர்த்தப் பிரம்மோற்சவம்[4] மற்றும் வரலட்சுமி விரதம் ஆகும்.

பத்மாவதி கோயில், திருச்சானூர், திருப்பதி
பத்மாவதி கோயில் கோபுரம், திருச்சானூர், திருப்பதி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:சித்தூர்
அமைவு:திருச்சானூர், திருப்பதி
ஏற்றம்:157.23 m (516 அடி)
ஆள்கூறுகள்:13°36′28.1″N 79°27′00.4″E / 13.607806°N 79.450111°E / 13.607806; 79.450111[1]
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:சமஸ்கிருதம் மற்றும் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடக் கல்வெட்டுகள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இணையதளம்:http://www.tirumala.org/ tirumala.org
பத்மாவதி கோயிலின் பத்ம தீர்த்தக் குளம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்