ஜாவெட் மியன்டாட்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

முகமது ஜாவெட் மியன்டாட் (Mohammad Javed Miandad (Urdu: محمد جاوید میانداد;பிறப்பு - ஜூன் 12, 1957, கராச்சி)பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். தனித்துவமான மட்டையாடும் திறனாலும் இவரின் தலைமைப் பண்பினாலும் பரவலாக அறியப்பட்டார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரின் தனித்துவமான விளையாடும் திறன் மூலம் பிரபலமானார்.[1] துடுப்பாட்ட விமர்சகர்கள் மற்றும் பல சாதனையாளர்களின் மூலமாக பல பாராட்டுக்களையும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களில் மிகச் சிறந்த மட்டையாளர் ஜாவெட் தான் என ஈஎஸ்பிஎன் தெரிவித்தது.[2] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த துடுப்பாளார்களில் இவரும் ஒருவர் என இவரின் சமகால துடுப்பாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளரான இயன் செப்பல் தெரிவித்தார்.[3] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையை ஈஎஸ்பிஎன் நிறுவனம் லெஜன்ட்ஸ் ஆஃப் துடுப்பாட்டம் எனும் பெயரில் வெளியிட்டது.இதில் இவருக்கு 44 ஆவது இடம் கிடைத்தது.[4] இவர் 1975 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பாக்கித்தான் அணிக்காக விளையாடினார். இவர் பாக்கித்தான் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். 1986 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது கடைசிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்ததன் மூலம் பிரபலமானார்.[5] 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பாக்கித்தான் அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். இவரின் ஓய்விற்குப் பிறகு பல சமயங்களில் இவர் பாக்கித்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரின் மகன் தாவூத் இப்ராகிமின் மகளைத் திருமணம் செய்தார்.[6]

ஜாவெட் மியாண்டட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகமது ஜாவத் மியான்டட்
பிறப்பு12 சூன் 1957 (1957-06-12) (அகவை 67)
கராச்சி, சிந்து, மாக்கித்தான்
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 71)9 அக்டோபர் 1976 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு16 டிசம்பர் 1993 எ. சிம்பாப்வே
ஒநாப அறிமுகம் (தொப்பி 15)11 சூன் 1975 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப9 மார்ச் 1996 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1975–1991ஹபிப் வங்கி லிமிடட்
1976–1979சசெக்ஸ்
1980–1985கிளாமோர்கன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுஒபதுமுததுப அ
ஆட்டங்கள்124233402439
ஓட்டங்கள்8,8327,38128,66313,973
மட்டையாட்ட சராசரி52.5741.7053.3742.60
100கள்/50கள்23/438/5080/13913/101
அதியுயர் ஓட்டம்280*135311152*
வீசிய பந்துகள்1,47029712,690830
வீழ்த்தல்கள்17719118
பந்துவீச்சு சராசரி40.1142.4234.0634.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0060
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0000
சிறந்த பந்துவீச்சு3/742/227/393/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
93/171/2341/3142/2
மூலம்: ஈ எஸ் பி என் கிரிக் இன்போ, 10 மார்ச் 2009

ஆரம்பகால வாழ்க்கை

ஜாவேத் மியன்டாட் 12 ஜூன் 1957 அன்று கராச்சியில் பிறந்தார்.[7] இவரது பெற்றோர் பலன்பூருக்கு, குஜராத், இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்தனர். இவரது தந்தை, மியாணடட் நூர் முகமது தியாகி, காவல் துறையில் பணியாற்றினார். இவர் ஒரு தியாகி ஆவார்.இவர் குஜராத்தி முஸ்லீம் ஆவார் . துடுப்பாட்டம் இவரது குடும்ப விளையாட்டாக இருந்தது.[7] இவருக்கு பாகிஸ்தானில் முதல் தர துடுப்பாட்டம் விளையாடிய மூன்று சகோதரர்கள் இருந்தனர்: அன்வர் மியாண்டாத், சோஹைல் மியாண்டாத் மற்றும் பஷீர் மியாண்டாத்.[8][9][10] இவரது மருமகன் பைசல் இக்பாலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி துடுப்பாட்ட வீரர் ஆவார்.[11]

தேர்வுத் துடுப்பாட்டம்

ஒரு[தொடர்பிழந்த இணைப்பு] நிகழ்ச்சியின் போது மியன்டட் (பச்சை நிற ஆடையில் இருப்பவர்.)

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முதல் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் அப்துல் ஹாபிஸ் காதர் இவரை 1970 ஆண்டுகளின் துவக்கத்தில் பார்த்தபோது இந்த நூற்றான்டின் சிறந்த வீரர் இவர்தான் எனத் தெரிவித்தார். இவரின் வருகை ஏற்கனவே முஷ்தாக் அகுமது, மஜீத் கான், சாதிக் முகம்மது, சஹீர் அப்பாஸ் மற்றும் வசீம் ராசா ஆகிய வலுவான மட்டையாளர்களின் வரிசையை மேலும் வலுவாக்கியது. 1976 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையடியது. அக்டோபர் 9 , லாகூரில் , கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2] இதன்முதல் ஆட்டப் பகுதியில் இவர் 163 ஓட்டங்கள் அடித்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25* ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார். அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 119 நாட்கள் ஆகும். இந்தப்ம் போட்டியில் பந்துவீச்சில் இவர் ஒரு இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..[12][13] இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி கராச்சியிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்றது.[14] இந்தப் போட்டியில் 206 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் இருநூறினைப் பதிவு செய்தார்.இதன்மூலம் 47 வயதான ஜார்ஜ் ஹெட்லியின் சாதனையைத் தகர்த்தார். மேலும் மிகக் குறைந்த வயதில் இருநூறு அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[15] அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 140 நாட்கள் ஆகும். பின் இரண்டாவது ஆட்ப் பகுதியில் 85 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் இருநூறு மற்றும் நூறு ஓட்டங்கள் அடிக்கும் சாதனையைத் தவறவிட்டார்.[16] இந்தத் தொடரில் அதிக ஒட்டங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதல் இடம்பிடித்தார். இவர் 504 ஓட்டங்களை 126.00 எனும் சராசரியோடு எடுத்தார்.[17] இவரின் சிறப்பான செயல்பாட்டினால் இந்தத் தொடரை 2-0 எனும் கணக்கில் பாக்கித்தான் அணி கைப்பற்றியது.[14]

1976-77ல் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 29.60 எனும் சராசரியோடு 148 ஓட்டங்கள் எடுத்தார்.[18] அடிலெய்ட் ஓவலில் 85 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று இழப்புகளைக் கைப்பற்றியது உட்பட இந்தத் தொடரில் ஐந்து இழப்புகளையும் வீழ்த்தினார்.[19][20] 1977 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் மியாண்டாட் 131.00 எனும் சராசரியில் 262 ஓட்டங்கள் எடுத்தார், இதில் மூன்று அரை நூறுகள் அடங்கும்.[21] இந்த தொடரில் ஒரு ஆட்டப் பகுதியில் இவர் எடுத்த அதிகபட்ச ஓட்டம் ஹைதராபாத்தின் நியாஸ் அரங்கத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்கள் எடுத்தது ஆகும்.[22] 1978-79ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.இந்தத் தொடரின் போது பைசலாபாத்தின் இக்பால் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் மியாண்டத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.[23] இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது இவருக்கு வயது 21 ஆண்டுகள் மற்றும் 126 நாட்கள் ஆகும். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் இந்தச் சாதனை புரிந்த இரண்டாவது வீரர் ஆனார்.இதற்கு முன்பாக கபில்தேவ் இந்தச் சாதனையினைப் புரிந்த முதல் நபராவார்.[24] அதே தொடரில், தேசிய மைதானத்தில் மற்றொரு நூறு அடித்ததன் மூலம், இவர் 178.50 எனும் சராசரியில் ஐந்து ஆட்டப் பகுதிகளிலும் 357 ஓட்டங்கள் எடுத்தார். அந்தத் தொடரில் பாக்கித்தான் 2-0 என வெற்றி பெற்றது.[25][26]

தனிப்பட்ட வாழ்க்கை

ஜாவேத் மியாந்தாத் 1981 ஆம் ஆண்டில் காலித் சைகோல் மற்றும் ஃபரிதா ஹயாத்தின் மகளான தஹிரா சைகோலை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் ஜுனைத் மியாந்தாத், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாஃபியா கிங்பின் தாவூத் இப்ராஹிமின் மகள் மஹ்ருக் இப்ராஹிமை மணந்தார், இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற சிண்டிகேட் டி-நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.[27] தனது மகனும் இப்ராஹிமின் மகளும் இங்கிலாந்தில் ஒன்றாகப் படிக்கும் போது சந்தித்ததாக மியாண்டத் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.[28] 2011 ஆம் ஆண்டில், மியாண்டாட் ஜியோ டிவியில் நா'அட்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[29]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜாவெட்_மியன்டாட்&oldid=3573049" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்