ஜார்ஜ் ஆர்வெல்

ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell, ஜூன் 25, 1903 – ஜனவரி 21, 1950) ஒரு பிரிட்டானிய எழுத்தாளர் மற்றும் இதழாளர். ஆங்கில எழுத்துலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படும் இவரது இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளைர் (Eric Arthur Blair). ஆர்வெலின் படைப்புகளில் அவரது கருத்துத் தெளிவு, சர்வாதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடுகள், ஜனநாயக சமதர்ம ஆதரவு, சமூக அநீதிகளுக்கெதிரான அறச்சீற்றம், மொழியாளுமை ஆகியவை காணக்கிடைக்கின்றன.

ஜார்ஜ் ஆர்வெல்
ஆர்வெலின் இதழாளர் அடையாள அட்டை புகைப்படம் (1933)
ஆர்வெலின் இதழாளர் அடையாள அட்டை புகைப்படம் (1933)
பிறப்புஎரிக் ஆர்தர் பிளைர்
(1903-06-25)25 சூன் 1903
மோத்திஹரி, பீகார், பிரித்தானிய இந்தியா
இறப்பு21 சனவரி 1950(1950-01-21) (அகவை 46)
கேம்டன், லண்டன், ஐக்கிய இராச்சியம்
அடக்கத்தலம்சட்டன் கோர்ட்னே, ஆக்சுஃபோடுஷயர்
புனைபெயர்ஜார்ஜ் ஆர்வெல், ஜான் ஃபிரீமேன்[1][2]
தொழில்எழுத்தாளர், இதழாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஹோமேஜ் டூ காத்தலோனியா (1938)
அனிமல் ஃபார்ம் (1945)
நைண்ட்டீன் எய்ட்டி-ஃபோர் (1949)
கட்டுரைகள்
துணைவர்அய்லீன் ஓ’ ஷானெஸ்சி (1935–1945)
சோனிய புரவுன்வெல் (1949–1950)

அர்வெல் புனைவுகள், தருக்க பத்திகள், கவிதைகள், இலக்கிய விமர்சனம் என பலவகைப்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். பிறழ்ந்த உலகுப் (dystopia) புதினமான நைண்ட்டீன் எய்ட்டி ஃபோர், கம்யூனிசத்தை கேலி செய்த அனிமல் ஃபார்ம் ஆகிய இரண்டும் அவரது உலகப் புகழ்பெற்ற படைப்புகளாகும். இவை தவிர எசுப்பானிய உள்நாட்டுப் போரில் குடியரசுப் படைகளில் தன்னார்வல வீரராக பங்கேற்ற அனுபவங்களைத் தொகுத்து எழுதிய ஹோமேஜ் டூ காத்தலோனியா மற்றும் இலக்கியம், அரசியல் மொழி, பண்பாடு ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய பல கட்டுரைகளும் சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. தற்காலம் வரை ஆங்கில இலக்கியம், பண்பாடு, மொழி ஆகிய துறைகளில் ஆர்வெல்லின் தாக்கம் உணரப்படுகிறது. அவர் உருவாக்கிய புதுமொழிகள் (neologisms) பல இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. அவை தவிர Orwellian (ஆர்வெல் படைப்புகளில் வருவது போன்ற) என்ற ஆங்கில பதமும் வெகுஜனப் பயன்பாட்டில் இடம் பிடித்துவிட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜார்ஜ்_ஆர்வெல்&oldid=3459613" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்