செவஸ்தோபோல்

செவஸ்தோபோல் (Sevastopol) உக்ரைன் நாட்டின் தெற்கில் உள்ள கருங்கடலில் அமைந்திருந்திருக்கும் கிரிமியா தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்த பெரிய நகரம் மற்றும் துறைமுகத்துடன் கூடிய இராணுவக் கடற்படை தளம் ஆகும். 2014-ஆம் ஆண்டு முதல் உக்ரைன் அரசியல் சாசனச் சட்டப்படி, செவவஸ்தோபோல் நகரம் உக்ரைன் பகுதியில் இருப்பினும், அதன் நேரடிக் கட்டுப்பாடு உருசியா நாட்டிடம் உள்ளது. சனவரி 2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 864 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செவஸ்தோபோல் நகரத்தின் மக்கள் தொகை 5,09,992 ஆகும்.[2] நிர்வாக வசதிக்காக செவஸ்தபோல் நகரம் 4 மாவட்டங்களாகப் பிரிக்கபட்டுள்ளது.

செவஸ்தோபோல்
செவஸ்தோபோல்-இன் கொடி
கொடி
செவஸ்தோபோல்-இன் சின்னம்
சின்னம்
செவஸ்தோபோல் நகரத்தின் அமைவிடம் (பச்சை நிறத்தில்)
செவஸ்தோபோல் நகரத்தின் அமைவிடம் (பச்சை நிறத்தில்)
கிரிமியா மூவலந்தீவு வரைபடத்தில் செவஸ்தபோல் (சிவப்பு நிறத்தில்) நகரம்
கிரிமியா மூவலந்தீவு வரைபடத்தில் செவஸ்தபோல் (சிவப்பு நிறத்தில்) நகரம்
செவஸ்தோபோல் is located in Crimea
செவஸ்தோபோல்
செவஸ்தோபோல்
Location of Sevastopol within Crimea
செவஸ்தோபோல் is located in ஐரோப்பா
செவஸ்தோபோல்
செவஸ்தோபோல்
Location of Sevastopol within Europe
ஆள்கூறுகள்: 44°36′18″N 33°31′21″E / 44.605°N 33.5225°E / 44.605; 33.5225
நாடுகிரிமியா தன்னாட்சிக் குடியரசு
நிலைதன்னாட்சி நகரம்
நிறுவப்பட்டது1783
அரசு
 • ஆளுநர்மிகையில் ரசுவோசாயிவ்
பரப்பளவு
 • மொத்தம்849 km2 (328 sq mi)
ஏற்றம்
100 m (300 ft)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்5,09,992
 • அடர்த்தி600/km2 (1,600/sq mi)
நேர வலயம்ஒசநே+03:00 (மாஸ்கோ நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
299000–299699 (Russian system)
Area code+7-8692 (ருசியா முறைப்படி)[1]
வாகனப் பதிவு எண்92 (ருசிய முறைப்படி)
இணையதளம்council.gov.ru/en/structure/regions/SEV/ (in உருசிய மொழி), de facto
1 உக்ரைனின் சிறப்பு நகரம் (de jure) அல்லது உருசியாவின் நேரடி ஆட்சியில் உள்ள நகரம் (de facto)

வரலாறு

1954-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் குருசேவ், செவஸ்தபோல் உள்ளிட்ட கிரிமியா மூவலந்தீவு பகுதிகளை உக்ரைன் குடியசின் நிர்வாகப் பகுதியில் இணைத்தார். 1955-ஆம் ஆண்டின் உக்ரைனிய குடியரசுத் தேர்தலின் போது செவஸ்தபோல் நகரத்தை இரண்டு தேர்தல் மாவட்டத் தொகுதிகளாகப் பிரிகக்ப்பட்டது.[3][4]

2013-2014 ஆண்டுகளில் உக்ரைனில் நடைபெற்ற யூரோமைதான் போராட்டத்தின் முடிவில், 23 பிப்ரவரி 2014 அன்று கீவ் நகரத்தில் உருசியாவின் எதிர்ப்பாளர்கள் அணி ஒன்று கூடி, உருசியாவிற்கு ஆதரவான உக்ரைன் அதிபர் விக்டர் யானுக்கோவிச்சை பதவியிலிருந்து விலக்கினர்.[5] 27 மற்றும் 28 பிப்ரவரி 2014 நாட்களில் ருசிய ஆதரவுக் ஆயுதக் கும்பல் மற்றும் ருசியப்படையினர் கிரிமியாவின் செவஸ்தோபோல் நகரத்தின் அரசுக் கட்டிடங்கள், துறைமுகம், வானூர்தி நிலையம் மற்றும் இராணுவ நிலைகளைக் கைப்பற்றினர்.[6][7]

16 மார்ச் 2014 அன்று கிரிமியாவின் நிலையை அறிய செவஸ்தோபோல் நகரத்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் வாக்கெடுப்பில், 89.5% வாக்குகள் பதிவானது. அதில் 95.6% வாக்குகள், செவஸ்தோபோல் நகரம் உள்ளிட்ட கிரிமியா பகுதிகள் உருசியாவுடன் இணைப்பதற்கு ஆதரவாக வாக்களிப்பட்டது.[8][9] 18 மார்ச் 2014 அன்று உருசியாவின் மேற்பார்வையில் கிரிமியா குடியரசு மற்றும் செவஸ்தோபோல் நகரம் தன்னாட்சி பெற்ற பகுதிகளானது.[10][11] கிரிமியாக் குடியரசு மற்றும் செவஸ்தோபோல் நகரம் உருசியாவுடன் இணைந்தது குறித்து சர்வதேச நாடுகள் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் கிரிமியா தன்னாட்சிக் குடியரசு மற்றும் செவஸ்தோபோல் நகரத்தை உக்ரைனிக்குட்பட்ட பகுதியாக சர்வதேச நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளது.[12] உக்ரேனிய மற்றும் பன்னாட்டுச் சட்டப்படி செவஸ்தோபோல் நகரம் உக்ரைனின் பகுதியாகவே நீடித்தாலும், சட்டவிரோதமான செவஸ்தோபோல் நகரம் உருசியாவின் ஆளுகையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நகரத்தில் உருசியர்கள் பெரும்பான்மையாகவும், உக்ரேனியர்கள் சிறுபான்மையாகவும் வாழ்கின்றனர்.

செவஸ்தோபோல் நகரம் கடல்சார் உயிரியல் ஆய்வு மற்றும் கடற்படை மையமாகவும்[13], கடற்கரை சுற்றுலாத் தளமாகவும் விளகுகிறது. இங்கு கோடைக்காலம் மென்மையாக உள்ளது.

தட்ப வெப்பம்

செவஸ்தோபோல் நகரத்தின் அதிகபட்ச கோடைக்கால வெப்பம் 22 °C (72 °F) ஆகும். குளிர்காலத்தில் பகல் நேர வெப்பம் 15–16 °C (59–61 °F) ஆகவும், இரவில் 9 °C (48 °F) வெப்பம் இருக்கும். ஆண்டில் சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களின் பகலில் 5–6 °C (41–43 °F) வெப்பமும், இரவில் 1 °C (34 °F) பாகை வெப்பமும் இருக்கும். கோடைக்காலத்தில் பகல் நேர வெப்பம் 26 °C (79 °F) ஆகவும், இரவு நேர வெப்பம் 19 °C (66 °F) ஆகவும் இருக்கும். இந்நகரத்தில் கோடைக்காலம் மே மாதம் நடுவிலிருந்து செப்டம்பர் மாதம் முடிய 5 மாதங்கள் நீட்டிக்கும். இதன் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 400 மில்லிமீட்டர்கள் (16 அங்) ஆகும்.[14]

தட்பவெப்ப நிலைத் தகவல், செவஸ்தபோல்
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)5.9
(42.6)
6.0
(42.8)
8.9
(48)
13.6
(56.5)
19.2
(66.6)
23.5
(74.3)
26.5
(79.7)
26.3
(79.3)
22.4
(72.3)
17.8
(64)
12.3
(54.1)
8.1
(46.6)
15.88
(60.58)
தினசரி சராசரி °C (°F)2.9
(37.2)
2.8
(37)
5.4
(41.7)
9.8
(49.6)
15.1
(59.2)
19.5
(67.1)
22.4
(72.3)
22.1
(71.8)
18.1
(64.6)
13.8
(56.8)
8.8
(47.8)
5.0
(41)
12.14
(53.86)
தாழ் சராசரி °C (°F)-0.2
(31.6)
-0.4
(31.3)
2.0
(35.6)
6.1
(43)
11.1
(52)
15.5
(59.9)
18.2
(64.8)
17.9
(64.2)
13.9
(57)
9.9
(49.8)
5.4
(41.7)
2.0
(35.6)
8.45
(47.21)
பொழிவு mm (inches)26
(1.02)
25
(0.98)
24
(0.94)
27
(1.06)
18
(0.71)
26
(1.02)
32
(1.26)
33
(1.3)
42
(1.65)
32
(1.26)
42
(1.65)
52
(2.05)
379
(14.92)
சராசரி பொழிவு நாட்கள்63422120132531
சூரியஒளி நேரம்727514520226731635632625417798642,352
ஆதாரம்: pogodaiklimat.ru[15]

அரசியல் & நிர்வாகம்

உக்ரைன் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி, செவஸ்தோபோல் நகரம், உக்ரைன் நாட்டில் இருப்பினும், 2014-ஆம் ஆண்டு முதல் இந்நகரம் உருசியாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது.

2012 செவஸ்தோபோல் கடற்படை நாள் (உருசியாவின் கடற்படையினர்)
2012 செவதோபோல் கடற்படை நாள் (உக்ரைனின் கடற்படையினர்)
உக்ரைனிய கடற்படையின் பீரங்கிப்படகு, ஆண்டு 2012
18 மார்ச் 2014 அன்று கிரிமியாவை உருசியாவுடன் இணைத்தது குறித்தான வெற்றித் திருநாள், 9 மே 2014

நிர்வாகம்

நிர்வாக வசதிக்காக செவஸ்தோபோல் நகரம் 4 மாவட்டப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

செவஸ்தோபோல் ந்கரத்தின் மாவட்டங்கள்:
  காகரின் மாவட்டம்
  லெனின் மாவட்டம்
  நகிமோவ் மாவட்டம்
  பாலக்லாவா மாவட்டம்

பொருளாதரம்

தொழில் துறை

செவஸ்தோபோல் நகரத்தில் வானூர்திகள் உற்பத்தி தொழிற்சாலை, உலோக உற்பத்தி, கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், வேதியியல் பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளது. இந்நகரத்தில் நெல், கோதுமை, திராட்சை, தேயிலை, புகையிலை பயிரிடப்படுகிறது.

மின்சாரப் பேருந்து
செவஸ்தோபோல் துறைமுகத்தின் நுழைவாயிலின் (இடது) அகலப்பரப்புக் காட்சி

கல்வி

  • செவஸ்தோபோல் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • செவஸ்தோபோல் தேசிய அணுசக்தி மற்றும் தொழில் பல்கலைக்கழகம்
  • கிரிமியன் கூட்டமைப்பு பல்கலைக்கழகத்தின் கிளை

மக்கள் தொகை பரம்பல்

2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, செவஸ்தோபோல் நகரத்தின் மக்கள் தொகை 4,29,922 ஆகும்.[16] இந்நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் மக்கள் தொகையைச் சேர்த்தால் செவஸ்தோபோல் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5,09,992 ஆகும். 1989-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் உருசியர்கள் 74.4% ஆக இருந்தனர்[17] 22001-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, செவஸ்தோபோல் நகரத்தில் இரசியர்கள் 71.6%, உக்ரேனியர்கள் 22.4%), பெலரசியர்கள் 1.6%, தார்த்தர்கள் 0.7%, கிரிமிய தார்த்தர்கள் 0.5%, ஆர்மீனியர்கள் 0.3%, யூதர்கள் 0.3%, மால்டோவியர்கள் 0.2% மற்றும் அசர்பைஜைனியர்கர்கள் 0.2% ஆக இருந்தனர்[18]

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செவஸ்தோபோல்&oldid=3930276" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்