டிராப்சன் மாகாணம்

துருக்கியில் உள்ள மாகாணம்

டிராப்சன் மாகாணம் (Trabzon Province, துருக்கியம்: Trabzon ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும். இது கருங்கடல் கடற்கரையில் உள்ளது. இது இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளது. டிராப்சன் அனத்தோலியாவின் பழமையான வணிக துறைமுக நகரங்களில் ஒன்றாகும். இதன் அண்டை மாகாணங்களாக மேற்கில் கீரேசன் மாகாணமும், தென் மேற்கில் கோமஹேன் மாகாணமும், தென்கிழக்கில் பேபர்ட் மாகாணமும், கிழக்கே ரைஸ் மாகாணமும் உள்ளன. மாகாணத்தின் முக்கிய இனக்குழுவினர் துருக்கிய மக்களாவர். ஆனால் மாகாணத்தில் சிறுபான்மை போந்திக்கு கிரேக்க மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளனர். [2] இளம் தலைமுறையினர் இம்மொழியை சரளமாக பேசுபவர்களாக இல்லை. இஸ்மாயில் உஸ்தோக்லு 2018 அக்டோபரில் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். [3]

டிராப்சன் மாகாணம்
Trabzon ili
துருக்கியில் டிராப்சன் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் டிராப்சன் மாகாணத்தின் அமைவிடம்
Countryதுருக்கி
மண்டலம்கிழக்கு கருங்கடல்
துணை மண்டலம்டிராப்சன்
அரசு
 • தேர்தல் மாவட்டம்டிராப்சன்
 • ஆளுநர்இஸ்மாயில் உஸ்தோக்லு
பரப்பளவு
 • மொத்தம்6,685 km2 (2,581 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்8,07,903
 • அடர்த்தி120/km2 (310/sq mi)
Area code0462
வாகனப் பதிவு61

மாகாணத்தின் தலைநகரமாக டிராப்சோன் நகரம் உள்ளது .

மாவட்டங்கள்

டிராப்சன் மாகாணம் 18 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

114 கி.மீ கடற்கரையோரத்தில் உள்ள மாவட்டங்கள் (மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி): பெசிக்டா, வக்ஃபேக்பீர், அரபாஸ், அகபாத், யோம்ரா, அர்சின், அராக்லே, சர்மேன் மற்றும் ஆஃப். [4] உள்நாட்டு மாவட்டங்கள்: டோன்யா, டாஸ்கி, ஆல்பாசாரி, மாஸ்கா, கோப்ராபாக், டெர்னெக்பசாரே, ஹெய்ரத் மற்றும் சாய்காரா.

1988 ஆம் ஆண்டில் பெசிக்டாசா மற்றும் ஆல்பாஸாரி போன்றவை மாவட்ட அந்தஸ்தைப் பெற்றன, 1990 ஆம் ஆண்டில் சர்பா, டாஸ்கி, கோப்ராபாக், டெர்னெக்பசாரே மற்றும் ஹெய்ரத் போன்றவை மாவட்ட அந்தஸ்தைப் பெற்றன.

வரலாறு

மாஸ்காவிற்கு அருகிலுள்ள போன்டிக் மலைகளில் உள்ள சமேலா மடாலயம்
மாஸ்கா மாவட்டத்தின் லிவேரா கிராமத்தில் ஒரு பாரம்பரிய கிராமப்புற போன்டிக் வீடு
சாய்காராவில் உள்ள உசுங்கல் கிராமம் மற்றும் ஏரி
சாயகரில் மற்றொரு கிராமம்
சாயகராவில் ஒரு பாரம்பரிய வீடு

இதன் வரலாறு முழுவதும் குறிப்பிடத்தக்க வகையில் கவர்ச்சிகரமான பகுதியாக இருந்துள்ளது. ட்ராப்சன் நகரானது மேற்கத்திய பயணிகளின் நூற்றுக்கணக்கான பயண இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் "கிழக்கின் கதை நகரம்" என்று குறிப்பிட்டுள்ளனர். துருக்கியின் சினோப்பைச் சேர்ந்த கிரேக்க குடியேற்றவாசிகளால் இதன் தலைநகரான டிராப்சன் ட்ரெபஸஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டது. கிமு 9 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி, ஒமர், எரோடோடசு, எசியோடு போன்ற வரலாற்றாசிரியர்களால் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. டிராப்சனைப் பற்றிய முதல் எழுதப்பட்ட சான்று செனபோன் எழுதிய அனபாஸிஸ் ஆகும்.

இது ஒரு முக்கியமான ரோமானிய மற்றும் பைசந்திய மையம் ஆகும். இது 1204 முதல் 1461 வரை ட்ரெபிசாண்ட் பேரரசின் தலைநகராக இருந்தது. டிராப்சன் பின்னர் உதுமானியப் பேரரசின் ஒரு பகுதியாக இரண்டாம் மெகமுதிவால் ஆக்கபட்டது. 1461 ஆம் ஆண்டில் இப்பகுதி கைப்பற்றப்பட்ட பின்னர், ஃபாத்தி மதராசா (1462), ஹதுனியே மதராசா (1515), ஸ்கெண்டர் பாஷா மதராசா (1529) மற்றும் ஹம்சா பாஷா மதராசா (1543) ஆகிய முக்கியமான மதராசா (சமயக் கல்வி மையங்களாக நிறுவப்பட்டன; அவற்றில் சில கல்லி வளாகங்களுக்குள்) அக்காலத்தில் நிறுவப்பட்டன. [5] இது துவக்கத்தில் ஐலேட் என்ற நிலையை எட்டுவதற்கு முன்பு சஞ்சாக் நிலையில் இருந்தது. இறுதியாக 1868 இல் ஒரு விலேட்டாக மாற்றப்பட்டது.

முதலாம் உலகப் போரின் காகசஸ் போர்த் தொடரின்போது உதுமானிய மற்றும் உருசிய படைகளுக்கு இடையிலான பெரும் சண்டைகளின் இடமாக இந்த மாகாணம் இருந்தது. இதன் விளைவாக ஏப்ரல் 1916 இல் கிராண்ட் டியூக் நிக்கோலஸ் மற்றும் நிகோலாய் யூடெனிச் ஆகியோரின் தலைமையில் உருசிய இராணுவத்தால் டிராப்சன் நகரம் கைப்பற்றப்பட்டது. முதலாம் உலகப் போரிலிருந்து உருசியா பிரெஸ்ட்-லிட்டோவ்ஸ்க் உடன்படிக்கையால் வெளியேறியதைத் தொடர்ந்து 1918 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்த மாகாணம் துருக்கியின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் வந்தது.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டிராப்சன்_மாகாணம்&oldid=3057647" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்