ஜவுன்பூர்

ஜவுன்பூர் (Jaunpur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அமைந்த ஜவுன்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். ஜவுன்பூர் நகரம், மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 228 கிலோ மீட்டர் தொலைவில் கோமதி ஆற்றின் கரையில் உள்ளது. இது வாரணாசியிலிருந்து 69 கிலோ மீட்டர் தொலைவிலும், அலகாபாத்திலிருந்து 142 கி மீ தொலைவிலும், அயோத்தியிலிருந்து 153 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

ஜவுன்பூர்
நகரம்
சாகி பாலம், ஜவுன்பூர்
சாகி பாலம், ஜவுன்பூர்
ஜவுன்பூர் is located in உத்தரப் பிரதேசம்
ஜவுன்பூர்
ஜவுன்பூர்
ஜவுன்பூர் is located in இந்தியா
ஜவுன்பூர்
ஜவுன்பூர்
ஆள்கூறுகள்: 25°44′N 82°41′E / 25.73°N 82.68°E / 25.73; 82.68
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஜவுன்பூர்
நிறுவப்பட்ட ஆண்டு1359
பெயர்ச்சூட்டுமுகமது பின் துக்ளக்
(புனைபெயர் - ஜவுனா கான்)
ஏற்றம்
82 m (269 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,80,362
 • அடர்த்தி1,113/km2 (2,880/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி[2]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது[2]
 • வட்டார மொழிஅவதி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுUP-62
பாலின விகிதம்1000 ஆண்களுக்கு 925 பெண்கள்
இணையதளம்jaunpur.nic.in

வரலாறு

ஜவுன்பூர் சுல்தான் இப்ராகிம் ஷாவின் நாணயம்

முகமது பின் துக்ளக்கின் புனைப்பெயரான ஜவுனா கான் பெயரில் தில்லி சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக் ஜவுன்பூர் நகரத்தை 1359-ஆம் ஆண்டில் நிறுவினார்.[3][4] அதற்கு முன்னர் இப்பகுதிகளை இந்து சத்திரிய மன்னர்கள் ஆண்டனர். 1388-ஆம் ஆண்டில் பெரோஸ் ஷா துக்ளக் மாலிக் சர்வார் என்பவரை ஜவுன்பூர் பகுதிக்கு ஆளுநராக நியமித்தார். பெரோஸ் ஷா துக்ளக் இறந்த பிறகு, 1393-ஆம் ஆண்டில் மாலி சர்வார் மற்றும் அவரது மகன் முபாரக் ஷா (சர்க்கி வம்சம்) ஜவுன்பூர் பிரதேசத்தை தன்னாட்சியுடன் சுல்தான் என்ற பட்டப்பெயருடன் ஆண்டனர். பெரும் படைகளுடன் ஆண்ட ஜவுன்பூர் சுல்தானகம், தில்லி சுல்தானகத்திற்கு கேடாக அமையும் என நினைத்தனர்.

ஜவுன்பூர் சுல்தான் முபாரக் ஷா எனும் சம்சுத்தீன் இப்ராகிம் ஆட்சிக் காலத்தில் (1402–1440) கிழக்கில் பிகார் முதல், மேற்கில் கன்னோசி வரை தனது ஆட்சி அதிகாரத்தை விரிவாக்கினார். மேலும் வங்காளப் பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த கணேச வம்சத்தின் மன்னர் இராஜா கணேசனையும் மிரட்டினர்.[5]

ஜவுன்பூர் சுல்தான் உசைன் ஷா (1456–76) ஆட்சியின் போது, பெரிய படைகளுடன் தில்லியை மூன்று முறை தாக்கியது. இருப்பினும் தில்லி சுல்தான் பஹ்லுல் கான் லோடி படைகள் ஜவுன்பூர் சுல்தானின் பெரிய படைகளை தாக்கி அழித்தது. இறுதியில் 1493-ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் சிக்கந்தர் லோடி ஜவுன்பூர் சுல்தானை வீழ்த்தி, ஜவுன்பூர் இராச்சியத்தை தில்லி சுல்தானகத்துடன் இணைத்துக் கொண்டார்.

பின்னர் முகலாயப் பேரரசின் கீழிருந்த ஜவுன்பூர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, 1779-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது ஜவுன்பூரில் இருந்த சீக்கியச் சிப்பாய்க்கள் ஜவுன்பூர் நகரத்தைக் கைப்பற்றினர். பின்னர் கிழக்கிந்தியக்க் கம்பெனியின் நேபாள கூர்க்கா படைகள் ஜவுன்பூரை சீக்கியப் படைகளிடமிருந்து கைப்பற்றினர்.

புவியியல்

ஆறுகள்

உத்தரப் பிரதே மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அமைந்த ஜவுன்பூர் நகரத்தில் கோமதி ஆறு, சாய், வருண், பிலி மற்றும் பசுகி என 5 ஆறுகள் பாய்வதால், இப்பகுதி வளமான வண்டல் மண் கொண்டுள்ளது.[6]

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குடும்பங்களும், வார்டுகளும் கொண்ட ஜவுன்பூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 1,80,362 ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 93,718 மற்றும் பெண்கள் 86,644 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 22,710 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 925 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.22 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 63.48%, இசுலாமியர் 33.28%, கிறித்தவர்கள் 0.17%, சீக்கியர்கள் 0.31% மற்றும் பிறர் 2.76% ஆக உள்ளனர்.[7]

போக்குவரத்து

ஜவுன்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
ஜவுன்பூர் நகரத் தொடருந்து நிலையம்

ஜவுன்பூரின் ஜவுன்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் ஜவுன்பூர் நகரத் தொடருந்து நிலையங்கள் உள்ளது. இது பிரயாக்ராஜ், வாரணாசி, சுல்தான்பூர், ஷாகஞ்ச், காஜிப்பூர், கான்பூர், லக்னோ நகரங்களை இருப்புப் பாதைகள் மூலம் இணைக்கிறது.

வானூர்தி நிலையம்

ஜவுன்பூரிலிருந்து லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கோள்காள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜவுன்பூர்&oldid=3813617" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்