செல்வராசா கஜேந்திரன்

(செல்வராஜா கஜேந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendren, பிறப்பு: அக்டோபர் 29, 1974) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

செல்வராசா கஜேந்திரன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிதேசியப் பட்டியல்
பதவியில்
2004–2010
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர் 1974 (1974-10-29) (அகவை 49)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)மணல்தரை ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்
இனம்இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

கஜேந்திரன் 1974 அக்டோபர் 29 இல் பிறந்தார்.[1] 2001/02 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புத் தலைவராக இருந்தார்.[2]

அரசியலில்

கஜேந்திரன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முன்மொழியப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு,[3] வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 2010 மார்ச்சில், கஜேந்திரனும், ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் இணைந்து கூட்டமைப்பில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை ஆரம்பித்தனர்.[5][6]

கஜேந்திரன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவரது கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை.[7][8] 2011 பெப்ரவரியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[9] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இம்முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட்டார், எனினும் இம்முன்னணியின் எந்த உறுப்பினரும் வெற்றி பெறவில்லை.[10][11]

கஜேந்திரன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டார். ஆனாலும் இவர் தெரிவு செய்யப்படவில்லை.[12][13][14] ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணிக்குக் கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி இவருக்கு கட்சி வழங்கியது.[15][16]

தேர்தல் வரலாறு

செ. கஜேந்திரனின் தேர்தல் வரலாறு
தேர்தல்தொகுதிகட்சிவாக்குகள்முடிவு
2004 நாடாளுமன்றம்யாழ்ப்பாண மாவட்டம்ததேகூ1,12,077தெரிவு
2010 நாடாளுமன்றம்யாழ்ப்பாண மாவட்டம்ததேமமுதெரிவு செய்யப்படவில்லை
2015 நாடாளுமன்றம்யாழ்ப்பாண மாவட்டம்ததேமமுதெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்யாழ்ப்பாண மாவட்டம்ததேமமுதெரிவு செய்யப்படவில்லை(தேசியப் பட்டியல் மூலம் தெரிவு)[15]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்