சோன்பூர் சமஸ்தானம்

சோன்பூர் சமஸ்தானம் (Sonepur State),[1]1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால ஒடிசா மாநிலத்தின் சுபர்ணாபூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோன்பூர் சமஸ்தானம் 2,347 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,69,877 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

சோன்பூர் சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1650–1948

Coat of arms of சோன்பூர்

சின்னம்

Location of சோன்பூர்
Location of சோன்பூர்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் சோன்பூர் சமஸ்தானம்
தலைநகரம்சுபர்ணாபூர்
வரலாறு
 • நிறுவப்பட்டது1650
 • இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்1948
Population
 • 19011,69,877 

வரலாறு

ஒடிசா பகுதியில் கீழைக் கங்கர் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர், கிபி 1650-ஆம் ஆண்டில் சம்பல்பூர் இராச்சிய மன்னர் மதுகர் தேவ் சோன்பூர் இராச்சியப் பகுதிகளை கைப்பற்றி, தனது மகன் மதன் கோபாலை சோன்பூர் சமஸ்தானத்தின் மன்னராக்கினார்.[2] 1800-ஆம் ஆண்டில் சோன்பூர் சமஸ்தானம் மராத்தியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. 1803-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரின் முடிவில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் வெற்றிபெற்றனர். இதனால் மராட்டியர் வசமிருந்த சோன்பூர் சமஸ்தானம் உள்ளிட்ட ஒடிசா பகுதிகளும் ஆங்கிலேயரின் கீழ்வந்தது.

1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சோன்பூர் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் கிழக்கிந்திய முகமையின் கீழ் செயல்பட்டது. சோன்பூர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.[3][4]முதலில்

சோன்பூர் சமஸ்தானம் முதலில் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1936வது ஆண்டு வரை பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்துடன் இணக்கப்பட்டது. பின்னர் 1936-ஆம் ஆண்டில் புதிய [[ஒரிசா மாகாணம்|ஒரிசா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சோன்பூர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணத்தில் சேர்க்கப்பட்டது. மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஒரியா மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1956 அன்று ஒடிசா மாநிலம் நிறுவப்பட்ட போது சோன்பூர் சமஸ்தானப் பகுதிகள் சுபர்ணாபூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சோன்பூர்_சமஸ்தானம்&oldid=3378887" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்