தியன்வென்-1

தியன்வென்-1 (Tianwen-1; TW-1) என்பது செவ்வாய்க் கோளிற்கு தானியங்கி விண்கலம் ஒன்றை அனுப்பும் சீன தேசிய விண்வெளி நிறுவனத்தின் ஒரு திட்டம் ஆகும். இவ்விண்கலத்தில் சுற்றுக்கலன், ஒளிப்படக் கருவி, தரையிறங்கி, சுரோங் செவ்வாய்த் தரையுளவி ஆகியன அடங்கியுள்ளன. மொத்தமாக 5 தொன் எடையுள்ள இந்த விண்கலம் 13 அறிவியல் கருவிகளை எடுத்துச் சென்றது. செவ்வாய்க்குச் செலுத்தப்பட்ட அதிகூடிய எடையுள்ள விண்கலம் இதுவாகும்.

தியன்வென்-1
Tianwen-1
2019 இல் தியன்வெ-1 சோதிக்கப்படுகிறது. மேல் வெள்ளிப் பகுதியில் தரையிறங்கியும், சுரோங் தரையுளவும் உள்ளன, கீழ்ப் பகுதியில் சுற்றுக்கலன்.
திட்ட வகைசுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுளவியக் கொண்ட கோளியல்
இயக்குபவர்சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA)
காஸ்பார் குறியீடு2020-049A
சாட்காட் இல.45935
திட்டக் காலம்1443 நாள்-கள், 21 மணிநேரம்-கள், 37 நிமிடம்-கள் (ஏவப்பட்ட காலம் முதல்)
சுற்றுக்கலன்: 2 புவி ஆண்டுகள் (திட்டம்)
1241 நாள்-கள், 14 மணிநேரம்-கள், 26 நிமிடம்-கள் (சுற்றுப்பாதையில் இணைந்தது முதல்)
தரையுளவி: 90 sols (திட்டம்)[1]
விண்கலத்தின் பண்புகள்
விண்கல வகைசுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுளவி, TW-1 பயன்படுத்தப்படக்கூடிய ஒளிப்படக் கருவி (TDC)
தயாரிப்புசீன தேசிய விண்வெளி நிர்வாகம்
ஏவல் திணிவுமொத்தம்: 5,000 kg (11,000 lb)
சுற்றுக்கலன்: 3,175 kg (7,000 lb)
தரையுளவி:240 kg (530 lb)
பரிமாணங்கள்தரையுளவி: 2.6 மீ × 3 மீ × 1.85 மீ
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்23 சூலை 2020, 04:41:15 ஒசநே [2]
ஏவுகலன்லாங் மார்ச் 5
ஏவலிடம்வென்சாங், LC-101
ஒப்பந்தக்காரர்சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
செவ்வாய் சுற்றுக்கலன்
விண்கலப் பகுதிசுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்10 பெப்ரவரி 2021, 11:52 ஒசநே [3][4]
செவ்வாய் தரையிறங்கி
விண்கலப் பகுதிதரையிறங்கி
தரையிறங்கிய நாள்14 மே 2021, 23:18 ஒசநே [5][6][7]
தரையிறங்கிய பகுதிஉட்டோப்பியா பிளனீத்தியா [8]
25°06′N 109°54′E / 25.1°N 109.9°E / 25.1; 109.9 [9]
செவ்வாய் தேட்ட ஊர்தி
விண்கலப் பகுதிதரையுளவி
தரையிறங்கிய நாள்22 மே 2021 (திட்டம்) [10]
தரையிறங்கிய இடம்உட்டோப்பியா பிளனீத்தியா[8]

இவ்விண்கலம் 2020 சூலை 23 இல் வென்சாங் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக[11] லாங் மார்ச் 5 என்ற மீகன செலுத்தூர்தியில் ஏவப்பட்டது. 7 மாதங்களின் பின்னர் இது 2021 பெப்ரவரி 10 இல் செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்தது.[4][12] அடுத்த மூன்று மாதங்களுக்கு இவ்விண்கலம் தரையிறங்குவதற்குப் பொருத்தமான இடத்தை ஆராய்ந்தது. அதன் பின்னர் 2021 மே 14 அன்று தரையிறங்கி/தரையுளவி ஆகியன அடங்கிய மேற்பகுதி தரையிறங்கும் கட்டம் ஆரம்பமானது. செவ்வாயின் வளிமண்டல நுழைவை மேற்கொண்டு, அதைத் தொடர்ந்து வான்குடையின் கீழ் மெதுவாகத் தரையிறங்க ஆரம்பித்தது. தரையிறங்கி செவ்வாய்க் கோளில் பின்நோக்கிய உந்துகை மூலம் மென்மையான தரையிறங்கலை வெற்றிகரமாக நிறைவு செய்தது. வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, தரையிறங்கிய நேரம் 2021 மே 14, 23:18 (ஒசநே) ஆகும்.[6][7][13] சிறிது நேரத்தின் பின்னர், சீன தேசிய விண்வெளி நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியது.[5][13][14][15]

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தியன்வென்-1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தியன்வென்-1&oldid=3993377" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்