டிம் குக்

டிம் குக் (Timothy Donald Cook)(பிறப்பு 1 நவம்பர் 1960) என்பவர் அமெரிக்கத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் பொறியாளர் ஆவார். இவர் 2011 ஆகத்து 24 முதல் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் பதவி விலகலுக்குப் பின் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.[1]1998 மார்ச்சில் இவர் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடக்கத்தில் உலகளாவிய விற்பனைக்கான துணைத் தலைவர் என்ற பதவியில் இருந்தார்.

டிம் குக்

வாழ்க்கைக் குறிப்புகள்

அமெரிக்காவில், அலபாமா மாநிலத்தில், மொபயில் என்ற ஊரில் டிம் குக் பிறந்தார். இவருடைய தந்தை டோனால்ட் கப்பல் கட்டுமிடத்தில் ஊழியராகப் பணி புரிந்தார். தாயார் ஒரு மருந்தகத்தில் பணி செய்தார்.[2]இவர் பள்ளிப் படிப்பை முடித்து 1982-ல் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் தொழில் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் டியூக் பல்கலைக்கழகப் பள்ளியில் 1988-ல் மேலாண்மையில் முது நிலைப் பட்டம் பெற்றார்.[3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டிம்_குக்&oldid=3797911" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்