டிம்பிள் கபாடியா

இந்திய நடிகை

டிம்பிள் சுன்னிபாய் கபாடியா (ஜூன் 8, 1957 அன்று பிறந்தவர்) இந்திய திரைப்படத் துறையின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராவார். தன்னுடைய ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கையில் பாபி மற்றும் சாகர் போன்ற வர்த்தகத் திரைப்படங்களில் நடித்திருந்தார், ஆனால் பின்னர் ருடாலி மற்றும் லேகின் போன்ற மாற்றுத் திரைப்படங்களில் தீவிரமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தார்.[1][1]

டிம்பிள் கபாடியா

இயற் பெயர்டிம்பிள் சுன்னிபாய் கபாடியா
பிறப்புசூன் 8, 1957 (1957-06-08) (அகவை 67)
தொழில்நடிகை
நடிப்புக் காலம்1973; 1984–இன்றுவரை
துணைவர்ராஜேஷ் கன்னா (1973-1984) (விவாகரத்து)

வாழ்க்கை

ஆரம்பகால வாழ்க்கை

கபாடியா குஜராத்திய தொழிலதிபரான சுன்னிபாய் கபாடியா மற்றும் பெட்டியின் மூத்த மகளாவார்.[2]

தொழில் வாழ்க்கை

அவர் ராஜ் கபூர் அவர்களால் தன்னுடைய 1973 ஆம் ஆண்டுத் திரைப்படமான பாபி யில் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த நேரத்தில் கபாடியா பதினாறு வயதே நிரம்பியிருந்தார். அவர் நடிகர் ராஜேஷ் கன்னாவை 16 வது வயதில் திருமணம் செய்துகொண்டார், பாபி திரைப்படம் வெற்றியடைந்தபோதிலும் தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக அவர் திரைப்படத்துறையை விட்டு விலகினார்.[3]

விவாகரத்திற்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டில் சாகர் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். இதில் அவர் மீண்டும் தன்னுடைய பாபி திரைப்பட இணை நடிகரான ரிஷி கபூர் உடன் தோன்றினார். சாகர் திரைப்படத்தில் கபாடியா சிறிது நேரம் மேலாடையற்ற காட்சியில் தோன்றினார். அந்த நேரத்தில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.[4] அதன் பிறகு அவர் துணிச்சலான பல கதாபாத்திரங்களைச் செய்தார். ஜான்பாஸ்ஸில் அனில் கபூர் உடனான அவருடைய பாலியல் காட்சி மிகத் துணிச்சலானது என்று இப்போதும் கருதப்படுகிறது.

1980 ஆம் ஆண்டுகள் மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முழுவதும் அவர் பல திரைப்படங்களில் தோன்றினார். 1993 ஆம் ஆண்டின் ருடாலி யில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்குச் சிறந்த நடிகைக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றார். 2001 ஆம் ஆண்டில் தில் சாஹ்தா ஹை திரைப்படத்தில் ஒரு குடிகாரியாக அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் ரிஷி கபூருடன் பியார் மேய்ன் டிவிஸ்ட் எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்தார். இது அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படத்திற்கு இருபது வருடங்களுக்குப் பிறகு மற்றும் தங்களுடைய முதல் படம் முடிந்து முப்பத்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகானது. 2006 ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய முதல் ஆங்கில-மொழித் திரைப்படமான பீயிங் சைரஸ் இல் நடித்தார். டிம்பிள் தற்போது பண்பட்ட கதாபாத்திரங்களையே தேர்வு செய்கிறார். "லக் பை சான்ஸ்" இல் அடாவடியான தாயாக என்றும் நினைவில் நிற்கும் நகைச்சுவை கதாபாத்திரம் உட்பட அம்மா அல்லது பாட்டி கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

சொந்த வாழ்க்கை

அவர் நடிகர் ராஜேஷ் கண்ணாவை, தன்னுடைய முதல் திரைப்படம் பாபி வெளிவருவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே, 1973 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய இரு மகள்கள் டிவிங்கிள் கண்ணா மற்றும் ரிங்கி கண்ணா ஆகியோரை வளர்ப்பதற்காக அவர் தன்னுடைய நடிப்புத் தொழிலை விட்டு பன்னிரண்டு ஆண்டுகள் விலகி இருந்தார்.

1984 ஆம் ஆண்டில் அவர் கண்ணாவை விவாகரத்து செய்துவிட்டு நடிப்புத் துறைக்கு மீண்டும் திரும்பினார். அவருடைய மகள்களும் நடிகைகளானார்கள், அது போலவே அவருடைய இளைய சகோதரி சிம்பிள் கபாடியாவும் நடிகையானார். அவருடைய மற்றொரு சகோதரி, ரீம் கபாடியா மர்மமான சூழலில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மகள் டிவிங்கிள் கண்ணா, நடிகர் அக்ஷய் குமார்-ஐத் திருமணம் செய்துள்ளார்.

விருதுகள்

  • 1973 - பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருது, பாபி
  • 1985 - பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருது, சாகர்
  • 1991 - பெங்கால் திரைப்பட பத்திரிக்கை எழுத்தாளர் சங்க விருதுகள் - சிறந்த நடிகை, டிரிஷ்டி [5]
  • 1993 - சிறந்த நடிகைக்கான தேசிய விருது, ருடாலி
  • 1993 - மிகச்சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் விமர்சகர் விருது, ருடாலி
  • 1994 - பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது, கிராந்திவீர்

திரைப்படப் பட்டியல்

  • பாபி (1973)
  • சாக்மி ஷேர் (1984)
  • மன்ஸில் மன்ஸில் (1984)
  • சாகர் (1985)
  • பாதால் பைரவி (1985)
  • லவா (1985)
  • ஐத்பார் (1985)
  • அர்ஜுன் (1985)
  • விக்ரம் (1986) (தமிழ் திரைப்படம்)
  • அல்லா ரக்கா (1986)
  • ஜான்பாஸ் (1986)
  • இன்சாஃப் (1987)
  • இன்சானியாத் கே துஷ்மன் (1987)
  • காஷ் (1987)
  • சாஜிஸ் (1988)
  • மேரா ஷிகார் (1988)
  • குனாஹோன் கா ஃபைய்ஸ்லா (1988)
  • பீஸ் சால் பாத் (1988)
  • ஆக்ரி அதாலத் (1988)
  • கப்சா (1988)
  • மஹாவீரா (1988)
  • ஸக்மி அவுரத் (1988)
  • கங்கா தேரி தேஷ் மே (1988)
  • ராம் லக்கன் (1989)
  • ஆக்ஷன் (1989)
  • தொஹீன் (1989)
  • பாட்வாரா (1989)
  • சிக்கா (1989)
  • ஷேசாதே (1989)
  • லடாய் (1989)
  • பதி பரமேஷ்வர் (1990)
  • காளி கங்கா (1990)
  • ஜெய் ஷிவ் ஷங்கர் (1990)
  • டிரிஷ்டி (1990)
  • ஆக் கா கோலா (1990)
  • பியார் கி நாம் குர்பான் (1990)
  • லேகின் (1990)
  • Prahaar: The Final Attack (1991)
  • நரசிம்ஹா (1991)
  • மஸ்த் கலந்தர் (1991)
  • ஹக்கியு (1991)
  • கூன் கா கர்ஸ் (1991)
  • துஷ்மன் தேவ்தா (1991)
  • அஜூபா (1991)
  • ரன்பூமி (1991)
  • அங்கார் (1992)
  • கர்ம யோதா (1992)
  • தில் ஆஷ்னா ஹை (1992)
  • ருடாலி (1993)
  • குணாஹ் (1993)
  • ஆஜ் கி அவுரத் (1993)
  • கர்திஷ் (1993)
  • பத்ரீலா ராஸ்டா (1994)
  • க்ராந்திவீர் (1994)
  • அந்தரீன் (1994)
  • ஷேர் பஜார் (1997)
  • அக்னி சக்ரா (1997)
  • ம்ரித்யூதாத்தா (1997)
  • 2001 (1998)
  • லாவாரீஸ் (1999)
  • ஹம் தும் பி மார்தே ஹைன் (1999)
  • தில் சாத்தா ஹை (2001)
  • லீலா (2002)
  • ஹம் கோன் ஹை? 2004)
  • பியார் மேய்ன் டிவிஸ்ட் (2005)
  • பீயிங் சைரஸ் (2006)
  • பனாரஸ் - எ மிஸ்டிக் லவ் ஸ்டோரி (2006)
  • லக் பை சான்ஸ் (2008)
  • ஜம்போ (2008)
  • பாம்பே மிட்டாய் (2010) (மலையாளத் திரைப்படம்)

மேலும் பார்க்க

  • இந்தியத் திரைப்பட நடிகைகள் பட்டியல்

குறிப்புகள்

பிற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டிம்பிள்_கபாடியா&oldid=3931795" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்