திரிபுக் கொள்கை விசாரணை

திரிபுக் கொள்கை விசாரணை (Inquisition) என்பது கத்தோலிக்க திருச்சபையின் சட்ட அமைப்பின் ஒருபிரிவு ஆகும்.[1][2] இதன் நோக்கம் கிறிஸ்தவத்திற்கு கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்பட்ட இரகசிய யூதர்கள் மற்றும் இரகசிய கிறிஸ்தவர்கள், தங்களின் முந்தைய யூத, இசுலாமிய சமய வழிபாடுகளை மறைமுகமாக பின்பற்றும் திரிபுக் கொள்கையாளர்களை எதிர்ப்பதுடன், அவர்களை விசாரணை செய்து உரிய தண்டணை வழகுவதும் ஆகும்.

திரிபுக் கொள்கை விசாரணை நீதிமன்றத்தின்முன் கலீலியோ கலிலி

இந்த விசாரணை 12ஆம் நூற்றாண்டில் பிரான்சில் கிறித்தவ பிரிவினையாளர்களுக்கெதிராக, குறிப்பாக இரகசிய யூதர்கள், இரகசிய கிறிஸ்தவர்கள் மற்றும் கிறித்துவத்திற்கு எதிரானர்களை விசாரணை நடத்தி தண்டிக்க துவங்கப்பட்டது. இது 14-ஆம் நூற்றாண்டுவரை நடப்பில் இருந்தது. 1250கள் முதல் இது தொமினிக்கன் சபையோடு தொடர்புடையதாயிற்று. 14ஆம் நூற்றாண்டில் நைட் டெம்பிளர் மற்றும் பெகுயின்ஸ் ஆகியோர் இவ்வமைப்பால் விசாரிக்கப்பட்டனர் என்பது குறிக்கத்தக்கது.

மத்தியக்காலத்தின் முடிவில் சீர்திருத்த இயக்கமும் கத்தோலிக்க மறுமலர்ச்சியும் தோன்றியபோது இதன் அவசியமும் தேவையும் மாறியது. இது அவ்வமையம் பிற ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவிலும், அமெரிக்காக்களிலும் நிறுவப்பட்டது.[3]

இவ்வமைப்பு 18ஆம் நூற்றாண்டுவரை நடப்பில் இருந்ததென்றாலும், திருத்தந்தை நாடுகளுக்கு வெளியே நெப்போலியப் போர்களுக்குப் பின் இல்லமல் போயிற்று. 1904இல் இவ்வமைப்பின் பெயர் நம்பிக்கை கோட்பாடுகளுக்கான ஆணைக்குழு (Congregation for the Doctrine of the Faith) என பெயர் மாற்றப்பட்டது.

இவ்வமைப்பால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவர்கள் அவர்களின் நாட்டு அரசர்களால் சித்தரவதை, உரிமை மறுப்புகள், பொருளாதார தடைகள், மரண தண்டனை என்று பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டார்கள். இந்த நடவைக்கைகளால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மத்திய காலத்தில் ஐரோப்பாவின் இரண்ட காலத்துக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்