சோபியா மகளிர் கல்லூரி,மும்பை

சோபியா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) என்பது 1941 ஆம் ஆண்டில் இயேசுவின் புனித இதயத்தின் சகோதரிகள் என்ற தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இளங்கலை பெண்கள் கல்லூரி ஆகும். மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி,[1] இயேசுவின் புனித இதயத்தின் மத சகோதரிகளின் பெண்களின் உயர் கல்விக்கான சங்கத்தின் நிர்வாகக் குழு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சோபியா, என்ற பெயருக்கு கிரேக்க மொழியில் ஞானம் என்பது அர்த்தமாகும் [2][3][4]

சோபியா மகளிர் கல்லூரி,மும்பை
குறிக்கோளுரைஊர்த்வ முலா
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
வேர்கள் மேல்நோக்கி
வகைதன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி
உருவாக்கம்1940
நிறுவுனர்இயேசுவின் திருஇருதய சங்கம்
சார்புமும்பை பல்கலைக்கழகம்
Academic affiliation
கத்தோலிக்க திருச்சபை
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
முதல்வர்முனைவர் அனகா டெண்டுல்கர் பாட்டீல்
அமைவிடம்
புலாபாய் தேசாய் சாலை
, , ,
400026
,
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம், இந்தி
இணையதளம்கல்லூரி இணையதளம்

வரலாறு

இயேசுவின் புனித இதயத்தின் சகோதரிகள், என்ற ரோமன் கத்தோலிக்க கிறித்தவ அமைப்பானது 1800 ஆம் ஆண்டில் பிரான்சில் ஒரு இளம் பிரெஞ்சு பெண்மணியான செயின்ட் மேதலின் சோபி பாராட் என்பவரால் நிறுவப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் சவுத் ஷீல்ட்ஸைச் சேர்ந்த கேத்தரின் ஆண்டர்சன் [5] என்பவரால் இந்த அமைப்பு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சோபியா கல்லூரி வளாகப் பகுதி மற்றும் அருகிலுள்ள நிலம் ஆகியவை ஆரம்பத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமானதாக இருந்து, பின்னர் பிரிக்கப்பட்டு பல்வேறு நபர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் விற்கப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டில் அப்போதைய உரிமையாளரான பவநகர் மகாராஜாவிடமிருந்தும் சோமர்செட் வீடு, சோமர்செட் சுற்றுப்புறம் மற்றும் மைதானங்களை வாங்கி, கல்லூரி மற்றும் சமூக கலாச்சார மையம் பேராயர் ராபர்ட்ஸ் என்பவரால் சோபியா கல்லூரி (தன்னாட்சி) என்ற பெய்யரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அன்னை ஆண்டர்சன் என்பவரே இதன் முதல் முதல்வராவார்.

கல்லூரி படிக்கற்கள்

  • 1941 ஆம் ஆண்டில் கலைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு பம்பாய் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் ஆண்டு மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு தற்காலிக இணைப்பு வழங்க்கப்பட்டது.
  • 1942 ஆம் ஆண்டில் இளங்கலை கலை வகுப்புகளுக்கு இந்த இணைப்பு நீட்டிப்பு வழங்கப்பட்டது.
  • 1945 ஆம் ஆண்டில், சோபியாவின் குறிக்கோள், முகடு மற்றும் வண்ணங்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • 1950 ஆம் ஆண்டில், பம்பாய் பல்கலைக்கழகம் இக்கல்லூரிக்கு நிரந்தர இணைப்பு வழங்கியுள்ளது.
  • இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, 1952 ஆம் ஆண்டில், அறிவியல் பிரிவு, இடைநிலை அறிவியல் நிலை வரை வகுப்புகளுடன் தொடங்கப்பட்டது.
  • பத்மஸ்ரீ இந்திய குடிமகன் விருதைப் பெற்ற கருணா மேரி பிரகன்சா, 1965 ஆம் ஆண்டில் இக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.[6]
  • 1966 ஆம் ஆண்டில், இடைநிலை அறிவியல் பாடமானது இளங்கலை அறிவியல் பட்டமாக நீட்டிக்கப்பட்டது.
  • 1970 ஆம் ஆண்டில், சோபியா தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 1975 ஆம் ஆண்டில், இடைநிலை கல்லூரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 1978 ஆம் ஆண்டில், மருத்துவப் பகுப்பாய்வு முதுகலை பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  • 1993 இல், உணவு மற்றும் மருந்துத் தொழில்களில் தரக் காப்பீட்டில் முதுகலை பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெண்கள் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டுக்கான சோபியா மையம் மற்றும் சோபியா ஆண்டர்சன் இணைப்பு திறக்கப்பட்டுள்ளது.
  • 2003 ஆம் ஆண்டில், வெகுஜன ஊடக இளங்கலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அதே ஆண்டில் பயன்பாட்டு உயிரியலில் முனைவர் பட்டத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2013 ஆம் ஆண்டில் இளங்கலை அறிவியல் பிரிவில் தகவல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் இக்கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக் குழுவினால் (UGC) தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.[7]

துறைகள்

விருந்தோம்பல் ஆய்வுகள் (HAFT), கலை மற்றும் வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் சமூக தொடர்பு ஊடகங்கள் ஆகியவை இக்கல்லூரியில் இயங்கி வரும் துறைகளாகும்.

விருந்தோம்பல் ஆய்வுகள் (HAFT)

கலை & வடிவமைப்பு

மகாராஷ்டிரா அரசின் கலை இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கலை மற்றும் வடிவமைப்புத் துறை பின்வரும் படிப்புகளை நடத்துகிறது:

  • அடிப்படைக் கலை,
  • பயன்பாட்டு கலையில் பட்டயப்படிப்பு
  • ஆடை வடிவமைப்பில் பட்டயப்படிப்பு [8][9]

ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உற்பத்தி துறை

சமூக தொடர்பு ஊடகம்

இக்கல்லூரியின் சமூகத் தொடர்பு ஊடகத் துறை (SCM Sophia), நாற்பதுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமூகத் தொடர்பு ஊடகத்தில் ஒரு வருட, முழுநேர, ஒருங்கிணைந்த முதுகலை பட்டயப் படிப்பை நடத்திவருகிறது. இந்த படிப்பு மும்பை பல்கலைக்கழகத்தின் கார்வேர் தொழில் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பாடத்திட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

  • பாடநெறி ஆவணப்பட தயாரிப்பு,[10]
  • புகைப்படம் எடுத்தல்,[11]
  • பத்திரிகை,
  • பெருநிறுவன தொடர்பு மற்றும்
  • விளம்பரம் ஆகியவற்றை வழங்குகிறது.[12]

இதன் முன்னாள் மாணவர்களான தீபா பாட்டியா, ரீமா காக்டி, ரிச்சா சதா, அனுபா போஸ்லே, ரசிகா துகல் ஆகியோர் இப்படிப்பை பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவார்.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்