ஜிக்மே தோர்ஜி வாங்சுக்

ஜிக்மே தோர்ஜி வாங்சுக் (Jigme Dorji Wangchuck, திஃசொங்கா: འབྲུག་རྒྱལ་པོ་ འཇིགས་མེད་རྡོ་རྗེ་དབང་ཕྱུག་མཆོག་, 2 மே 1929 – 21 சூலை 1972) பூட்டானின் மூன்றாவது டிரக் கியால்ப்போ (அரசர்).[2]

ஜிக்மே தோர்ஜி வாங்சுக்
பூட்டான் அரசர்
டிரக் கியால்ப்போ
ஆட்சி30 மார்ச் 1952 – 21 சூலை 1972
முடிசூட்டு விழா27 அக்டோபர் 1952 [1]
முன்னிருந்தவர்ஜிக்மே வாங்சுக்
பின்வந்தவர்ஜிக்மே சிங்கே வாங்சுக்
துணைவர்ஆஷி கேசங் சோடன்
வாரிசு(கள்)சோனம் சோடன் வாங்சுக்
தேச்சன் வாங்மோ வாங்சுக்
ஜிக்மே சிங்கே வாங்சுக்
பெமா லாடன் வாங்சுக்
கேசங் வாங்மோ வாங்சுக்
அரச குடும்பம்வாங்சுக் வம்சம்
தந்தைஜிக்மே வாங்சுக்
தாய்ஆஷி புன்ட்ஷோ சோடன்
பிறப்பு(1929-05-02)2 மே 1929
திரூபங் அரண்மனை, இட்ராங்சா
இறப்பு21 சூலை 1972(1972-07-21) (அகவை 43)
நைரோபி, கென்யா
அடக்கம்குர்ஜெ லாகங்கில் எரியூட்டல்
சமயம்பௌத்தம்

தமது ஆட்சியின்போது வெளியுலகிற்கு பூட்டானை திறந்து விட்டார். நாட்டை நவீனமயமாக்கியவரும் மக்களாட்சிக்கு அறிமுகப்படுத்தியவரும் ஆவார்.

Picture of King Jigme Dorji Wangchuck at Paro Internation Airport
பரோ விமான நிலையத்தில் அரசர் ஜிக்மே தோர்ஜி வாங்சுக்கின் படிமம்

கல்வியும் அரசத் திருமணமும்

ஜிக்மே தோர்ஜி வாங்சுக் இட்ரோங்சாவிலுள்ள திரூபங் அரண்மனையில் 1929ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் பிறந்தார்.[3] இளம் வயதிலேயே நடத்தை நெறிகளிலும் தலைமைப் பண்புகளிலும் அரசரின் அரசவையில் பயிற்சி பெற்றார். கலிம்பொங்கில் பிரித்தானிய முறைமையில் கல்வி கற்றார். பல கல்விச் சுற்றுலாக்களில் பங்கேற்றும் இசுக்காட்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டும் உலகறிவு பெற்றமையால் தமது நாடும் மற்ற நாடுகளைப் போல வளர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார்.[4]1943இல் இட்ரோங்சாவின் முதன்மை அதிகாரி (திரோன்யர்) ஆகவும் பின்னர் 1950இல் பரோ மாவட்டத்தின் 25வது பென்லாப்பாகவும் நியமிக்கப்பட்டார். வாங்சுக் கோங்சிம் சோனம் டாப்கே தோர்ஜியின் மகள்,1930இல் பிறந்த ஆஷி கேசங் சோடனை பாரோவிலிருந்த ஊகென் பெல்ரி அரண்மனையில் அக்டோபர் 5, 1951இல் திருமணம் முடித்தார். இந்த அரசத் திருமணம் பூங்கா அரண்மனையில் நடந்தது. இதற்கு அடுத்த ஆண்டில், வாங்சுக் தமது தந்தையின் மரணத்தை அடுத்து, அரசராக பதவியேற்றார். இந்த பட்டாபிசேகம் அக்டோபர் 27, 1952இல் புனாகா சோங்கில் நடைபெற்றது.[4]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்