டேவிட் ஜூலியஸ்

அமெரிக்க உடலியங்கியல் நிபுணர்

டேவிட் ஜூலியசு (David Julius, பிறப்பு: நவம்பர் 4, 1955) அமெரிக்க உடலியங்கியல் நிபுணர் ஆவார். வலி உணர்தலில் மூலக்கூற்று உயிரியல் செயல்பாடு தொடர்பான ஆய்வுகளுக்காக நன்கு அறியப்படுகிறார். சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராக உள்ளார். உயிரி அறிவியல் மற்றும் மருத்துவத்தில் 2010ஆம் ஆண்டிற்கான ஷா பரிசு மற்றும் உயிரி அறிவியலில் 2020ஆம் ஆண்டிற்கான திருப்புமுனை பரிசுகளை இவர் வென்றுள்ளார்.[2][3] 2021-ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் ஆர்டெம் பட்டபூத்தியான் என்ற அமெரிக்கருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.[4] வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளை கண்டறிந்ததற்கான, நோபல் பரிசு இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மாறுபாடு, தொடுதல் ஆகியவை மனித நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அவை அனுப்பும் கடத்து சமிக்ஞைகள் பற்றிய இவர்களது ஆய்வு நாள்பட்ட வலி தொடர்பான நோய்களை குணமாக்கும் சிகிச்சையில் பயன்படும் என நோபல் குழு அறிவித்தது.

டேவிட் ஜூலியசு
பிறப்புநவம்பர் 4, 1955 (1955-11-04) (அகவை 68)
பிரிங்டன் கடற்கரை, புரூக்ளின், நியூயார்க்
தேசியம்அமெரிக்கர்
துறைஉடலியங்கியல்
உயிர்வேதியியல்
நரம்பியல்
பணியிடங்கள்கொலம்பியா பலகலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் பிரான்சிசுகோ
கல்வி கற்ற இடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
கலிபோரினியா பல்கலைக்கழகம், பெர்க்கிலி
ஆய்வு நெறியாளர்ஜெர்மி தோமர்
ரேன்டி சேக்மன்
Other academic advisorsரிச்சார்ட் ஆக்செல்[1]
அலெக்சாண்டர் ரிச்
விருதுகள்நோபல் பரிசு 2021
துணைவர்ஹோலி இன்ங்ராஹம்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

ஜூலியசு, புரூக்ளின் பிரைட்டன் கடற்கரையில் பிறந்தார். இவர் ரஷ்ய யூத வம்சாவளியைச் சேர்ந்தவர்.[5] ஜூலியசு 1977-ல் மாசாசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் முனைவர் பட்டத்தினை பெர்க்கிலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜெர்மி தோர்னர் மற்றும் ரேன்டி சேக்மன் ஆய்வு மேற்பார்வையில், 1984ஆம் ஆண்டில் முடித்தார். இந்த ஆய்வின் போது இவர், புரோபுரோட்டின் கன்வெர்டேசு எனப்படும் பிறபுரதங்களைத் தூண்டக்கூடிய நொதிகளைக் கண்டுபிடித்தார். 1989ஆம் ஆண்டில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ரிச்சார்ட் ஆக்செலுடன் முனைவர் பட்ட பிந்தைய ஆய்வினை முடித்தார். இந்த ஆய்வின் போது, இவர் செரொட்டோனின் 1 சி ஏற்பியினை நகலாக்கம் செய்து அதன் தன்மைகளை வகைப்படுத்தினார்.[6]

ஆராய்ச்சி வாழ்க்கை

1997ஆம் ஆண்டில், ஜூலியசு ஆய்வகத்தில் டிஆர்பிவி1 ஏற்பியினை நகலாக்கம் செய்து அதன் தன்மைகளை வகைப்படுத்தினார். இந்த வாங்கி கேப்சைசின், மிளகாயில் காணப்படும் வேதிப்பொருளை ஏற்பி அவற்றின் காரத்தன்மையினை உணர வழிவகுக்கின்றது.[7] மேலும் டிஆர்பிவி1 புரத வகைகளுள் ஒன்றாக, இது தீமைத் தரக்கூடிய வெப்பத்தினை கண்டறிகிறது (வெப்ப உணர்தல்).[7][8] கட்டமைப்பு ரீதியாக டிஆர்பி நேர்மின் அயனி வினைவழியுடன் தொடர்புடையது. டிஆர்பிவி1 ஏற்பி இல்லாத விலங்குகள் (மரபணு ஒதுக்கல் விலங்குகள்) தீங்கு விளைவிக்கும் காரம் மற்றும் கேப்சைசினை உணரும் திறனை இழக்கின்றன.[9]

ஜூலியசு, டிஆர்எம்8 (சிஎம்ஆர்1) மற்றும் டிஆர்பிஏ1 ஆகிய இரண்டு (டிஆர்பி மீவகை) ஏற்பிகளை நகலாக்கம் செய்து பண்புகளை வகைப்படுத்தினார். டிஆர்பிஎம்8 மெந்தால் மற்றும் குளிரான வெப்பநிலையைக் கண்டறியும் தன்மையுடையது என நிரூபித்தனர்.[10][11] மேலும் டிஆர்பிஏ1 வினைப்பாதைகளை கடுகு எண்ணெய்யில் (அல்லில் ஐசோதியோசயனேட்) கண்டறிந்தார்.[12] இந்த அவதானிப்புகள் டிஆர்பி வினை வழிப்பாதைகள் வெப்பநிலை மற்றும் வேதிப்பொருட்களின் வரம்பைக் கண்டறியும் என்று பரிந்துரைத்தன. டேவிட் ஜூலியசின் ஆய்வகம் இந்த வழிப்பாதைகளை மாற்றியமைக்கும் நச்சுகளைக் கண்டுபிடித்ததன் மூலம் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை உயிரணு வாங்கிகள் உணரும் அறிவியலுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்குவகித்தார்.[13] பல்வேறு உயிரினங்களில் இந்த உணர் ஏற்பி பாதையின் தனித்துவமான தழுவல்களை விவரித்தனர்.[14] பல்வேறு வினைப்பாதைகளில் தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி காட்சி மூலம் பல்வேறு வினை வழிப்பாதைகளுக்கு தீர்வினை கண்டார்.[15][16]

விருதுகள்

2000ஆம் ஆண்டில், ஜூலியசு கேப்சைசின் ஏற்பியினை நகலாக்கம் செய்ததற்காக பெர்ல்-யுஎன்சி நரம்பியல் அறிவியல் பரிசு துவக்க விருதினை பெற்றார். 2010ஆம் ஆண்டில், நோசிசெப்சனின் பல்வேறு அம்சங்களில் ஈடுபட்டுள்ள அயனி வழிப்பாதைகளை அடையாளம் கண்டதற்காக ஷா பரிசை வென்றார். வலி மற்றும் வெப்ப உணர்வின் மூலக்கூறு அடிப்படையைக் கண்டறிந்ததற்காக 2014-ல் ஜான்சன் அண்டு ஜான்சன் அவர்களால் மருத்துவர் பால் ஜான்சன் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான விருது வழங்கப்பட்டது. 2017-ல், இவர் கைர்ட்னர் அறக்கட்டளை பன்னாட்டு விருது மற்றும் எச்எப்எஸ்பி நாகசோன் விருதை வென்றார்.[17] மேலும், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான இளவரசர் பரிசு (2010), உயிர் அறிவியலில் திருப்புமுனை பரிசு (2020),[18] நரம்பியலில் காவ்லி பரிசு (2020)(ஆர்டெம் ஆர்டெம் பட்டபூத்தியான் கூட்டாக)[19] மற்றும் 2020 பிபிவிஏ அறக்கட்டளை முன்னோடி அறிவு விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[20]

2021ஆம் ஆண்டில் வெப்பம் மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக ஆர்டெம் பட்டபூத்தியானுடன் இணைந்து உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[21]

மேற்கோள்கள்

 

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டேவிட்_ஜூலியஸ்&oldid=3780072" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்