சௌந்தரராஜா

நடிகர்

சௌந்தரராஜா (Soundararaja) என்பவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழ் திரையுலக நடிகர் மற்றும் குறும்பட இயக்குநர் ஆக பணிபுரிந்தார்.[1]. தொகுப்புப் பொறியாளராக சிங்கப்பூர் மற்றும் பிரான்சில் பணிபுரிந்ததைத் தொடர்ந்து அவர் நடிப்பை ஒரு தொழிலாகக் கருதத் தொடங்கினார். ஒரு பின்னணி நடிகராகப் பணியாற்றினார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறிய துணை வேடங்களில் நடித்தார். சுந்தரபாண்டியன் (2012) மற்றும் ஜிகர்தண்டா (2014) ஆகிய படங்களில் வில்லனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு மீண்டும் பல்வேறு திட்டங்களில் பல வேடங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் தர்ம துரையில் மீண்டும் வில்லனாக நடித்தார். இதே ஆண்டில் கவுண்டமணியுடன் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையது (2016) திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

சௌந்தரராஜா
Soundararaja
தாய்மொழியில் பெயர்சௌந்தரராஜா
பிறப்புஆகத்து 11, 1983 (1983-08-11) (அகவை 40)
உசிலம்பட்டி, மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
பணிநடிகர், தயாரிப்பாளர், சமூகச் செயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–முதல்
அறியப்படுவதுசுந்தர பாண்டியன் (திரைப்படம்)
வாழ்க்கைத்
துணை
தமன்னா சௌந்தரராஜா

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 11 ஆம் தேதியன்று மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையைத் தொடங்கினார். நம்பிக்கையாளர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் இருபத்தைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை நட்டுள்ளார். ஒரு சமூக ஆர்வலராக தமிழகம் முழுவதும் பல முக்கிய சமூக விவகாரங்களில் பங்கேற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் இவர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுடன் உரையாடிய ஜல்லிக்கட்டு ஆதரவுக் குழுவின் பிரதிநிதிகளில் இவரும் ஒருவர்.[2][3][4]

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சொந்த ஊரில் முடித்துவிட்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். பள்ளியில் இருந்தே சராசரிக்கும் குறைவான மாணவராக இருந்தார். மேலும் விளையாட்டு அல்லது பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் பொதுவாக இவர் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் நிறைய நிகழ்ச்சிகளை செய்தார்.

சில்லறை விற்பனைக் கடையில் விற்பனையாளர், விளம்பரதாரர் மற்றும் பல பகுதிநேர வேலைகள் செய்தார். 2004 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பார்த் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து பிரான்சு நிறுவனத்திற்கு மாறினார். 2007 இல் கத்தாரில் பணிபுரிந்தார்.

2008 இல் இந்தியா திரும்பினார். மதுரை டூரிங் டாக்கீசு என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தனது பால்ய நண்பரான காக்கா முட்டையின் இயக்குநரான எம்.மணிகண்டனுடன் இணைந்து தொடங்கினார். மேலும் நண்பர்களுடன் பங்குச் சந்தை வியாபாரத்தில் சிறிது பணத்தை முதலீடு செய்தார். பின்னர் கூத்துப் பட்டறையில் யில் சேர்ந்தார். இவரும் இவரது நண்பர்களான மணிகண்டன் மற்றும் ஜிகர்தண்டா இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் துரு, ராவணம், காற்று, அறம் பல குறும்படங்களைத் தயாரித்தனர்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்குறிப்புகள்
2012வேட்டை (திரைப்படம்)மதுர
Sundarapandiyanபரஞ்ஜோதி
2013நளனும் நந்தினியும்முத்து
வருத்தப்படாத வாலிபர் சங்கம்புளிச்சத்தண்ணி
2014ஜிகர்தண்டாபொன்ராம்
அதிதிசிவா
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணிதிரு
பூஜை (திரைப்படம்)சௌந்தர்
2016தெறிகார்த்திக்
தர்மதுரைஅர்ச்சுணன்
எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதுபிரபா நந்தன்
ரெக்க
கத்தி சண்டைசௌந்தர்
2017தொண்டன்சின்னபாண்டி
சத்திரியன்நிரஞ்சன்
தங்கரதம்பரமன்
ஒரு கனவு போலஜோசப்பு
திருட்டுப்பயலே 2மாரி
2018கடைக்குட்டி சிங்கம்கொடிமாறன்
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்ராஜபாண்டி
கள்ளன்செல்வம்
அருவாசண்டைபாண்டி
2019காஃபிஅக்கீம்
சிந்துபாத்துஅரசியல்வாதி
பிகில்குணா
சங்கத்தமிழன்முருகன்
2021குருதிக்களம்அருண்வலைத் தொடர்
ஜகமே தந்திரம்பரமன்
ஆனந்தம் விளையாடும் வீடுசெல்வம்
2022கள்ளன்

பதக்கம்

  • தமிழ்நாடு பாரத் சிறந்த​ வில்லன் பதக்கம்(2012) சுந்தர பாண்டியன் படத்திற்காகப் பெற்றார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சௌந்தரராஜா&oldid=3742230" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்