ஜான் பில்கர்

ஆத்திரேலிய ஊடகவியலாளர்

ஜான் ரிச்சர்ட் பில்கர் ( John Richard Pilger ) 9 அக்டோபர் 1939 - 30 டிசம்பர் 2023) ஓர் ஆத்திரேலியப் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், அறிஞரும் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளரும் ஆவார். [1] 1962 முதல், இவர் முக்கியமாக பிரிட்டனில் இருந்தார். [2] [3] [4] நியூயார்க்கில் உள்ள கோர்னெல் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்தார். [5]

ஜான் பில்கர்
2011இல் ஜான் பில்கர்
பிறப்பு(1939-10-09)9 அக்டோபர் 1939
பான்டி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
இறப்பு30 திசம்பர் 2023(2023-12-30) (அகவை 84)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்
  • ஆத்திரேலியர்
  • பிரித்தானியர்
கல்விசிட்னி ஆண்கள் உயர்நிலைப் பள்ளி
பணி
  • பத்திரிகையாளர்
  • எழுத்தாளர்
  • ஆவணப் படத் தயாரிப்பாளர்
துணைவர்இவோன் ராபர்ட்சு
வாழ்க்கைத்
துணை
இசுகார்த் பிளெட்
பிள்ளைகள்சோ பில்கர் உட்பட இருவர்
விருதுகள்Full list
வலைத்தளம்
Official website

பில்கர் அமெரிக்க, ஆத்திரேலிய மற்றும் பிரிட்டிசு வெளியுறவுக் கொள்கையை விமர்சித்தவர். அது ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படுவதாக இவர் கருதினார். ஆத்திரேலியப் பழங்குடிகளை தனது சொந்த நாட்டில் நடத்துவதை இவர் விமர்சித்தார். கம்போடிய இனப்படுகொலை பற்றிய அறிக்கைகளுக்காக இவர் முதலில் சர்வதேச கவனத்தை ஈர்த்தார். [6]

சொந்த வாழ்க்கை

பில்கர், மருத்துவரும் மற்றும் புவியியலாளருமான சர் ஜான் சுமித் பிளெட் என்பரின் பேத்தியான பத்திரிகையாளர் இசுகார்த் பிளெட் என்பவரை மணந்தார். [7] இவர்களுக்கு சாம் என்ற ஒரு மகன் 1973 இல் பிறந்தார். சாம் ஒரு விளையாட்டு சார்பான எழுத்தாளர் ஆவார். பில்கருக்கு பத்திரிக்கையாளர் இவோன் ராபர்ட்சு என்பவர் மூலம் ஜோ பில்கர் என்ற ஒரு மகளும் 1984 இல் பிறந்தார்.[8] ஜோ ஒரு எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகராக இருக்கிறார்.

தொழில் வாழ்க்கை

ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளராக பில்கரின் வாழ்க்கையானது தி க்வைட் மியூட்டினி (1970) என்ற படத்தில் தொடங்கியது. இது இவர் வியட்நாமுக்குச் சென்றபோது தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு 50 க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களுடன் தொடர்ந்தது. கம்போடியாவில் கெமர் ரூச் ஆட்சியாளர் போல் பாட் ஆட்சியின் பின்விளைவுகள் பற்றிய இயர் ஜீரோ (1979), மற்றும் டெத் ஆஃப் எ நேஷன்: தி திமோர் பிளாட் (1993) ஆகியவை இதே போன்ற ஆவணப் படைப்புகள் ஆகும். பூர்வீக ஆத்திரேலியர்கள் பற்றிய இவரது பல ஆவணப் படங்களில் தி சீக்ரெட் கன்ட்ரி (1985) மற்றும் உட்டோபியா (2013) ஆகியவையும் அடங்கும். பிரித்தனின் டெய்லி மிரர் என்ற அச்சு ஊடகத்தில், பில்கர் 1963 முதல் 1986 வரை பணிபுரிந்தார், [9] 1991 முதல் 2014 வரை நியூ ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையிலும் வழக்கமாக கட்டுரை எழுதினார்.

பில்கர் 1967 மற்றும் 1979 இல் பிரிட்டனின் சிறந்த பத்திரிகையாளர் விருதை வென்றார். இவரது ஆவணப்படங்கள் பிரிட்டன் மற்றும் உலகளவில் பிரிட்டன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாதமி விருது[9] உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளன.

இறப்பு

பில்கர் 30 டிசம்பர் 2023 அன்று இலண்டனில் நுரையீரல் பாதிப்பு காரணமாக தனது 84 வயதில் இறந்தார். [10] [11]

கௌரவம்

பிரித்தானிய நூலகத்தில் ஜான் பில்கரின் காப்பகம் உள்ளது.[12]

உசாத்துணை

  • Hidden Agendas (1998)
  • Reporting the World: John Pilger's Great Eyewitness Photographers (2001)
  • The New Rulers of the World (2002; 4th ed. 2016)
  • Tell Me No Lies: Investigative Journalism and its Triumphs (ed.) Cape (2004)
  • Freedom Next Time (2006)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜான்_பில்கர்&oldid=3860708" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்