சோடியம் இரசக்கலவை

சோடியம் இரசக்கலவை (Sodium amalgam) பொதுவாக Na(Hg) என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. பாதரசம் உலோகமும் சோடியம் உலோகமும் சேர்ந்து இக்கலவை உருவாகிறது. பொதுவாக இரசக்கலவை என்ற சொல் பாதரசம் பெரும்பான்மை பகுதிக்கூறாகச் சேர்ந்துள்ள கலப்புலோகம், உலோகமிடைச் சேர்மங்கள், திண்மக் கரைசல்கள், நீர்மக் கரைசல்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. திண்ம சோடியத்துடன் ஒப்பிடும்போது எளிதாக கையாளும் பண்புகளுடன் ஒரு வலுவான குறைக்கும் முகவராக வேதி வினைகளில் சோடியம் இரசக்கலவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இரசக்கலவைகள் தண்ணீருடன் குறைவான ஆபத்து விளைவிப்பவையாக வினைபுரிகின்றன. உண்மையில் இவை நீரிய தொங்கல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டமைப்பும் இயைபும்

சோடியம் இரசக்கலவைக்கென்று குறிப்பாக எந்தவொரு மூலக்கூறு வாய்ப்பாடும் வரையறுக்கப்படவில்லை. Na5Hg8 , Na3Hg என்ற இரண்டு வெவ்வேறு இரசக்கலவைகள் மட்டும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன. சோடியம் இரசக்கலவையில் Hg-Hg பிணைப்பு இடைவெளி 3 Å முதல் 5 Å வரை அளவுகள் கொண்டுள்ளன[1]. பொதுவாக சோடியம் இரசக்கலவைகள் சோடியம் உலோகத்தின் எடை சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. அறை வெப்பநிலையில் 2% Na கொண்ட இரசக்கலவைகள் திண்மமாக உள்ளன. அதேசமயத்தில் இன்னும் சில நீர்த்த இரசக்கலவைகள் திரவமாக நீடித்திருக்கின்றன [2].

தயாரிப்பு

சோடியம் உலோகம் பாதரசத்தில் வெப்பத்தை உமிழ்ந்தபடி கரைகிறது. எனவே சோடியம் இரசக்கலவை உருவாக்கம் என்பது தீப்பொறிகளை உருவாக்கும் ஒரு வினையாக நிகழ்கிறது இந்த செயல்முறையானது பாதரசத்தின் உள்ளார்ந்த கொதிநிலைக்கு காரணமாகிறது, இதன் காரணமாக தயாரிப்பு பொதுவாக நீராவி வாங்கி தொட்டியில் பாதுகாப்பாக நடத்தப்படுகிறது. மற்றும் நீரற்ற நீர்ம பாரபீன் முன்னிலையில் வினைபுரியச் செய்தல் போன்ற ஒருங்கிணைந்த காற்றில்லா நுட்பத்தைப் பயன்படுத்தி பெரும்பாலும் இவ்வினை நிகழ்த்தப்படுகிறது. ஆய்வகங்களில் சோடியத்தை பாதரசத்தில் கரைத்து அல்லது பாதரசத்தை சோடியத்தில் கரைத்து சோடியம் இரசக்கலவை தயாரிக்கப்படுகிறது மேலும் சோடியம் இரசக்கலவையை வேதிப்பொருள்கள் வினியோக இல்லங்களிலிருந்தும் பெறவியலும்.

பயன்கள்

1880 களில் ராபர்ட் புன்சன், யூலியசு தபேல் மற்றும் ஆன்சு கோல்டுசிக்மிட்டு ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சோடியம் இரசக்கலவை கரிம வேதியியலில் ஒரு சக்திவாய்ந்த ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. சோடியத்தைக் கையாள்வதை விட சோடியம் இரசக் கலவையை பாதுகாப்பான முறையில் கையாள இயல்கிறது. எம்டீ தரங்குறைப்பு வினை இதற்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும். உயர் அழுத்த சோடியம் ஆவிவிளக்கு வடிவமைப்பில் சோடியம் இரசக்கலவை பயன்படுத்தப்படுகிறது. சோடியம் சரியான வண்ண உற்பத்திக்கும் பாதரசம் விளக்கின் மின்சார பண்புகளுக்கும் காரணமாகின்றன.

பாதரச மின்கல மின்னாற்பகுப்பு

பாதரச மின்கல மின்னாற்பகுப்பு முறையில் பேரளவில் குளோரினைத் தயாரிக்கும்போது உடன் விளைபொருளாக சோடியம் இரசக்கலவை உருவாகிறது. இம்மின் கலத்தில் அடர் சோடியம் குளோரைடு கரைசல் திரவ பாதரச நேர்மின்முனை மற்றும் தைட்டானியம் அல்லது கிராபைட்டு எதிர்மின்முனை ஆகியவற்றுக்கிடையில் மின்னாற்பகுக்கப்படுகிறது. எதிர்மின் முனையில் குளோரின் உருவாகிறது. நேர்மின்முனையில் சோடியம் உருவாகி பாதரசத்தில் கரைந்து சோடியம் இரசக்கலவை உருவாகிறது, வழக்கமாக இந்த உடன் விளைபொருள் பிரிக்கப்பட்டு இதை சிதைவு மின்கலத்தில் நீருடன் வினைபுரியச் செய்து ஐதரசன் வாயு தயாரிக்கப் பயன்படுத்துவார்கள். அடர் சோடியம் ஐதராக்சைடும் பாதரசமும் இச்செயல்முறையில் மூலம் மறுசுழற்சிக்கு உட்படுகின்றன. கோட்பாட்டின்படி அனைத்து பாதரசமும் முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும், ஆனால் தவிர்க்கமுடியாமல் ஒரு சிறிய பகுதி காணாமல் போகிறது. இந்த பாதரசம் சுற்றுச்சூழலில் வெளிப்பட்டு மாசாகிறது என்ற கவலை காரணமாக பாதரச மின்கல செயலாக்கம் பொதுவாக குறைவான நச்சு வாயுவைப் பயன்படுத்தும் நேர்மின் முனை தாவரங்களால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சோடியம்_இரசக்கலவை&oldid=3538774" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்