சேர் சா சூரி

இந்தியாவில் சூரி பேரரசை நிறுவியவர் (1472-1545)

சேர் சா சூரி (Sher Shah Suri; 1486 - மே 22 1545) வட இந்தியாவில் தில்லியை தலைமையாகக் கொண்டு ஆண்ட சூர் வம்சத்தை நிறுவிய முதலாவது அரசராவார்.[2][3] இவரது இயற்பெயர் பரீத் கான். இவர் சேர் கான் என்றும் அரசர்களில் சிங்கம் என்றும் அறியப்படுகிறார். இவரது நிலச் சீர்திருத்தங்கள், வேளாண்மை நீர் வடிகால் முறைகள் முகலாயர்களால் தொடரப்பட்டது.

சேர் சா சூரி
சூர் வம்சத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்17 மே 1540 – 22 மே 1545
முடிசூட்டுதல்1540
முன்னையவர்உமாயூன்
பின்னையவர்இஸ்லாம் ஷா
பிறப்பு1486[1]
சாசாராம், ரோத்தாஸ் மாவட்டம், பீகார், இந்தியா
இறப்பு22 மே 1545
கன்னோசி, கன்னாஜ் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
புதைத்த இடம்
மலிகா பீபி
குழந்தைகளின்
பெயர்கள்
Jalal Khan
பெயர்கள்
ஃபரித் கான் சூர்
மரபுசூர் வமிசம்
அரசமரபுசூர் வம்சம்
தந்தைமியான் ஹசன் கான் சூர்
மதம்இசுலாம்

பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த சேர் சா சூரி 1540இல் முகாலயர் மன்னர் உமாயூனை வென்று முகலாயப் பேரரசைக் கைப்பற்றினார். 1540 முதல் 1545 முடிய தாம் இறக்கும் வரையில் வட இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்டார். இவருக்குப் பின் இவரது மகன் இஸ்லாம் ஷா ஆட்சியேறினார்.[4][5][6][7][8]

பாபரின் ஆட்சியில் முகலாய இராணுவத்தில் ஒரு தனியார் படைப்பிரிவில் பணியாற்றிய செர் சாசூரி பின்னர் படைத்தளபதியாக உயர்ந்தார். பின்னர் பாபர் ஆட்சியின் கீழ் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

1537 இல் பாபரின் மகன் ஹுமாயூன் பயணத்தில் இருந்தபோது சேர் சா சூரி வங்காள மாகாணத்தில் சூர் வம்ச அரசை நிறுவினார்.[9] இதனால் ஏற்பட்ட போரில் 1539 ஆண்டு முகலாய அரசர் ஹுமாயுனை, சாவ்சா போர்களத்தில் தோற்கடித்ததார். மிகச் சிறந்த அரச தந்திரியான சேர் சா சூரி தன்னை ஒரு உயர் திறன் வாய்ந்த நிர்வாகியாகவும் சிறந்த ஆளுநராகவும் நிலை நிறுத்திக் கொண்டார். இவர் செய்த சீரமைப்புப் பணிகள் இவருக்குப் பின்னர் வந்த முகலாய அரசர்களுக்கு குறிப்பாக ஹுமாயூனின் மகனான அக்பர் போன்றோருக்கு முகலாய அரசை வழிநடத்திச் செல்ல ஒரு அடித்தளமாக அமைந்தது.[9]

1540 முதல் 1545 வரையிலான இவரது ஐந்தாண்டு கால ஆட்சியில் இவர் குடிமை மற்றும் இராணுவ நிர்வாகங்களை புதிதாகஅமைத்தார். இவர் வெளியிட்ட 'ருபய்யா' என்னும் வெள்ளி நாணயம், பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் உரூபாய் என்னும் பணத்திற்கு முன்னோடியாகும்.[10] மேலும் இவர் இந்திய அஞ்சல் துறையை புணரமைத்தார்.[11] ஹூமாயூன் நிர்மாணித்த நகரமான தினா-பானா என்ற நகரை புணரமைத்து அதற்கு சேர் கர் எனும் பெயரிட்டார். மேலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாகத் திகழ்ந்த பாடலிபுத்திரத்தைப் புதுப்பித்து பாட்னா எனவும் மாற்றினார்.[12] மேலும் பீகார் காட்டுப்பகுதியில் ஒரு வளர்ந்த புலியை வெறும் கைகளால் கொன்று புகழ் பெற்றார்.[4][9] மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலையாகவும் கிழக்கில் வங்காள தேசத்தின் சிட்டகாங்கில் தொடங்கி கங்கை நதிக் கரையோரமாகவே கைபர் மற்றும் கடந்து, பெஷாவர் வழியாக இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வழியாகவும் செல்லும் கிராண்ட் டிரங்க் சாலையை சேர் சா சூரி ஆப்கானிஸ்தானின் காபூல் வரை விரிவு படுத்தி மேம்படுத்தினார்.[13]

பீகார் மாநிலம் சாசாராமில் உள்ள இவரது நினைவிடத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (ஆங்கிலம்: UNESCO) உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க வேண்டுமென்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.[14]

பிறப்பும் இளமையும்

சேர் சா தற்போதைய ஹரியானா மாநிலத்தில் மஹேந்திரகர் என்ற மாவட்டத்தில் பிறந்தார். இது முன்னர் ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் ஹிசார் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இவருடைய இயற்பெயர் பரீத் கான். இவருடைய தாத்தா இப்ராஹிம் கான் சூர் ஒரு நிலச்சுவான்தாராகவும்(ஜாகிர்தார்) டெல்லி ஆட்சியாளர்களின் பிரதிநிதியாகவும் விளங்கியவர். இவருடைய தர்கா ஒன்று இன்றளவும் இவருடைய நிணைவாக நாராநவுல் பகுதியில் உள்ளது. தாரிக் இ கான் ஜஹான் லோடி என்பவர் தனது குறிப்பில் இதனைப் பதிவு செய்துள்ளார்.[15]

பிரித்தானிகாக் கலைக்களஞ்சியம் சேர் சா சூரி, பீகாரில் உள்ள சாசாராம் நகரில் பிறந்ததாகக் கூறுகிறது.[4] மியான் ஹாசன்கான் சூர் என்பவருக்கு எட்டாவது மகனாக சேர் சா சூரி பிறந்தார். பெர்சிய மொழி வரலாற்றுக் குறிப்புகள் இவர் ஆப்கானியப் பழங்குடியினத்தவரான பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகிறன.[16]

இப்ராஹிம் கான் சூர் டெல்லி சுல்தான் பாஹ்லுல் லோடிக்கும், ஜான்பூர் சுல்தானகத்திற்கு இடையே நீண்ட நாள் நிலவி வந்த போட்டியைத் தீர்க்க உதவினார் எனவே பாஹ்லுல் சுல்தான் இவரது குடும்பத்திற்கென ஹரியானாவிலும் பக்காலாவிலும் ஜாகிர்கள் எனப்படும் பெரும் நிலங்களை வழங்கினார்.[15]

சேர் சா சூரி இளவயதில் பாஹ்லுல் சுல்தானின் ஆலோசகரும் அமைச்சருமான ஓமர் கான் என்பவர் தற்போதைய போஜ்பூர், பக்சர், பீகாரின் பாபுவா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய டெல்லி பர்கானாவை சேர் சாவுக்கு அளித்தார் பல மனைவியரைப் பராமரித்த தனது தந்தை தனக்கு எதுவும் வழங்காததால் சேர் சா சூரி வீட்டிலிருந்து தப்பி ஓடி உத்திரப் பிரதேசம், ஜானாப்பூர் ஆகியவற்ரின் ஆளுநரான ஜமால்கானிடம் பணியாற்றச் சென்றார். அவரது தந்தை பரீத் கானை திருப்பியனுப்பும்படி ஜமால்கானுக்கு கடிதமெழுதினார். ஜமால்கான் சேர் சாவுக்கு அறிவுரைகள் கூறி திருப்பியனுப்பியபோதும் சேர் சா மறுத்தார். தான் அங்கேயே கல்வி பயில்வதாக பதில் எழுதினார்.[17][17]

பீகாரையும் வங்காளத்தையும் கைப்பற்றுதல்

பரீத்கானின் வீரத்தைக் கண்ட பீகாரின் ஆளுநரான ஆளுநரான பஹார்கான் லோஹனி என்பவர் பரீத்கானுக்கு புலிகளின் அரசன் என்று பொருள்படக்கூடிய 'சேர் கான்' எனும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார். எனவே (சேர் சா சூரி) முதன் முதலில் பஹார்கானின் கீழ் பணியாற்றத் தொடங்கினார்.[4] பஹார்கானின் மறைவுக்குப் பின்னர் அவருடை மகன் ஜலால் கான் ஆட்சிக்கு வந்தார். அவரின் இளவயது காரணமாக சேர்கான் அவரின் பிரதிநிதி ஆட்சியாளராக பீஹாரை ஆண்டார். பீகாரில் சேர்கானின் சக்தியையும் அவருடைய வளர்ச்சியையும் விரும்பாத ஜலால்கான் வங்காளத்தை ஆண்ட கியாசுதீன் மகமது சா என்பவரின் உதவியைக் கோரினார். கியாசுதீன் தனது தளபதி இப்ராஹிம்கான் என்பவர் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். ஆனால் 1534 இல் சேர்கான் அப்படையை சூரஜ்கர் எனுமிடத்தில் வெற்றிகண்டார். இதன் விளைவாக பீகார் முழுவதையும் சேர்கான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். 1538 இல் சேர் கான் வங்காளத்தின் மீது படையெடுத்து கியாசுதீன் சாவையும் வென்றார். ஆனால் வங்காள அரசை உடனடியாகக் கைப்பற்ற இயலவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் திடீரென பேரரசர் ஹுமாயூன் அங்கு பயணமாக வந்திருந்தார். 1539 இல் கவுசா எனுமிடத்தில் சேகானுக்கும், ஹுமாயூனுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஹுமாயூன் தோற்கடிக்கப்பட்டார். சேர் சா எனும் பட்டத்திற்கு தான் தகுதியானவன் என்பதை உறுதி செய்த சேர்கான் டெல்லியின் மகுடத்தைச் சூடிக்கொண்டார்.[4]

சம்மெல் போர்

1543 இல் சேர் சா சூரி 80,000 குதிரைகள் மற்ரும் 50,000 இராணுச வீரர்கள் கொண்ட ஒரு பெரிய படையுடன் ராஜபுதனத்தின் மீது படையெடுத்தார். ராஜபுதன அரசனான மால்தியோ ரத்தோர் இதனை முன்பே அறிந்து தனது இரானுவத்தைத் தயாராக வைத்திருந்தார். சேர் சா படைகளுடன் எதிரியின் தலைநகரத்திற்குச் செல்வதற்குப் பதிலாக ஜோத்பூருக்கு கிழக்கில் தொண்ணூறு கி.மீ தூரமுள்ள ஜைத்ரன் பர்கானாவில் சம்மல் என்னுமிடத்தில் முகாமிட்டார். ஒரு மாதம் கடந்த நிலையிலும் இவரால் கோட்டையைக் கைப்பாற இயலவில்லை. படைகளுக்கு உணவு வழங்கி பராமரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதைத் தீர்க்க எண்ணிய சேர் சா ஒரு தந்திரத்தைக் கையாண்டார்.ஒரு மாலைப்பொழுதில் மால்தியோ ரத்தோரின் முகாமிற்குள் போலியாகத் தயாரிக்கப்பட்ட சில கடிதங்களை இறைத்தார். அதில் மால்தியோவின் படைத் தளபதிகளுள் சிலர் சேர் சாவுக்கு மறைமுகமாக உதவுவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது மால்தியோவிற்கு மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியது. எனவே தவறாகப் புரிந்துகொண்டு விசுவாசமில்லாத தனது படைத்தளபதிகளை அவர்களின் விதியை நிணைத்து அங்கேயே விட்டுவிட்டு தனது உண்மையான விசுவாசிகளுடன் ஜோத்பூர் திரும்பினான்.

மால்தியாவின் அறியாமை காரணமாக நடைபெற்ற இச்செயலுக்குப் பின்னும் அவனது ஆளுநர்களான ஜைட மற்றும் கன்பா ஆகியோர் 20,000 வீரர்கள் சேர் சாவின் 80,000 வீரர்களுடன் போர்புரிந்தனர். இப்போரில் சேர் சா வெற்றி பெற்றாலும் அவனுடைய படைத் தளபதிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை பெருமளவு இழக்க நேரிட்டது. இவ்வெற்றிக்குப் பின்னர் தனது ஆளுநரான காவாஸ் கான் என்பவரை அஜ்மீர் முதல் அபுமலை வரை பரந்திருந்த ஜோத்பூர் பிரதேசத்தின் ஆட்சியாளராக நியமித்துவிட்டு டெல்லி திரும்பினான். ஆனால் ஜூலை மாதம் மால்தியோ மீண்டும் எழுச்சிபெற்று தனது பிரதேசங்களைத் திரும்பப் பெற்றான்.

ஆட்சியும் நிர்வாகமும்

சேர் சா சூரியால் முதன் முதலாக கி.பி.1540- 1545 களில் வெளியிடப்பட்ட 'ரூபாய்' எனப்படும் வெள்ளி நாணயம்

Specially Sher Khan was not an angel (malak) but a king (malik). In six years he gave such stability to the structure (of the empire) that its foundations still survive. He had made இந்தியா flourish in such a way that the king of ஈரான் and Turan appreciate it, and have a desire to look at it. Hazrat Arsh Ashiyani (பேரரசர் அக்பர்) followed his administrative manual (zawabit) for fifty years and did not discontinue them. In the same இந்தியா due to able administration of the well wishers of the court, nothing is left except rabble and jungles...

Mirza Aziz Koka, son of Ataga Khan, in a letter to Emperor ஜஹாங்கீர்

சேர் சா மூன்று உலோகங்களில் நாணயங்களை வெளியிடும் முறையை சேர் சா அறிமுகம் செய்தார். அவற்றில் முகலாய எழுத்துகளுடன் கூடிய முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் பொதுவாக வெள்ளி நாணயங்கள் ரூப்பியா என அழைக்கப்பட்டதால் சேர் சா வெளியிட்ட 178 தானியங்கள் நிலையான எடை கொண்ட ஒரு வெள்ளி நாணயத்திற்கு ரூப்பியா எனப் பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் இக்காலதில் வழங்கப்படும் ரூபாய் என்பதற்கான முன்னோடியாகும்.[11] இன்றைய நாளில் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மொரிஷியஸ், மாலத்தீவு, சேச்செல்லஸ் போன்ற நாடுகளில் தேசிய நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் 169 தானியங்கள் நிலையான எடை கொண்ட 'மொகர்' எனப்படும் தங்க நாணயமும் டேம் என்றழைக்கப்பட்ட செப்பு நாணயங்களும் இவரது ஆட்சியில் வெளியிடப்பட்டு புழக்கத்தில் இருந்தன.[11][18]

சேர் சா சூரி பல்வேறு நிணைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளார். தற்போது பாக்கிஸ்தானில் உள்ல உலகப் பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ரோட்டாஸ் கோட்டை சேர் சாவினால் கட்டப்பட்டதாகும் மேலும் பீகாரிலுள்ள ரோட்டாஸ்கர் கோர்ரை, பாட்னாவில் 1540–45 களில் கட்டப்பட்டு சேர் சாவின் அடையாளமாகத் திகழும் சேர் சா சூரி மசூதி, ஆகியவை இவரால் எழுப்பபட்டவையாகும். 1533 இல் டெல்லியில் ஹுமாயூனால் தொடங்கப்பட்ட புராணகுயிலா மசூதியை பின்னர் சேர் சா 1541 விரிவு படுத்தி அவ்வளாகத்தினுள் சேர் மண்டல் எணப்படும் ஒரு எண்கோண வடிவ கட்டடத்தையும் கட்டினார். இக்கட்டடம் பின்னர் ஹுமாயூன் காலத்தில் நூலகமாக மாற்றப்பட்டது. 1580 களில் முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் வாழ்ந்த அப்பாஸ்கான் சர்வானி என்பவர் தனது 'தாரிக் இ சேர் சாஹி' (சேர் சாவின் வரலாறு) எனும் நூலி சேர் சா சூரியின் நிர்வாகம் பற்றி ஏராளமான செய்திகளை பதிவு செய்துள்ளார்.

மறைவு

செர் ஷா சூரியின் நினைவிடம், சசாராம், பீகார்

1545, மே 22 இல் சாந்தல இராஜபுத்திரர்களுக்கு எதிராக நடைபெற்ற கலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது ஏற்பட்ட ஒரு வெடி விபத்தால் செர் சா சூரி மரணமடைந்தார். இதில் ஏற்பட்ட தீ அவரது கிடங்கு முழுவதும் பரவியது. இவருக்குப் பின் இவரது மகன் ஜலால் கான் என்பவர் இஸ்லாம் சா சூரி என்ற பட்டப் பெயருடன் அரியணை எறினார். சேர் சா சூரியின் நினைவாக கிராண்ட் டிரங்க் சாலையில் அமைந்துள்ள நகரமான சாசாராம் எனுமிடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் நடுவே சேர் சா சூரியின் கல்லறை 122 அடி உயரத்துடன் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது இக்கல்லறை இன்றும் ஒரு நினைவுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.[19]

பெரும் தலைநெடுஞ்சாலை

பெரும் தலைநெடுஞ்சாலை (Grand Trunk Road , GT Road) தெற்கு ஆசியாவின் மிகத் தொன்மையான மற்றும் நீளமான நெடுஞ்சாலையாகும். பல நூற்றாண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைத்து வந்துள்ளது. இது கிழக்கே வங்காளத்திலிருந்து இந்தியாவின் வடக்கில் சென்று பாக்கிஸ்தானின் பெஷாவரில் முடிகிறது. 16ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் புதிதாக ஓர் நெடுஞ்சாலையை அப்போது வட இந்தியா முழுமையும் ஆண்டுவந்த பஷ்டூன் அரசர் ஷேர் ஷா சூரியால் கட்டமைக்கப்பட்டது.

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சேர்_சா_சூரி&oldid=3738475" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்