சூர் பேரரசு

சூர் பேரரசு (Sur Empire) (பஷ்தூ: د سوریانو ټولواکمني) (ஆட்சிக் காலம்: 1540 - 1556) இந்தியத் துணைக்கண்டத்தின், மேற்கில் தற்கால ஆப்கானித்தான் முதல், கிழக்கில் வங்காள தேசம் வரை ஆண்ட பஷ்தூ மொழி பேசிய சன்னி இசுலாமிய பஷ்தூன்களின் அரசாகும்.[5] சூர் வம்சப் பேரரசர்கள் 1540 முதல் 1556 முடிய 16 ஆண்டுகள் சதாரா மற்றும் தில்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர்[6]முகலாயப் பேரரசர் உமாயூன் ஆட்சிக் காலத்தில் சூர் வம்ச ஆட்சி சில ஆண்டுகள் தடைப்பட்டு நின்றாலும், உமாயூனுக்குப் பிறகு மீண்டும் சூர் வம்ச ஆட்சி நிலைபெற்றது. சூர் வம்சத்தின் புகழ் பெற்ற பேரரசர் சேர் சா சூரி, சூர் வம்சப் பேரரசை நிறுவியவர் ஆவார். [5]இடையில் ஹெமு என்ற இந்துப் போர்ப்படைத்தலைவர் சூர் வம்ச மன்னரை வீழ்த்தி ஒரு மாதம் தில்லியைக் கைப்பற்றி ஆண்டார்.

சூர் பேரரசு
امپراطوری سور (பாரசீக மொழி)
د سرو امپراتورۍ (Pashto)
1538/1540–1556[a]
நிலைபேரரசு
தலைநகரம்சசாராம்
பேசப்படும் மொழிகள்வங்காள மொழி, போச்புரி, இந்தவி, பாரசீக மொழி,[1]
பஷ்தூ மொழி (இராணுவம்)[2]
சமயம்
சன்னி இசுலாம்
அரசாங்கம்முற்றிலுமான முடியாட்சி
பாடிஷா 
• 1538/1540-1545
சேர் சா சூரி (முதல்)
• 1555-1556
அடில் ஷா சூரி (கடைசி)
வரலாறு 
• தொடக்கம்
6 ஏப்ரல் 1538/1540
• சிரிகிந்த் யுத்தம்
1556[a]
முந்தையது
பின்னையது
முகலாயப் பேரரசு
வங்காள சுல்தானகம்
முகலாயப் பேரரசு
வங்காள சுல்தானகம்
1540–1545 இல் சேர் சா சூரியால் வெளியிடப்பட்ட 178 கிராம் எடை கொண்ட முதல் வெள்ளி ரூபாய்[3][4]

வரலாறு

சூர் வம்ச நிறுவனரான சேர் சா சூரி 26 சூன் 1539இல் சௌசா போரிலும், 17 மே 1540இல் பில்கிராம் போரிலும் உமாயூனை வென்று,[7]ஆப்கானித்தான் மற்றும் பஞ்சாப் முதல், கிழக்கில் பிகார், வங்காளம் வரை ஆண்டார்.

17 ஆண்டு கால சூர் வம்ச ஆட்சியில், குறிப்பக சேர் சா சூரி ஆட்சியில், இந்தியத் துணை கண்டத்தில் வங்காளம் முதல் பஞ்சாப் முடிய நெடுஞ்சாலைகள் அமைத்தன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கப்பட்ட்து. வெள்ளி நாணயங்கள் வெளியிட்டனர். வேளாண் நிலங்களை அளந்து ஆவணப்படுத்தப்பட்டது, நீர் பாசான வசதிகள், நிலவரி வசூலித்தல், கிராம நிர்வாகம் போன்றவைகளில் நிர்வாகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. குடிமக்களுக்கும், அரசிற்கிடையே நல்லுறவுக்கு வழிவகுக்கப்பட்டது.

ஹெமு என்ற இராஜபுத்திர போர்ப்படைத்தலைவர், சூர் வம்ச ஆட்சியைக் கைப்பற்றி ஒரு மாத காலம் ஆண்டார்.

பின்னர் முகலாய வம்ச அக்பர் காலத்தில், பைரம் கான் லோடியால் 1556இல் சூரி வம்சம் வீழ்ச்சி கண்டது.

சூர் வம்ச ஆட்சியாளர்கள்

சூர் வம்சத்தின் ஆட்சியாளர்கள்;

பெயர்படம்ஆட்சி துவக்கம்ஆட்சி முடிவு
சேர் சா சூரி
சுல்தான்
மே 17, 1540[8]மே 22, 1545[8]
இசுலாம் ஷா சூரி
சுல்தான்
மே 26, 1545[9]நவம்பர் 22, 1554[9]
பிரௌஸ் ஷா சூரி
சுல்தான்
1554[10]
முகமது அடில் ஷா
சுல்தான்
1554[10]1555[11]
இப்ராகிம் ஷா சூரி
சுல்தான்
1555[11]
சிக்கந்தர் ஷா சூரி
சுல்தான்
1555[11]சூன் 22, 1555[11]
அடில் ஷா சூரி
சுல்தான்
சூன் 22, 1555[11]1556[11]

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suri Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூர்_பேரரசு&oldid=3828992" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்