கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலை 8 (July 8 ) கிரிகோரியன் ஆண்டின் 189 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 190 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 176 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள் 1099 – முதலாம் சிலுவைப் போர் : 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர்.1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது.1579 – உருசிய மரபுவழித் திருச்சபையின் புனித திருவோவியம் அன்னை கசான் தத்தாரிஸ்தான் , கசான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு வழங்கினார்.1709 – உருசியப் பேரரசர் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னனைத் தோற்கடித்தார்.1730 – சிலியின் கரையோரப் பகுதியை 8.7 அளவு நிலநடுக்கம் , மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.1760 – புதிய பிரான்சில் இடம்பெற்ற கடற் சமரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.1776 – அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் முதலாவது பொது வாசிப்பை யோன் நிக்சன் படித்து முடித்தபோது, நாடெங்கும் தேவாலய மணிகள் (விடுதலை மணி உட்பட) ஒலித்தன.1827 – இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழர் நீதிமன்றங்களில் சான்றாயர்களாக அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.[1] 1859 – சுவீடன் -நோர்வே மன்னராக பதினைந்தாம் சார்லசு முடி சூடினார்.1876 – தென் கரொலைனாவில் வெள்ளையின ஆதிக்கவாதிகள் ஐந்து கறுப்பினத்தவரைக் கொன்றனர்..1879 – அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. இது 1881 இல் மூழ்கியது.1892 – நியூபவுண்லாந்தின் சென் ஜோன்சு நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.1932 – டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு பெரும் பொருளியல் வீழ்ச்சியின் மிகத் தாழ்ந்த புள்ளிகளை (41.22) எட்டியது .1937 – துருக்கி, ஈரான், ஈராக், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் தெகுரானில் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. இவ்வுடன்பாடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது.1939 – மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஒத்துழைப்போடு அரிசனங்களின் ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது.1947 – அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ஒன்று நியூ மெக்சிகோவில் வீழ்ந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டது.1962 – ரங்கூனில் மாணவர் கிளர்ச்சியை அடக்க இராணுவத் தளபதி நே வின் ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டடத்தைத் தகர்த்தார்.1966 – புருண்டியின் மன்னர் நான்காம் முவாம்புத்சா அவரது மகன் இளவரசர் சார்லசு இந்தீசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.1972 – பாலத்தீன எழுத்தாளர் கசன் கனஃபானி இசுரேலிய மொசாட் படைகளினால் படுகொலை செய்யப்பட்டார்.1982 – ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.1985 – திம்புப் பேச்சுவார்த்தைகள் : இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.1988 – பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்த ஐலண்டு விரைவுவண்டி பெருமண் பாலத்தில் தடம் புரண்டு அஷ்டமுடி ஏரியில் வீழ்ந்ததில் 105 பயணிகள் உயிரிழந்தனர், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.1990 – செருமனி அர்கெந்தீனாவை வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.1994 – கிம்-இல்-சுங் இறந்ததை அடுத்து, அவரது மகன் கிம் ஜொங்-இல் வட கொரியாவின் உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.[2] 2006 – ம. பொ. சி. , புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.2011 – அட்லாண்டிசு விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.2014 – பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை : இசுரேல் காசா மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.பிறப்புகள் 1831 – ஜான் ஸ்டைத் பெம்பர்டென் , கொக்கக் கோலாவைக் கண்டுபிடித்த அமெரிக்க வேதியியலாளர் (இ. 1888 )1839 – ஜான் டி. ராக்பெல்லர் , அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1937 )1863 – சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா , நேபாள இராச்சியத்தின் தலைமை அமைச்சர் (இ. 1929 )1906 – பிலிப் ஜான்சன் , அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (இ. 2005 )1914 – ஜோதி பாசு , மேற்கு வங்கத்தின் 6வது முதலமைச்சர் (இ. 2010 )1949 – எ. சா. ராஜசேகர் , ஆந்திராவின் 14வது முதலமைச்சர் (இ. 2009 )1966 – ரேவதி , தென்னிந்தியத் திரைப்பட நடிகை1969 – சுகன்யா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை1972 – சௌரவ் கங்குலி , இந்தியத் துடுப்பாளர்1977 – மிலோ வேண்டிமிக்லியா , அமெரிக்க நடிகர்1980 – ரூபிள் நாகி , இந்திய ஓவியர்1998 – ஜேடன் சிமித் , அமெரிக்க நடிகர்இறப்புகள் 1623 – பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1554 )1695 – கிறித்தியான் ஐகன்சு , டச்சு இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1629 )1822 – பெர்சி பைச்சு செல்லி , ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1792 )1928 – கிரிஸ்டல் கேத்தரின் ஈஸ்ட்மன் , அமெரிக்க சட்ட அறிஞர், பெண்ணியலாளர், சமூகச் செயற்பாட்டாளர் (பி. 1881 )1939 – ஹேவ்லாக் எல்லிஸ் , ஆங்கிலேய உளவியலாளர் (பி. 1859 )1971 – ஏ. என். கிருஷ்ணராவ் , கன்னட எழுத்தாளர், இலக்கியவாதி (பி. 1908 )1979 – ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1917 )1980 – மயிலை சீனி. வேங்கடசாமி , தமிழறிஞர் (பி. 1900 )1989 – வி. வி. வைரமுத்து , ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (பி. 1924 )2006 – ராஜா ராவ் , இந்திய எழுத்தாளர் (பி. 1908 )2007 – சந்திரசேகர் , இந்தியாவின் 9வது பிரதமர் (பி. 1927 )2011 – கா. கலியபெருமாள் , மலேசிய எழுத்தாளர் (பி. 1937 )2012 – ஏ. எஸ். ராகவன் , தமிழக எழுத்தாளர் (பி. 1928 )2013 – சுந்தரி உத்தம்சந்தனி , இந்திய சிந்தி எழுத்தாளர் (பி. 1924 )2013 – ராசு மதுரவன் , தமிழ்கத் திரைப்பட இயக்குநர்2014 – நீலமேகம் பிள்ளை , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்2016 – புர்கான் முசாபர் வானி , காசுமீரி விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1994 )2016 – அப்துல் சத்தார் எதி , பாக்கித்தானியக் கொடையாளர் (பி. 1928 )சிறப்பு நாள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள்