ஜோ அபேவிக்கிரம

ஜோ அபேவிக்கிரம (Gammana Patabendige Don John Abeywickrama, சூன் 22, 1927 - செப்டம்பர் 21 2011), பிரபல சிங்களத் திரைப்பட நடிகராவார். இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். பின்பு 60களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் நடித்துப் புகழ் பெற்றார்.

ஜோ அபேவிக்கிரம
பிறப்புசூன் 22, 1927
லெல்லுப்பிட்டி, இரத்தினபுரி மாவட்டம், இலங்கை
இறப்பு21 செப்டம்பர் 2011(2011-09-21) (அகவை 84)
தேசியம்இலங்கை இலங்கையர்

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் லெல்லுபிட்டி எனும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்தவர் அபேவிக்கிரம. இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். திப்பித்திகல கலவன் பாடசாலை, இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

திரைப்படத்துறையில்

இவர் நடித்த முதல் திரைப்படம் தேவசுந்தரி, இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவர் நடித்த மற்றுமொரு திரைப்படமான 'சரதம' 1957 இல் திரையிடப்பட்டது. இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாகும். இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை.

பிற துறைகள்

1959 இல் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் 'ஒதேலோ' நாடகத்தை நடித்து மேடை நாடகத்துறையில் அறிமுகமான இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையில் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளதுடன், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

இலங்கையில் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சரசவிய விருதாகும். ஜோ அபேவிக்கிரம 11 தடவைகள் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

சரசவிய விருது

  • 1965 சரசவிய விருது (திரைப்படம் - கெடவரயோ)
  • 1966 ஜனரஞ்ச மற்றும் சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சாரவிட)
  • 1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)
  • 1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)
  • 1986 சரசவிய உயர் விருது
  • 1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மல்தெனியோ சிமியோன்)
  • 1991 சிறந்த துணை நடிகர் (திரைப்படம் - பாலம யட்ட)
  • 1992 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - கொலு முகுதே குனாட்டுவ)
  • 1993 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - உமயாங்கனா)
  • 1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - வித்துசித்துவம்)
  • 2002 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - (புர ஹந்த கலுவர)

சனாதிபதி விருது

திரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும், திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக சனாதிபதி விருதினை இவர் 7 தடவைகள் பெற்றுள்ளார்.

  • 1980 சிறந்த துணை நடிகர் விருது (திரைப்படம் - வசந்தயே தவசக்)
  • 1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சிறிபோ அய்யா)
  • 1982 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)
  • 1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)
  • 1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பூஜா)
  • 1996 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - லொக்கு துவ)
  • 1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - விது சிதுவம்)

சர்வதேச விருது

1999ல் 12வது சிங்கப்பூர் திரைப்பட சர்வதேச விருதினை இவர் பெற்றார். புரஹந்த கலுவர திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் சில்வர் ஸ்கிரீன் விருது இவருக்குக் கிடைத்தது.

இறப்பு

ஜோ அபேவிக்கிரம தனது 84 ஆவது வயதில் செப்டம்பர் 21 2011 காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையிலேயே உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

நடித்துள்ள திரைப்படங்கள்

இப் பட்டியலிலுள்ள பெயர்கள் சிங்கள மொழி உச்சரிப்புக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்
1957சரதமகாவல்அதிகாரி
1959அவிஸ்வாசய
1959சிறி 296
1959கெஹனு கீத
1959சிறிமலீ
1960நாலங்கன
1960பிரிமியக் நிசா
1961தருவா காகேத
1962ரன்முது துவ
1962தேவ சுந்தரி
1963வெனா ஸ்வர்கயக் குமடத
1963தீபசிகா
1964ஹெட்ட பிரமாத வெடி
1964கெட்டவரயோசீமனாரிஸ்
1964சுபசரண செமசித
1964சிதக மஹிம
1965சண்டியா
1965சதுட்டு கந்துலு
1965சாரவிடசரய்யா
1965ஹிதட ஹித
1965அல்லபு கெதர
1965சத பனஹ
1965சுவீப் டிக்கட்
1965லந்தக மஹிமமொஹான்
1966செங்கவன செவனெல்ல
1966மஹதென முத்தாபொல்பெமுனா
1966செனசும கொதனத
1966எதுல்வீம தஹனம்
1966சீகிரி காசியப்பா
1966கபட்டிகம
1966பரசது மல்
1967சொருங்கெத் சொரு
1967மணமாலயோ
1967தரு துக
1967செந்து கந்துலு
1968புஞ்சி பபாசேன
1968அக்கா நகோ
1968எமதிகமமுதலாளி
1968'தஹசக் சிதுவிலி
1968ஆதரவந்தயோ
1968அட்டவெனி புதுமய
1969செனேஹச
1969ஒப நெதினம்
1969நாரிலதா
1969ஹரி மக
1969படுத் எக்கா ஹொரு
1969உதும் ஸ்த்ரீ
1969பரிஸ்சம் வென்ன
1969பரா வளலு
1969பெஞ்சா
1969ரோமியோ ஜுலியட் கதாவ
1970லக்செத கொடிய
1970தேவத்தா
1970துன் மங் ஹந்தியஅபிலின்
1971சீயே நொட்டுவ
1971வெலிகதரகொரிங் முதலாளி
1971ஹரலக்சய
1972Chandar, the Black Leopard of Ceylonஃபாதர்
1972வீதுரு கெவல்
1973மாத்தர ஆச்சி
1973துசாரா
1973சதஹட்டம ஒப மகே
1974கல்யாணி கங்கா
1974ஒன்ன பாபு பில்லோ எனவா
1974நியகலா மல்
1975ரத்தரன் அம்மா
1975தரங்கா
1974சூரயா சூரயாமய்
1975சிகுருலியா
1975சாதனா
1975கலு திய தஹரா
1975தேச நிசா
1976வாசனா
1976மடோல் தூவதலைமை ஆசிரியர்
1976கொலம்ப சன்னிய
1976த கோட் கிங்சுவாமி
1976உன்னத் தஹாய் மலத் தஹாய்
1976ஒன்ன மாமே கெல்லா பெனப்பி
1977ஹிதுவொத் ஹிதுவாமய்
1977யலி இபதி
1977சிறிபால ஹா ரன்மெனிகா
1978கெஹனு லமய்'
1978சிறிபதுல
1978செலினாகே வளவ்வ
1978சாரா
1978வீர புரான் அப்புகொங்கல்ல கொடபண்டா
1978பம்பரு அவித்அன்டன் அய்யா
1978சல்லி
1978குமர குமரியோதர்மே
1978சந்தவட்ட ரன்தரு
1979ஜீவன கந்துலு
1979ஹிங்கன கொல்லா
1979ரஜ கொல்லோ
1979வசந்த தவசக்'
1979விசி ஹதர பெய
1979ஹரி புதுமய்
1980டக் டிக் டுக்
1980ஜோடு வலலு
1980எக்டெம் கேவில்சன்
1980சீதா
1980ஆதர ரத்னே
1980சிறிபோ அய்யாசிறிபோ அய்யா
1980பம்பர பஹச
1980தன்டு மொனரா
1980முவன் பெலஸ்ஸ 2
1980பர திகே
1980சிங்ஹபாகு
1981கோலம் காரயோ
1981தரங்க
1981பத்தேகமசிலிந்து
1981சயுரு தெரே
1981சொல்தாது உன்னஹேஇராணுவ வீரர்
1981சத்தர பெர நிமிதி
1981பின்ஹாமி
1981சதர திகந்தய
1982ரேன கிரவய்டாக்டர் சிறி
1982வதுர கரத்தய
1982மாஜர் சேர்
1982கெலே மல்
1982மலட நெஎன பம்பரு
1982ரேல் பார
1982கடவுனு பொரந்துவ
1983ரன் மினி முத்து
1983சந்தமாலி
1983சுமித்ரோ
1983நிலியகட பெம் கலெமி
1983சமுகனிமி மா செமியனி
1983சுபோதா
1983முவன் பெலஸ்ஸ 3
1983மொனர தென்ன 2
1983பீட்டர் ஒப் த எலிபன்ட்ஸ்
1983முகுது லிஹினி
1984சிராணி
1984தாத்தை புதாய்
1984பொடி ராலாஹாமிபொடி ராலஹாமி
1984சசரா சேதனா
1984வடுல
1984ஹிம கதர
1984சாகோதரியகே கதாவ
1985சுத்திலாகே கதாவ
1986மல்தெனியசீமன்
1986தெவ் துவமொஹமட்
1986பூஜாஜேமிஸ்
1986ஆதர ஹசுன
1987விராகயாஅரவிந்த'ஸ் பாதர்
1988ரச ரஹசக்
1988அங்குலிமாலாதிசாபாமுக்
1990பாலம யட்டஅங்கல்
1991கொலு முகுதே குனாட்டுவக்பொடி
1991செரியோ டொக்டர்பிரதான மருத்துவர்
1991ஸ்திரீஅப்புஹாமினி
1992உமயங்கனாஇளைய சதோதரர்
1994அம்பு செமியோடாக்டர்
1995அவரகிரகே.பி.
1995ச்செரியோ கப்டன்கப்டன் டாசன்
1996ஹித்த ஹொந்த கெஹெனியக்
1996லொகு துவபுன்னா'ஸ் பாதர்
1996செரியோ டார்லிங்சீப்
1996பிது சிதுவம்சேனக
1997சுது அக்காபிலக்ஸ்மித்
1998விமுக்தி
2000சரோஜாடாக்டர்
2001புர ஹந்த கலுவர-
2001அஸ்வசுவமகுனேர்ஸ்
2006தீவாரிமுதலாளி


வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜோ_அபேவிக்கிரம&oldid=3584837" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்