ஜே. சசிகுமார்

நடிகர்

ஜே. சசிகுமார் (ஆங்கிலம்: J. Sasikumar) (பிறப்பு: 1927 அக்டோபர் 14 - இறப்பு: 2014 சூலை 17) என்பவர் அவரது திரைப் பெயரான சசிகுமார் என்று நன்கு அறியப்பட்ட நம்பியாத்துசெரில் வர்கி ஜான் மலையாள சினிமாவில் பணியாற்றிய இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். [1] உலக சினிமாவில் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான இவர், 1960 களின் நடுப்பகுதியில் தொடங்கிய தனது வாழ்க்கையில் 141 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவரது படங்களின் வணிகரீதியான வெற்றியின் காரணமாக அவர் பெரும்பாலும் ஹிட்மேக்கர் சசிகுமார் என்று அழைக்கப்படுகிறார்.

சசிகுமார் மூன்று உலக சாதனைகளைப் படைத்துள்ளார்: பெரும்பாலான படங்களுக்கான பதிவுகள் (141), பெரும்பாலான படங்களில் கதாநாயகானாக ஒரே நடிகர் (84 படங்களில் பிரேம் நசீர் ) மற்றும் ஒரு வருடத்தில் இயக்கப்பட்ட அதிக படங்கள் (1977 இல் 15 படங்கள்) என்ற சாதனைகளைக் கொண்டிருந்தார். [2] 2014 இல் அவர் தனது 86 வயதில் இறந்தார். [3]

கேரளாவின் ஆலப்புழாவில் என். எல். வர்கி மற்றும் மரியா ஆகியோருக்கு 1927 அக்டோபர் 14 அன்று பிறந்தார். அவரது இயற்பெயர் என். வி ஜான் என்பதாகும். அவர் தனது பத்தாவது வயதிலேயே நாடகங்களில் நடிப்பதில் ஒரு சிறந்த திறமையைக் கொண்டிருந்தார். ஆல்ழ்ப்புழாவின் லியோ பதின்மூன்றாம் உயர்நிலைப் பள்ளி மற்றும் மன்னனம் புனித எபிரேம் பள்ளியில் இருந்து தனது பள்ளிக் கல்வியை முடித்தார். கல்லூரி வாழ்க்கையில் அவர் கேரள பல்கலைக்கழக கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். தேவாராவின் தூய இருதயக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டதாரி பட்டம் பெற்றார். [4]

தொழில்

ஆரம்பகாலப் பணி

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தனது படிப்பின் போது, குறிப்பாக ஷேக்ஸ்பியர் வகையின் நாடகங்களில் நடித்ததற்காக அவர் தனது திறமையை நிரூபித்தார்.

பின்னர், ஆலபுழாவின் உதயா திரைப்பட படப்பிடிப்பு அரங்கத்தின் குஞ்சாக்கோ தனது திறமையை அடையாளம் கண்டு, அவரது விசாபிண்டே வில்லி என்ற படத்தில் நடிக்க ஒரு பாத்திரத்தை வழங்கினார். அதில் அவர் எப்போதும் கதாநாயகனாகக் கொண்டாடப்படும் பிரேம் நசீருக்கு எதிராக ஒரு பாத்திரத்தில் நடித்தார். மலையாளத்தில் முதல் படமாக நடந்தது, இதில் வில்லன் கதாநாயகனுடன் மாற்று ஏற்பாடு இல்லாமல் சண்டையிடுகிறார். மேலும் அந்த பாத்திரத்தை சசிகுமார் ஆடம்பரமாக நடித்திருந்தார். இது மலையாளத் திரைப்படத்தில் முதல் தடவையாக நடந்தது. அதைத் தொடர்ந்து, உதய படப்பிடிப்பு அரங்கு தயாரித்த பல படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த படங்களில் குஞ்சாக்கோவின் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். திரைப்பட இயக்குனருக்குத் தேவையான திறமையும் அறிவும் சசிகுமாரிடம் இருப்பதை அடையாளம் கண்டது குஞ்சாக்கோதான்.

மலையாள சினிமாவுக்கு அவர் செய்த பன்மடங்கு பங்களிப்புகளுக்காக கேரள மாநில அரசு 2013 ஆம் ஆண்டில் அவருக்கு ஜே.சி. டேனியல் விருதை வழங்கி கௌரவித்தது.

இறப்பு

சசிகுமார் தனது வாழ்நாளின் இறுதி வரை வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார். உடல்நலமில்லாத இருந்த அவரது மனைவியை இழந்தார். பின்னர் அவரது மகன் மாரடைப்பால் இறந்தார். அவரும் 2014 சூலை 17 அன்று தனது 87 வயதில் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார். அவரது சொந்த நகரமான ஆலப்புழையில் புனித மைக்கேல் தேவாலயத்தின் கிருத்துவச் சடங்குகளின்படி அவரது வீட்டில் புதைக்கப்பட்டார். மலையாள சினிமாவின் மிகவும் மரியாதைக்குரிய நபரான இவர் அவரது இரண்டு குழந்தைகளான உஷா ஜான் மற்றும் ஷீலா ராபின் ஆகியோரால் வாழ்கிறார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜே._சசிகுமார்&oldid=3750346" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்