ஜார்ஜியா மெலோனி

2022 முதல் இத்தாலியின் பிரதம அமைச்சராக பணிபுரிகிறார்.

ஜார்ஜியா மெலோனிGiorgia Meloni ; ஜனவரி 15, 1977 இல் பிறந்தவர்[1][2] ஓர் இத்தாலிய அரசியல்வாதி ஆவார். இவர் அக்டோபர் 2022 முதல் இத்தாலியின் பிரதமராக பணியாற்றி வருகிறார். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவரே ஆவார். 2006 ஆம் ஆண்டு முதல் இத்தாலிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினரான[3][4] இவர் 2014 முதல் இத்தாலியின் சகோதரர்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை வழிநடத்தி வருகிறார்.[5] மேலும் இவர் 2020 முதல் ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தவாதிகள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

ஜார்ஜியா மெலோனி
2023 இல் ஜார்ஜியா மெலோனி
ஜார்ஜியா மெலோனி
இத்தாலியின் பிரதம அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 அக்டோபர் 2022
குடியரசுத் தலைவர்செர்ஜியோ மாட்டரேல்லா
முன்னையவர்மரியோ திராகி
இத்தாலியின் சகோதரர்கள் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2014
ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தவாதிகள் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 செப்டம்பர் 2020
இத்தாலிய அரசின் இளைஞர் துறை அமைச்சர்
பதவியில்
8 மே 2008 – 16 நவம்பர் 2011
பிரதமர்சில்வியோ பெர்லுஸ்கோனி
இத்தாலிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 ஏப்ரல் 2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1977 (1977-01-15) (அகவை 47)
உரோம், Lazio, Italy
துணைஆண்டுரூசு ஜியாம்புருனோ (2015–2023)
பிள்ளைகள்1
கையெழுத்து
இணையத்தளம்

1992 இல், மெலோனி இத்தாலிய பாசிசத்தை முன்னர் பின்பற்றியவர்களால்[1] 1946 இல் நிறுவப்பட்ட நவ-பாசிச அரசியல் கட்சியான இத்தாலிய சமூக இயக்கத்தின் இளைஞர் படையில் சேர்ந்தார்.[6] பின்னர் இவர் 1995 இல் அதன் சட்டப்பூர்வ வாரிசாக மாறி தேசிய பழமைவாதத்தை நோக்கி நகர்ந்த ஒரு பிந்தைய பாசிசக் கட்சியான தேசியக் கூட்டணியின் மாணவர் இயக்கத்தின் தேசியத் தலைவரானார்.[7] இவர் 1998 முதல் 2002 வரை உரோம் மாகாணத்தின் அவை உறுப்பினராக இருந்தார்.[8][9]

ஆட்சிக்கு வருதல்

அதன் பிறகு இவர் தேசியக் கூட்டணியின் இளைஞர் பிரிவின் தலைவரானார்.[10] 2008 இல், அவர் நான்காவது பெர்லுஸ்கோனி அரசாங்கத்தில் இத்தாலிய இளைஞர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[11][12] இவர் 2014 ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 உரோம் நகராட்சித் தேர்தல்களில் தோல்வியுற்றார். 2018 இத்தாலிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு, இவர் 18 வது இத்தாலிய சட்டமன்றத்தின் போது எதிர்க்கட்சியை வழிநடத்தினார். கருத்துக் கணிப்புகளில் இவரது கட்சியின் பிரபலம் அதிகரித்தது. குறிப்பாக 2020 இத்தாலியில் கொரோனா வைரசு தொற்றுநோயை நிர்வகித்த திராகியின் அமைச்சரவை கட்டுப்படுத்த முடியாமல் போன்போது இவர் எதிர்க் கட்சியாக இருந்து தேசிய ஒன்றிணைவு அரசாங்கம் மூலம் நோய் தொற்றை நிர்வகித்தார். 2022 இல் இத்தாலிய ஏற்பட்ட அரசாங்க நெருக்கடியில் திராகி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தோல்வியைத் தொடர்ந்து நடைபெற்ற 2022 இத்தாலிய பொதுத் தேர்தலில் இவரது இத்தாலியின் சகோதரர்கள் கட்சி வெற்றி பெற்றது .

அரசியல் நிலைப்பாடு

ஒரு வலதுசாரி ஜனரஞ்சகவாதி மற்றும் தேசியவாதியாக, இவரது அரசியல் நிலைப்பாடுகள் தீவிர வலதுசாரிகளாக விவரிக்கப்பட்டுள்ளன.[13][14][15] இவர் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் ஒரு பழமைவாதி என்றும் கூறிக்கொள்கிறார்.[16][17][18] இவர் வதையா இறப்பு, ஒருபால் திருமணம் மற்றும்வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்டவர்களுக்கு எதிரானவர். தனிக் குடும்பங்கள் பிரத்தியேகமாக ஆண்-பெண் ஆகிய இருவரால் வழிநடத்தப்படுகின்றன என்று கூறுகிறார்.[19][20][21]

பெண்ணியம்

இவரது சொற்பொழிவில் பெண்ணியவாத சொல்லாட்சி மற்றும் உலகமயம் பற்றிய விமர்சனம் அதிகம் இடம் பெறுகிறது.[22] மெலோனி குடியேற்றத்தை நிறுத்த கடற்படை முற்றுகையை ஆதரிக்கிறார்.[23] மேலும் இவர் இனவெறி மற்றும் இஸ்லாமோபோபியா என்றும் குற்றம் சாட்டப்பட்டார். நேட்டோவின் ஆதரவாளரான இவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு பற்றிய விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் நிலைப்பாடைக் கொண்டுள்ளார். மேலும் 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பிற்கு முன்பு உருசியாவுடன் சிறந்த உறவுகளுக்கு ஆதரவாக இருந்தார், அதன் பிறகு இவர் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதாக உறுதியளித்தார். முசோலினியின் இத்தாலிய சமூகக் குடியரசின் அமைச்சரவைத் தலைவரான ஜியோர்ஜியோ அல்மிரான்டேவை 2020 இல் பாராட்டியது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை மெலோனி வெளிப்படுத்தினார். அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸின் 2023 ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் மெலோனி நான்காவது இடத்தைப் பிடித்தார்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜார்ஜியா_மெலோனி&oldid=3898550" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்