தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance, TNA) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இது இலங்கைத் தமிழ் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இக்கூட்டணி மிதவாதத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னாள் போராளி இயக்கங்கள் சிலவும் இணைந்து 2001 அக்டோபரில் அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி ஆரம்பத்தில் இலங்கைத் தீவின் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற ஒரு தன்னாட்சி மாநிலத்தில் சுயநிர்ணயத்தை ஆதரித்தது. இலங்கையில் உள்நாட்டுப் போரைத் தீர்க்க ஆயுதப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை அது ஆதரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளாக பெரும்பான்மையினரின் மத்தியில் கருதப்பட்டாலும், அதன் தலைமை ஒருபோதும் தாம் புலிகளை ஆதரிக்கவில்லை எனவும், அரசாங்கத்தைப் போலவே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்து வந்தது.[1][2][3][4][5]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தலைவர்இரா. சம்பந்தன் (இதக)
செயலாளர்மாவை சேனாதிராஜா (இதக)
பிரதிச் செயலர்(கள்)செல்வம் அடைக்கலநாதன் (டெலோ)
பேச்சாளர்ம. ஆ. சுமந்திரன் (இதக)
தொடக்கம்அக்டோபர் 20, 2001 (2001-10-20)
தலைமையகம்6, 1வது ஒழுங்கை, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை
கொள்கைதமிழ்த் தேசியம்
நாடாளுமன்றம்
10 / 225
மாகாண சபைகள்
41 / 455
உள்ளாட்சி சபைகள்
288 / 4,462
இணையதளம்
tnainfo.com
இலங்கை அரசியல்

2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூடமைப்பு தனியரசுக்கான கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய சுயாட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் ஏராளமான தாக்குதல்களுக்கு உள்ளாகினர், அதன் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் அரசு ஆதரவுக் குழுக்களால் கொல்லப்பட்டனர்.[6][7][8]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.[9] இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 33 உள்ளூராட்சி சபைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் உள்ளார். இவர் செப்டம்பர் 2015 முதல் 2018 திசம்பர் வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.[10][11]

வரலாறு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001 அக்டோபரில் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு பொதுக் குடையின் கீழ் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டது.[12] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (அ.இ.த.கா), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈபிஆர்எல்எஃப்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) ஆகிய கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.[13] இக்கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாததால், 2001 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மொத்தாம் 348,164 வாக்குகள் (3.89%) பெற்று நாடாளுமன்றத்தில் 225 இல் 15 இடங்களைக் கைப்பற்றியது.[14]

த.தே.கூ உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்தது. புலிகளின் "விடுதலைப் போராட்டத்தை" அங்கீகரித்து, அவர்களே இலங்கைத் தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என அறிவித்தது.[15] இது அக்கூட்டமைப்புக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியது. வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால், 2004 தேர்தலில் தமது சின்னத்தைப் பயன்படுத்த அனந்தசங்கரி நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றார்.[16] இதனால், கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை மீளக் கொண்டு வந்தார்கள்.[17] 2004 தேர்தலில், கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, 633,654 வாக்குகளைப் (6.84%) பெற்று 22 இடங்களைக் கைப்பற்றியது.[18]

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களிலும், 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் அரசு-சார்பு தமவிபு துணை இராணுவக் குழுவின் அச்சுறுத்தலினால் கூட்டமைப்பு போட்டியிடவில்லை.[19][20][21][22]

2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்தது.[23] 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் இறுதிப் போரில் ஆயுதப் படைகளினால் கொல்லப்பட்டனர்.[24][25][26] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குரல் கொடுத்து வந்தது.[27][28][29]

2010 அரசுத்தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு பொது எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரித்தது.[30] 2010 மார்ச்சில், கூட்டமைப்பு தனிநாடு என்ற தனது கோரிக்கையைக் கைவிட்டு, வடக்கு, கிழக்கு மாகானங்களின் இணைப்புடனான கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது.[31][32] 2010 மார்ச்சில், தமிழ்க் காங்கிரஸ் தன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினர்.[33][34] 2010 நாடாளுமன்ரத் தேர்தலில் கூட்டமைப்பு 233,190 வாக்குகளைப் (2.90%) பெற்று 14 இடங்களை மட்டும் கைப்பற்றியது.[35]

2013 மாகாணசபைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் கூட்டமைப்பு 80% வாக்குகளைப் பெற்று, 38 இடங்களில் 30 இடங்களை எடுத்து வட மாகாண சபையைக் கைப்பற்றியது.[36][37][38] கூட்டமைப்பின் க. வி. விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் முதலாவது முடஹ்லமைச்சரானார்.[39][40][41]

2015 அரசுத்தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு பொது எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது.[42][43] தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றார். ஆனாலும், அவரது அரசில் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை.[44][45][46]

2015 மார்ச்சில், கிழக்கு மாகாண சபையில் முசுலிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.[47][48][49] இரண்டு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.[50][51]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு 515,963 வாக்குகளைப் (4.62%) பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது.[52][53] ஆர். சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.[54][55]

கூட்டமைப்பில் உள்ள கட்சிகள்

2020 நிலவரப்படி பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:

  1. இலங்கைத் தமிழரசுக் கட்சி
  2. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
  3. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

தேர்தல் வரலாறு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள்
ஆண்டுவாக்குகள்வாக்கு %வென்ற இடங்கள்+/–
2001348,1643.89%
15 / 225
15
2004633,6546.84%
22 / 225
7
2010233,1902.90%
14 / 225
8
2015515,9634.62%
16 / 225
2
2020327,1682.82%
10 / 225
6

நாடாளுமன்றத் தேர்தல்கள்

2001 நாடாளுமன்றத் தேர்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதற் தடவையாக 5 டிசம்பர் 2001 தேர்தலில் போட்டியிட்டது. இரா. சம்பந்தன் தலைமையில் 3.88% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது.

தேர்தல் மாவட்டங்கள் வாரியாக ததேகூ வென்ற வாக்குகளும், இடங்களும்:

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள்%இடங்கள்செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ உறுப்பினர்கள்
அம்பாறை48,78917.41%182.51%அரியநாயகம் சந்திரநேரு (தவிகூ)
மட்டக்களப்பு86,28448.17%368.20%ஜி. கிருஷ்ணபிள்ளை (தகா)
யோசப் பரராஜசிங்கம் (தவிகூ)
தம்பிராஜா தங்கவடிவேல் (டெலோ)
கொழும்பு12,6961.20%076.31%
யாழ்ப்பாணம்102,32454.84%631.14%வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ)
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தகா)
நடராஜா ரவிராஜ் (தவிகூ)
மாவை சேனாதிராஜா (தவிகூ)
எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ)
அ. விநாயகமூர்த்தி (தகா)
திருகோணமலை56,12134.83%179.88%இரா. சம்பந்தன் (தவிகூ)
வன்னி41,95044.39%346.77%செல்வம் அடைக்கலநாதன் (டெலோ)
சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)
இராசா குகனேசுவரன் (டெலோ)
தேசியப் பட்டியல்1மு. சிவசிதம்பரம் (தவிகூ), 2002 சூன் 5 இல் காலமானார்.
இவருக்குப் பதிலாக க. துரைரத்தினசிங்கம் (தவிகூ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.)
மொத்தம்348,1643.88%1576.03%
மூலம்:"Parliamentary General Election 2001, Final District Results". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.

2004 நாடாளுமன்றத் தேர்தல்

2004 ஏப்ரல் 2 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6.84% வாக்குகளைப் பெற்று, 22 இடங்களைக் கைப்பற்றியது.

ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்
தேர்தல்
மாவட்டம்
வாக்குகள்%இடங்கள்செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ நாஉ
அம்பாறை55,53319.13%181.42%க. பத்மநாதன், இறப்பு 21 மே 2009
தோமஸ் தங்கதுரை வில்லியம், 12 சூன் 2009 இலிருந்து
மட்டக்களப்பு161,01166.71%483.58%சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி
த. கனகசபை
தங்கேஸ்வரி கதிராமன்
கிங்க்ஸ்லி ராசநாயகம், ஏப்ரல் 2004 இல் பதவி துறப்பு
பா. அரியநேத்திரன், 18 மே 2004 இலிருந்து
யாழ்ப்பாணம்257,32090.60%847.38%செல்வராஜா கஜேந்திரன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா)
சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்)
நடராஜா ரவிராஜ் (இதக), 10 நவம்பர் 2006 இல் படுகொலை
மாவை சேனாதிராஜா (இதக)
எம். கே. சிவாஜிலிங்கம் (ரெலோ)
கி. சிவநேசன், 6 மார்ச் 2008 இல் படுகொலை
பத்மினி சிதம்பரநாதன்
நல்லதம்பி சிறீகாந்தா (ரெலோ), 30 நவம்பர் 2006 இலிருந்து
சொலமன் சிரில், 9 ஏப்ரல் 2008 இலிருந்து
திருகோணமலை68,95537.72%285.44%இரா. சம்பந்தன் (இதக)
க. துரைரத்தினசிங்கம் (இதக)
வன்னி90,83564.71%566.64%செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)
சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)
சதாசிவம் கனகரத்தினம்
சிவநாதன் கிசோர்
வினோ நோகராதலிங்கம் (ரெலோ)
தேசியப் பட்டியல்2எம். கே. ஈழவேந்தன், நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காததால் 14 டிசம்பர் 2007 இல் வெளியேற்றப்பட்டார்
ஜோசப் பரராஜசிங்கம் (இதக), 24 டிசம்பர் 2005 இல் படுகொலை
சந்திர நேரு சந்திரகாந்தன், 27 செப்டம்பர் 2006 முதல்
ரசீன் முகம்மது இமாம், 5 பெப்ரவரி 2008 முதல்)
மொத்தம்633,6546.84%2275.96%
Source:"Parliamentary General Election 2004, Final District Results". Department of Elections, Sri Lanka.

2010 நாடாளுமன்றத் தேர்தல்

2010 ஏப்ரல் 8 இல் இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2.9% வாக்குகளைப் பெற்று, 14 இடங்களைக் கைப்பற்றியது.

ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள்%இடங்கள்செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ நாஉ
அம்பாறை26,89510.47%164.74%பி. பியசேன
மட்டக்களப்பு66,23536.67%358.56%பா. அரியநேத்திரன்
பொன். செல்வராசா
சீ. யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்65,11943.85%523.33%சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்)
ஈ. சரவணபவன்
மாவை சேனாதிராஜா (இதக)
சி. சிறீதரன்
அ. விநாயகமூர்த்தி
திருகோணமலை33,26823.81%162.20%இரா. சம்பந்தன் (இதக)
வன்னி41,67338.96%343.89%செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)
சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)
வினோ நோகராதலிங்கம் (ரெலோ)
தேசியப் பட்டியல்1எம். ஏ. சுமந்திரன்
மொத்தம்233,1902.90%1461.26%
Source:"Parliamentary General Election – 2010". Department of Elections, Sri Lanka.

2015 நாடாளுமன்றத் தேர்தல்

2015 ஆகத்து 17 இல் இடம்பெற்ற தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4.62% வாக்குகளைப் பெற்று, இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 16 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது. முக்கிய கட்சிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[56][57][58][59]

ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள்%இடங்கள்செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ நாஉ
அம்பாறை45,42113.92%173.99%கவீந்திரன் கோடீசுவரன்
மட்டக்களப்பு127,18553,25%369.11%ஞானமுத்து சிறிநேசன்
சதாசிவம் வியாழேந்திரன்
சீனித்தம்பி யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்207,57769.12%561.56%சிவஞானம் சிறீதரன்
மாவை சேனாதிராஜா
ம. ஆ. சுமந்திரன்
த. சித்தார்த்தன்
ஈ. சரவணபவன்
திருகோணமலை45,89425.44%174.34%இரா. சம்பந்தன் (இதக)
வன்னி89,88654.55%471.89%சார்ல்ஸ் நிர்மலநாதன்
செல்வம் அடைக்கலநாதன்
சிவசக்தி ஆனந்தன்
சி. சிவமோகன்
தேசியப் பட்டியல்2க. துரைரத்தினசிங்கம்
சாந்தி சிறீஸ்கந்தராசா
மொத்தம்515,9634.62%1674.23%
Source:"Parliamentary General Election – 2015". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.

மாகாணசபைத் தேர்தல்கள்

2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை. 2013 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல்

2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 37 இடங்களில் 11 இடங்களைக் கைப்பற்றியது.[60]

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள்%இடங்கள்செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ மாகாணசபை உறுப்பினர்கள்
அம்பாறை44,74916.28%266.10%இராஜேசுவரன் முருகேசு, தவராசா கலையரசன்
மட்டக்களப்பு104,68250.83%664.29%ராசையா துரைரத்தினம், கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கோவிந்தன் கருணாகரம், மார்க்கண்டு நடராசா, இந்திரகுமார் நித்தியானந்தம், ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை
திருகோணமலை44,39629.08%366.83%சிங்காரவேலு தண்டாயுதபாணி, குமாரசாமி நாகேசுவரன், ஜெகதீசன் ஜெனார்த்தனன்
தேசியப் பட்டியல்0
மொத்தம்193,82730.59%1161.26%

2013 வடக்கு மாகாணசபைத் தேர்தல்

2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று 1வது வட மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது.[61]

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள்%இடங்கள்செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ மாகாணசபை உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம்213,90784.37%1464.15%க. வி. விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இம்மானுவேல் ஆனல்ட், சி. வி. கே. சிவஞானம், பா. கஜதீபன், எம். கே. சிவாஜிலிங்கம், பொ. ஐங்கரநேசன், ச. சுகிர்தன், கே. சயந்தன், விந்தன் கனகரத்தினம், அரியகுட்டி பரஞ்சோதி, ஆ. க. சர்வேஸ்வரன், வே. சிவயோகன்
கிளிநொச்சி37,07981.57%373.17%பசுபதி அரியரத்தினம், தம்பிராசா குருகுலராசா, சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை
மன்னார்33,11862.22%374.22%பிரிமூஸ் சிராய்வா, பாலசுப்பிரமணியம் டெனிஸ், ஜி. குணசீலன்
வவுனியா41,22566.10%472.28%ப. சத்தியலிங்கம், க. தா. லிங்கநாதன், ம. தியாகராஜா, ஆர். இந்திரராசா
முல்லைத்தீவு28,26678.56%470.56%அன்டனி ஜெயநாதன், சிவப்பிரகாசம் சிவயோகன், துரைராஜா ரவிகரன், கனகசுந்தரம்சுவாமி வீரவாகு
கூடுதல் இடங்கள்2அஸ்மின் அயூப் (மன்னார்), மேரி கமலா குணசீலன் (முல்லைத்தீவு)
மொத்தம்353,59578.48%3067.52%

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்