செத்தும் ஆயிரம் பொன்

2019இல் வெளியான தமிழ் திரைப்படம்

செத்தும் ஆயிரம் பொன்: வேர்கள் (Sethum Ayiram Pon: Roots) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். ஆனந்த் ரவிச்சந்திரன் தனது அறிமுக இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதீஷ், அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பிறகு நேரடியாக 1 ஏப்ரல் 2020 அன்று படம் நெற்ஃபிளிக்சு மூலம் நேரடியாக வெளியிடப்பட்டது.

செத்தும் ஆயிரம் பொன்
Release poster
இயக்கம்ஆனந்த் ரவிச்சந்திரன்
தயாரிப்பு
  • அனுசிலிக்கா துபே
  • பிரியங்கா அகர்வால்
  • சஸ்வத் சிங்
கதைஆனந்த் ரவிச்சந்திரன்
இசைசமந்த் நாக்
நடிப்பு
ஒளிப்பதிவுமணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி
படத்தொகுப்புபிரகாஷ் கருணாநிதி
கலையகம்விஸ்பரி பிலிம்ஸ்
வெளியீடுமே 8, 2019 (2019-05-08)(நியூயார்க்கு இந்தியத் திரைப்பட விழா)
1 ஏப்ரல் 2020 (Worldwide)
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

ஒப்பாரி பாடகியான கிருஷ்ணவேணி (ஸ்ரீலேகா ராஜேந்திரன்), அவரது 23 வயது பேத்தி, ஒப்பனைக் கலைஞரான மீரா (நிவேதிதா சதீஷ்) ஆகியோர் பிரிந்த காலகட்டத்திற்குப் பிறகு இந்தப் படம் உருவாகிறது. இது மீராவிற்கும் அவரது பாட்டிக்கும் இடையேயான உறவு, அவர்களின் மோதலின் தீர்வு மற்றும் கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் மரபுகளுக்குள் மீரா எவ்வாறு தனது வேர்களைக் கண்டறிகிறார் என்பதை ஆராய்கிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

முன்னாள் மென்பொருள் அதிகாரியான ஆனந்த் ரவிச்சந்திரன் முன்னதாக "குபேரனும் இரண்டு குண்டர்களும்" என்ற குறும்படத்தை இயக்கிய பின்னர் தனது இரண்டாவது திட்டத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார்.[1] இரவிச்சந்திரன் இப்படத்திற்காக இறந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் பண்டைய முறையான ஒப்பாரிப் பாடல் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார். எத்தியோப்பியா, மெக்சிக்கோ உள்ளிட்ட பிற அரிசி உண்ணும் கலாச்சாரங்களைப் பற்றி அறிய இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அங்கு இறப்பு கொண்டாடப்படுகிறது. இது அவரை ஒரு கதையாக எழுத தூண்டியது

தொலைக்காட்சி நடிகை ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதீஷ் ( சில்லுக்கருப்பட்டி புகழ்) முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நிவேதிதா தனது வாழ்க்கையை இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கும் கோபமான பெண்ணாக நடிக்கிறார் என்று தெரிவித்தார். இரவிச்சந்திரன், "வெவ்வேறு பின்னணியில் இருந்தும் ஒரே மாதிரியான சித்தாந்தங்களைக் கொண்ட இரு பெண்களுக்கும் இடையே ஒரு இணையை உருவாக்குவதே யோசனை" என்று கூறினார். படத்தில் உண்மையான ஒப்பாரி கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.[2]

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பரமக்குடி அருகே உள்ள ஆப்பனூரில் 17 நாட்களில் நடைபெற்றது. இரவிச்சந்திரன் மேலும் கூறுகையில், அந்த இடத்தில் உள்ள வானிலையும் அமைதியும்" படப்பிடிப்பின் போது சவாலானதாக" இருந்ததகக் கூறினார். பின்னணியில் ஒரு ஒலி குறுக்கிடும்போது குழு சில காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும் என்று நிவேதிதா கூறினார். பின்னணியின் போது ஒலியின் சூழலை தன்னால் உருவாக்க முடியாது என்று ரவிச்சந்திரன் உணர்ந்ததால், குழு ஒத்திசைவு ஒலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்பியது.[3]

ஒலிப்பதிவு

எட்டு பாடல்கள அடங்கிய படத்தின் ஒலிச்சுவடு சமந்த் நாக் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. அவர் ராகவன் மற்றும் ரவி ஆகியோருடன் நான்கு பாடல்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இந்தத் தொகுப்பில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் வரிகளுடன் மூன்று பாடல்களும் இடம்பெற்றுள்ளன.[1]

வெளியீடு

திரைப்படம் 8 மே 2019 அன்று நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், பிற திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்து 1 ஏப்ரல் 2020 அன்று படம் நெற்ஃபிளிக்சு மூலம் நேரடியாக வெளியிடப்பட்டது.[3]

வரவேற்பு

படம் வெளியாகி நேர்மறையான விமர்சனத்தையே எதிர் கொண்டது.[4][5][6][7]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்