தியாகராசர் பல்தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பாநகர்

தியாகராசர் பல்தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பாநகர் (Thiagarajar Polytechnic College, Alagappanagar) என்பது கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிறுவனம் ஆகும். சிறந்த கல்வியாளர் மற்றும் பரோபகாரர் அழகப்பச் செட்டியாரால் தொடங்கப்பட்டது இக்கல்லூரி. இவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளார். இது 1956-ல் இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவால் அனுமதியளிக்கப்பட்டு இந்தியாவின் முதல் உதவி பெறும் பல்தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் இப்போது திருச்சூர் மறைமாவட்டத்தின் புரவலர் திட்டத்தின் கீழ் உள்ளது.[1] இது கேரள அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது.[2]

தியாகராசர் பல்தொழில்நுட்பக் கல்லூரி
Thiagarajar Polytechnic College
முந்தைய பெயர்
அழகப்பாநகர் பல்தொழிநுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைவேலை என்பது வழிபாடு
வகைநிதியுதவி நிறுவனம்
உருவாக்கம்1956
நிறுவுனர்ராம. அழகப்பச் செட்டியார்
சார்புஅகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
Academic affiliation
தொழில்நுட்பக் கல்வித் துறை, கேரளா
முதல்வர்அன்னா டெர்ஜி. ஜே
மாணவர்கள்630
அமைவிடம்
அம்பாளூர், திரிச்சூர்
, ,
கேரளா
,
India
இணையதளம்http://www.thiagarajarpolytechnic.org

கல்லூரியின் வரலாறு

கல்லூரி நுழைவு வாயில்

தியாகராசர் பல்தொழில்நுட்பக் கல்லூரி 1956-ல் 30 மாணவர்களுடன் குடிமைப் பொறியியல் பட்டயப் படிப்புடன் தொடங்கப்பட்டது. 1961-ல் கே. தியாகராஜன் செட்டியார் இந்நிறுவனப் பொறுப்பினை ஏற்று கே. மேனன் என்பவரை முதல்வராக நியமித்தார். இவரைத் தொடர்ந்து 1971-ல் என். பாவேந்திரநாதன் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1980-81ஆம் ஆண்டில் இந்நிறுவனம் திருச்சூர் மறைமாவட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது. முதல்வராக ரு. பிரான்சிசு சி ஜோசபும் நிர்வாகத் தலைவராக அருட்தந்தை ஜோசப் காக்கச்சேரியும் பொறுப்பேற்றனர். எம். டி. தேவயானி 1996-1999ல் முதல்வராக இருந்தார். அரசு குழுத்தலைவராக அருட்தந்தை லாரன்ஸ் ஒல்லங்கல் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் முதல்வராக கே. கே. சகாதேவன் பொறுப்பேற்றார். 2004 முதல் அன்னா டெர்ஜி முதல்வராகப் பொறுப்பேற்றார். 2016-ல் இக்கல்லூரியின் 60 ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனை ஈ. சிறீதரன் துவக்கிவைத்தார்.[3]

படிப்புகள்

முழு நேர படிப்புகள் (காலம் 3 ஆண்டுகள்)

  • இயந்திரப் பொறியியல்
  • மின்பொறியியல்
  • பொதுப் பொறியியல்

குறுகிய கால படிப்புகள் (காலம் 6 மாதங்கள்)

  • கணினி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்