ஜேம்ஸ் கேமரன்

ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரன் (James Francis Cameron) [1]கனடாவைச் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் ஆழ் கடல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[2][3]

ஜேம்ஸ் கேமரன்
James Francis Cameron

கேமரன் 2010ல் ஒரு நிகழ்ச்சியில்
இயற் பெயர்ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரன்
பிறப்புஆகத்து 16, 1954 (1954-08-16) (அகவை 69)
ஒன்டாரியோ, கனடா
தொழில்திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர்
நடிப்புக் காலம்1978–இன்று
துணைவர்ஷரோன் வில்லியம்ஸ்(1978–1984)
கெய்ல் அன் கர்ட் (1985–1989)
கேத்ரின் பிஜேலோ (1989–1991)
லிண்டா ஹமில்டன் (1997–1999)
சுசி அமிஸ் (2000–இன்று வரை)

1984 இல் த டெர்மினேட்டர் எனும் அறிவியல் புனைவு திரைப்படத்தினை இயக்கினார். இது பெரிய அளவில் வெற்றி பெற்றது. 1986 இல் ஏலியன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கிய பிறகு ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆனார். 1991 இல் டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே எனும் இவர் இயக்கியத் திரைப்படம் சிறப்பு விளைவிற்காகப் பாரட்டப்பட்டது. 1997 இல் டைட்டானிக் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருது பெற்றது.

டைட்டானிக் திரைப்படத்தை இயக்கிய பிறகு அவதார் (2009 திரைப்படம்) எனும் அறிவியல் புனைவு திரைப்படத்தை சுமார் பத்து வருடங்களாக இயக்கினார். இந்தப் படம் முப்பரிமாண படிம நிலக்குறியீட்டில் எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் வெற்றிகரமான முப்பரிமாண படிம இயக்குநராக கருதப்படுகிறார்.[4] டைட்டானிக் மற்றும் அவதார் படங்களை எடுப்பதற்கு இடையிலான காலகட்டங்களில் பல குறும்படங்களை இயக்கினார். மேலும் இவர் நீருக்கடியில் உள்ளன பற்றிய விபரணத் திரைப்படம் இயக்குவது மற்றும் வெகுதூரத்தில் இருந்து நீருக்கடியில் உள்ள வாகனங்களை இயக்குதல் போன்ற தொழில்நுட்பங்களில் பங்காற்றினார்.[2][3][5] மார்ச்சு 26, 2012 அன்று உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியின் 11 கிமீ ஆழத்திலுள்ள அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்தார்[6].[7][8][9]

ஜேம்ஸ் கேமரன் இயக்கியத் திரைப்படங்கள் வட அமெரிக்காவில் சுமார் $2 பில்லியன் வசூலையும் , உலகம் முழுவதும் சுமர் $6 பில்லியன் வசூலையும் பெற்றுத் தந்தது.[10] கேமரனுடைய டைட்டானிக் மற்றும் அவதார் ஆகிய திரைப்படங்கள் முறையே $2.19 பில்லியன், $2.78 பில்லியன் வசூலைப் பெற்றது. இது வரை வெளியான திரைப்படங்களில் உலக அளவில் அதிக வசூலைப் பெற்றது இந்தத் திரைப்படங்களே ஆகும். 2011 இல் வனிட்ட்ய் ஃபேர் எனும் இதழானது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் இயக்குநராக (திரைப்படம்) இவரை அறிவித்தது. 2010 இல் சுமார் $257 மில்லியன் வருமானம் ஈட்டினார்.[11] அக்டோபர், 2013 இல் வெனிசுவேலாவில் புதிதாக கண்டறியப்பட்ட தவளைக்கு திரைத்துறையில் இவர் செய்த சாதனையைப் பாராட்டும் விதமாக இவரின் பெயரையும் சேர்த்து பிரிஸ்திமந்திஸ் ஜேம்ஸ் கேமரூனி எனப் பெயரிட்டனர்.[12][13][14]

நாசா விஞ்ஞானி சார்லஸ் போல்டன் உடன் கேமரூன்.

முக்கிய படங்கள்

டெர்மினேட்டர் (1984)

த டெர்மினேட்டர் திரைப்படம் (The Terminator) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர, மைக்கேல் பியென் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[15] கதையின்படி ஆர்னோல்டு சுவார்செனேகர் 2029 ல் இருந்து அனுப்ப பட்ட ஒரு இயந்திர மனிதன். இவரின் நோக்கம் சாரா கோணரை கொலை செய்வது. இதே நேரம் சாரா கோணரைக் காப்பாற்ற மனிதர்கள் கைல் ரீஸ் எனும் மனிதனை அனுப்புகின்றார்கள். டெர்மினேட்டர், வியாபார ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது.

ராம்போ II

ராம்போ II (en:Rambo: First Blood Part II) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இந்தத் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். இத்திரைப்படத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன், ரிச்சர்ட் செரண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படம் 1985ல் வெளியான வெற்றிப் படங்களுள் ஒன்றாக உள்ளது.[16]

டைட்டானிக்

டைட்டானிக் திரைப்படம் பற்றிய கட்டுரையைப் பார்க்க, டைட்டானிக் (திரைப்படம்)

டைட்டானிக் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்திருந்தனர். உலகளாவிய அளவில், 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.[17]

அவதார்

'அவதார் திரைப்படம் பற்றிய கட்டுரையைப் பார்க்க, அவதார் (2009 திரைப்படம்)

அவதார் 2009-ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும் . சுமார் 1500 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரான இப்படம் வசூலில் சாதனை படைத்து முந்தைய சாதனையான டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது.[18]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

http://ஐ[தொடர்பிழந்த இணைப்பு] எம் டிபி வலைத்தளத்தில் ஜேம்ஸ் கேமரன்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜேம்ஸ்_கேமரன்&oldid=3949245" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்