தர்மேந்திர யாதவ்

இந்திய அரசியல்வாதி

தர்மேந்திர யாதவ் (Dharmendra Yadav)(பிறப்பு 3 பிப்ரவரி 1979) என்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக படவுன் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1][2]

தர்மேந்திர யாதவ்
धर्मेन्द्र यादव
மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009–2019
முன்னையவர்சலீம் இக்பால் செர்வாணி
பின்னவர்சங்கமித்ராமவுரியா
தொகுதிபதாவுன்
பதவியில்
2004–2009
முன்னையவர்முலாயம் சிங் யாதவ்
பின்னவர்முலாயம் சிங் யாதவ்
தொகுதிமைன்புரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 பெப்ரவரி 1979 (1979-02-03) (அகவை 45)
சைபை, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்
நீலம் யாதவ் (தி. 2010)
உறவுகள்முலாயம் சிங் யாதவ் (மாமா)
சிவ்பால் சிங் யாதவ் (மாமா)
அகிலேஷ் யாதவ் (மைத்துனர்)
அபிசேக் யாதவ் (மைத்துனர்)
தேஜ் பிரதாப் சிங் யாதவ் (மைத்துனர்)
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்www.samajwadiparty.in

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தர்மேந்திர யாதவ் 3 பிப்ரவரி 1979 அன்று இட்டாவாவில் உள்ள சைபாயில் அபய் ராம் யாதவ் மற்றும் ஜெய் தேவிக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை அபய் ராம் யாதவ் முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர் மற்றும் சிவ்பால் சிங் யாதவின் மூத்த சகோதரர் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தர்மேந்திராவின் உறவினர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டம் மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

குடும்பம்

தர்மேந்திர யாதவ் 12 பிப்ரவரி 2010 அன்று நீலம் யாதவை மணந்தார்.[1][3] இவருக்கு ஒரு சகோதரன் (அனுராக் யாதவ்) மற்றும் இரண்டு சகோதரிகள் (சந்தியா யாதவ் மற்றும் சீலா யாதவ்) உள்ளனர். சீலாவின் மகன் ராகுல் யாதவ், சாது யாதவின் மகளான மருத்துவர் இசா யாதவை மணந்தார்.[4] இவரது சகோதரர் அனுராக் யாதவ் 2017 உபி சட்டமன்றத் தேர்தலில் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.[5]

அரசியல் வாழ்க்கை

யாதவ் 2004 இல் 14வது மக்களவைக்கு மைன்புரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ல் 15வது மக்களவைக்கும், 201-இல் 16வது மக்களவைக்கும் பவுடனிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளின் நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.[1] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் படவுன் தொகுதியில் சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சூன் 2022-ல் அசம்கர் இடைத்தேர்தலில் இவர் சுமார் 8,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

வகித்த பதவிகள்

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 3 முறை தர்மேந்திர யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6]

#முதல்வரைபதவிகட்சி
1.2004200914வது நாடாளுமன்ற உறுப்பினர்மைன்புரி (இடைத்தேர்தல்) எம்.பி (1வது முறை)சமாஜ்வாதி கட்சி
2.20092014பவுடன், 15வது மக்களவை உறுப்பினர் (2வது முறை).சமாஜ்வாதி கட்சி
3.2014201916வது மக்களவை பவுடன் உறுப்பினர்(3வது முறை)சமாஜ்வாதி கட்சி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தர்மேந்திர_யாதவ்&oldid=3920532" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்