திருகு வெட்டுப் புதிர்

திருகு வெட்டுப் புதிர் அல்லது ஜிக்சா புதிர் (jigsaw puzzle) என்பது ஒழுங்கற்ற துண்டுகளை பொருத்தமான இடத்தில் சேர்க்கும் ஒரு புதிராகும். ஒவ்வொரு துண்டிலும் ஒரு பெரிய படத்தின் சிறு பகுதி இருக்கும்; இவற்றின் அனைத்து வில்லைகளையும் முழுமையாக கோர்த்து முழு படத்தையும் உருவாக்கும்போது புதிர் முடிவடைகிறது. சில சந்தர்ப்பங்களில், இதைவிட கூடுதலாக மேம்பட்ட வகைப் புதிர்களாக கோளவகைப் புதிர் மற்றும் ஒளியியற் கண்மாயம் காட்டும் புதிர்கள் போன்றவை சந்தைக்கு வருகின்றன.

ஜிக்சா புதிரை விளையாடுபவர்

திருகு வெட்டுப் புதிர்களானது துவக்கத்தில் சிறிய மரத்துண்டுகளை வெட்டி, அவற்றை ஒன்று சேர்த்து ஒரு செவ்வக வடிவப் பலகை ஓவியமாக உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டன.  திருகு வெட்டுப் புதிருக்கான துண்டுகளை ஒடுங்கு இழைவாளைக் (fretsaw) கொண்டு வெட்டப்பட்டன. இதனாலேயே இதற்கு  ’ஜிக்சா’ என்ற பெயர் உருவானது.  1760 இல் இலண்டனைச் சேர்ந்த நிலப்படவரை கலைஞரும், செதுக்குப் பணியாளருமான ஜான் ஸ்பில்ஸ்பரி என்பவர் வரைபடத்தை வைத்து வணிகரீதியாக திருகு வெட்டுப் புதிரை உருவாக்கினார்.[1] முதலில் மரத்தால் செய்யப்பட்ட புதிர்கள்பிற்காலத்தில் அட்டைகளில் வடிவமைக்கப்பட்டன.

திருகு வெட்டுப் புதிர்களில் பொதுவாக இயற்கைக் காட்சிகள், கட்டிடங்கள், மலைகள், கோட்டைகள் போன்ற படங்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், எந்தவிதமான படமும் இந்தப் புதிரை உருவாக்க பயன்படுத்தலாம்; சில நிறுவனங்கள் தனிப்பட்ட ஒளிப்பட்களைக் கொண்டு புதிர்களை உருவாக்குகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்