ஜல்பைகுரி
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
ஜல்பைகுரி | |
---|---|
மாநகராட்சி | |
TOP TO BOTTOM : டீஸ்டா ஆறு, ராய்கட், மகாத்மா காந்தி சாலை, குறுகிய சந்து, வைகுந்தப்பூர் அரண்மனை, தர்லா ஆறு நகரக் காட்சி | |
ஆள்கூறுகள்: 26°31′N 88°44′E / 26.52°N 88.73°E / 26.52; 88.73 | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஜல்பைகுரி |
நிறுவப்பட்ட ஆண்டு | 1869 |
தோற்றுவித்தவர் | பிரித்தானிய இந்தியா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | ஜல்பைகுரி மாநகராட்சி மன்றம் |
• மேயர் | (அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு) |
பரப்பளவு | |
• மொத்தம் | 90.29 km2 (34.86 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 6-ஆம் இடம் (மேற்கு வங்காளத்தில்) |
ஏற்றம் | 89 m (292 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 3,03,874 |
• தரவரிசை | 9-ஆம் இடம் (மேற்கு வங்காளத்தில்)[2] |
• அடர்த்தி | 3,400/km2 (8,700/sq mi) |
இனம் | ஜல்பைகுரியர்கள் |
மொழிகள் | |
• அலுவல் | வங்காளம்[3][4] |
• Additional official | ஆங்கிலம்[3] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 735 101-735 110 (city limits), 735120-735135 (suburbs) |
தொலைபேசி குறியீடு | +91356 |
வாகனப் பதிவு | WB-71, WB-72 2 |
மக்களவைத் தொகுதி | ஜல்பைகுரி மக்களவைத் தொகுதி, அலிப்பூர்துவார் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதிகள் | ஜல்பைகுரி சட்டமன்றத் தொகுதி, ராஜ்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி, (தனி), மைனாகுரி சட்டமன்றத் தொகுதி, தப்கிராம்-பூல்பாரி சட்டமன்றத் தொகுதி, |
இணையதளம் | jalpaigurimunicipality |
1The coordinates given here are in metric system and based upon the Microsoft Encarta Reference Library Map Center 20052 The Vehicle Code given here based upon the Jalpaiguri District Court documentations. |
ஜல்பைகுரி (Jalpaiguri) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் அமைந்த ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். தீஸ்தா ஆற்றின் கரையில் அமைந்த ஜல்பைகுரி நகரம், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அமர்வு (Bench) செயல்படுகிறது. இந்நகரத்தில் ஜல்பைகுரி அரசு பொறியியல் கல்லூரி, வடக்கு வங்காளப் பல்கலைக்கழகத்தின் வளாகம், வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் ஜல்பைகுரி விளையாட்டு கிராமம் செயல்படுகிறது. சிலிகுரியிலிருந்து 35 கிமீ தொலைவில் ஜல்பைகுரி உள்ளது.
பூட்டானிய மொழியில் ஜல்பைகுரி என்பதற்கு கம்பளி ஆடைகள் விற்கும் இடம் எனப்பொருளாகும்.[5]
ஜல்பைகுரி நகரம் 26°31′N 88°44′E / 26.52°N 88.73°E / 26.52; 88.73 பாகையில் அமைந்துள்ளது.[6] இது கடல்மட்டத்திலிருந்து 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் உள்ளது. ஜல்பைகுரியில் டீஸ்டா ஆறு பாய்கிறது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜல்பைகுரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,07,341[7] (அதில் ஆண்கள் 53,708 மற்றும் பெண்கள் 53,633 ), ஜல்பைகுரி மாநகரத்தின் புறநகர் பகுதியுடன் சேர்த்து மொத்த மக்கள்தொகை 1,69,002[8] (அதில் ஆண்கள் 85,226 மற்றும் பெண்கள் 83,8787)0–6 ஆறுவயதிற்குட்டவர்களின் எண்ணிக்கை 14,522 ஆகும். எழுத்தறிவு 90.64 % ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர்.இந்நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 96.16 %, இசுலாமியர்கள் 2.94 %, கிறித்தவர்கள் 0.42 %, பௌத்தர்கள் 0.35%, மற்ற சமயத்தவர்கள் 0.13% ஆகவுள்ளனர்.
45 மாமன்ற உறுப்பினர்களுடன் கூடிய ஜல்பைகுரி மாநகராட்சி, இந்நகரத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது.
ஜல்பைகுரி மாநகரம் மற்றும் புறநகரங்களில் ஐந்து தொடருந்து நிலையங்களைக் கொண்டது. அவைகள்;
வடக்கு வங்காள போக்குவரத்துக் கழக பேருந்துகள், ஜல்பைகுரி நகரத்திலிருந்து, மேற்கு வஙகாளத்தின் பிற நகரங்களையும் மற்றும் பிகார் மாநில தலைநகர் பாட்னா மற்றும் பூட்டான் நாட்டின் தெற்கு பகுதிகளுடன் இணைக்கிறது.
ஜல்பைகுரி நகரம் கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என மூன்று தட்பவெப்பங்களைக் கொண்டது.கோடைக்காலத்தில் இங்கு பதிவான உயர்ந்தபட்ச வெப்பநிலை 41.3 பாகை செல்சியஸ் ஆகும். மழைக்காலத்தில் அதிக கனமழைபொழிவு கொண்டிருக்கும். குளிர்காலத்தில் 8 - 14 பாகை செல்சியஸ் வெப்பம் கொண்டிருக்கும்.[10] கடந்த சில ஆண்டுகளாக இந்நகரத்தில் அதிக வெப்பமும்; மழைப்பொழிவு குறைந்தும் வருகிறது. [11]
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜல்பைகுரி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 23 (73) | 25 (77) | 28 (82) | 31 (88) | 33 (91) | 35 (95) | 34 (93) | 31 (88) | 28 (82) | 26 (79) | 24 (75) | 23 (73) | 28.4 (83.2) |
தாழ் சராசரி °C (°F) | 3 (37) | 10 (50) | 13 (55) | 21 (70) | 24 (75) | 25 (77) | 26 (79) | 25 (77) | 23 (73) | 16 (61) | 10 (50) | 4 (39) | 16.7 (62) |
பொழிவு mm (inches) | 8 (0.31) | 18 (0.71) | 33 (1.3) | 94 (3.7) | 300 (11.81) | 658 (25.91) | 818 (32.2) | 643 (25.31) | 538 (21.18) | 142 (5.59) | 13 (0.51) | 5 (0.2) | 3,266 (128.58) |
ஆதாரம்: Jalpaiguri Weather |
தட்பவெப்பநிலை வரைபடம் Jalpaiguri | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
14 26 11 | 19 29 15 | 25 34 19 | 31 38 24 | 87 39 26 | 275 39 26 | 334 32 26 | 338 32 25 | 239 32 25 | 78 31 22 | 15 29 17 | 24 26 12 | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
![]() | இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம். |
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி