சோடியம் அலுமினியம் சல்பேட்டு

சோடியம் அலுமினியம் சல்பேட்டு (Sodium aluminium sulfate) என்பது NaAl(SO4)2·12H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சில சமயங்களில் இவ்வாய்ப்பாடு Na2SO4·Al2(SO4)3·24H2O) என்றும் எழுதப்படுவதுண்டு. வெள்ளை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மத்தை சோடா படிகாரம் அல்லது சோடியப் படிகாரம் என்றும் அழைப்பர். உணவுப் பொருட்களின் (E521|ஐ521) அமிலத்தன்மை சீராக்கியாக இச்சேர்மம் பயன்படுகிறது. குறிப்பாக சமையல் சோடா தயாரிப்பில் இச்சேர்மம் பெரிதும் பயன்படுகிறது.

சோடியம் அலுமினியம் சல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் சோடியம் பிசு (சல்பேட்டு) — தண்ணீர் (1:12)
வேறு பெயர்கள்
சோடியம் படிகாரம்
சோடா படிகாரம்
ஐ521
இனங்காட்டிகள்
10102-71-3
7784-28-3 (dodecahydrate)
ChemSpider22972
EC number233-277-3
InChI
  • InChI=1S/Al.Na.2H2O4S.12H2O/c;;2*1-5(2,3)4;;;;;;;;;;;;/h;;2*(H2,1,2,3,4);12*1H2/q+3;+1;;;;;;;;;;;;;;/p-4
    Key: ZEMWIYASLJTEHQ-UHFFFAOYSA-J
  • InChI=1/Al.Na.2H2O4S.12H2O/c;;2*1-5(2,3)4;;;;;;;;;;;;/h;;2*(H2,1,2,3,4);12*1H2/q+3;+1;;;;;;;;;;;;;;/p-4
    Key: ZEMWIYASLJTEHQ-XBHQNQODAL
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்24939
  • [O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[Na+].[Al+3]
பண்புகள்
NaAl(SO4)2·12H2O
வாய்ப்பாட்டு எடை458.28 கி/மோல்
தோற்றம்வெண்மை படிகத்துகள்
அடர்த்தி1.6754 (20 °செ)
உருகுநிலை 61 °C (142 °F; 334 K)
208 கி/100 மி.லி (15 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.4388
கட்டமைப்பு
படிக அமைப்புகன்சதுரம், cP96
புறவெளித் தொகுதிPa3, No. 205
Lattice constanta = 1221.4 pm
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Na+)
எண்முகம்(Al3+)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலைஎளிதில் தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள்அமோனியம் அலுமினியம் சல்பேட்டு
பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பும் பயனும்

சோடியம் சல்பேட்டையும் அலுமினியம் சல்பேட்டையும் சேர்ப்பதால் சோடியம் அலுமினியம் சல்பேட்டு உருவாகிறது. 2003 ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிற்கு 3000 டன்கள் அளவுக்கு தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில், இதை சோடியம் பைகார்பனேட்டு மற்றும் ஒரு கால்சியம் பாசுபேட் ஆகியனவற்றுடன் சேர்த்து இரட்டை வினை புரிகின்ற சமையல் சோடாவாக வீடுகளுக்காகத் தயாரிக்கிறார்கள்[1].

மரபார்ந்த கனசதுர படிகார அமைப்பில் பன்னிரு நீரேற்று காணப்படுகிறது. கனிமவியலில் இதைதான் படிகாரச் சோடியம் என்கிறார்கள்[2][3] . இதுதவிர மேலும் இரண்டு அரிய கனிம வடிவங்கள் அறியப்படுகின்றன. : மெண்டோசைட்டு [4]( பதினொன்று நீரேற்று) மற்றொன்று தமாருகைட்டு [5](அறுநீரேற்று) என்பன அவையிரண்டாகும்.

பொதுவான நிறம் ஊன்றியாக எமடாக்சிலின் கரைசல்கள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. இக்கரைசல்கள் நுண்திசு நோயியலில் செல் உட்கருக்களுக்கு நிறமேற்ற பயன்படுகின்றன.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்