செலீனியம் அறுசல்பைடு

செலீனியம் அறுசல்பைடு (Selenium hexasulfide) என்பது Se2S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கந்தகத்தின் S8 வகை (வளைய எண்ம கந்தகம்) புறவேற்றுமை வடிவத்தை ஒத்த இச்சேர்மத்தின் மூலக்கூற்று அமைப்பு, இரண்டு செலீனியம் மற்றும் ஆறுகந்தக அணுக்களால் ஆன ஒரு வளையத்தைக் கொண்டுள்ளது. இதர செலீனியம் சல்பைடுகள் SenS8-n.[2] மூலக்கூற்று வாய்ப்பாடுடன் காணப்படுகின்றன.

செலீனியம் அறுசல்பைடு
Selenium hexasulfide[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருசெலீனியம் அறுசல்பைடு
இனங்காட்டிகள்
75926-26-0 Y
பண்புகள்
Se2S6
வாய்ப்பாட்டு எடை350.32 கி/மோ
தோற்றம்ஆரஞ்சு நிற ஊசிகள்
அடர்த்தி2.44 கி/செ.மீ3
உருகுநிலை 121.5 °C (250.7 °F; 394.6 K)
கரைதிறன்கார்பன் டை சல்பைடில் கரையும்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடுபட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வளையத்தில் செலீனியம் அணுக்கள் பிடித்துள்ள இடவமைப்பைப் பொறுத்து பலவகையான மாற்றீயன்கள் காணப்படுகின்றன. 1,2 ( இரண்டு செலீனியம் அணுக்களும் அடுத்தடுத்து) 1,3,1,4 மற்றும் 1,5 (செலீனியம் அணுக்கள் எதிரெதிராக).[3] செலீனியம் அறுசல்பைடு ஒரு ஆக்சிசனேற்றும் முகவராகச் செயல்படுகிறது.

குளோரோ சல்பேன்கள் மற்றும் இருகுளோரோயிருசிலேன் இரண்டும் கார்பன் டை சல்பைடில் உள்ள பொட்டாசியம் அயோடைடில் வினைபுரிந்து 1,2 மாற்றியன் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் வளைய எண்மசெலீனியம் Se8 மற்றும் எட்டு உறுப்பு வளைய செலீனியம் சல்பைடுகள் உருவாகின்றன. SeS7 போன்ற ஏழு உறுப்பு மற்றும் ஆறு உறுப்பு வளைய சல்பைடுகள் இவ்வினையில் உருவாவதில்லை.[2]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்