சுருதி

சுருதி (சமற்கிருதம்: श्रुति) எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். இது கேள்வி என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.

முக்கியத்துவம்

நாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியைத் தாய் என்றும் லயத்தைத் தந்தை என்றும் சொல்வர்.

வகைகள்

சுருதி இரு வகைப்படும். அவையாவன:

  1. பஞ்சம சுருதி - இது மத்யஸ்தாயி ஷட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது;
  2. மத்திம சுருதி - இது மத்யஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது.

சாதாரணமாகப் பாட்டுகள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாகச் சுருதி சேர்க்கும் பொழுது சா-பா-சா-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.

சுருதிக்குப் பயன்படும் கருவிகள்

சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

சுருதி மற்றும் அதன் அதிர்வெண்கள் (இந்துஸ்தான் இசையில் கூறியவாறு)

சுருதி பெயர்ஸ்வரம்விகிதாச்சாரம்சுருதி அதிர்வெண்
க்ஷோபீனிஷட்ஜா1466.1638
திவ்றகோமல் ரிஷப்256/243491.1026
கும்தாவதி16/15497.2414
மண்ட10/9517.9598
சந்தோவதிஷுத்த ரிஷப்9/8524.4343
தயாவந்திகோமல் கந்தர்32/27552.4904
ரஞ்சனி6/5559.3966
ரக்திகா5/4582.7048
ருத்ரிஷுத்த கந்தர்81/64589.9886
குரோதிஷுத்த மத்யம்4/3621.5517
வஜ்ரிக27/20629.3211
பிரசரிணிதிவ்ற மத்யம்45/32655.5428
ப்ரிதி729/512663.7371
மர்ஜானிபஞ்சம்3/2699.2457
க்ஷிதிகோமல் தைவத்128/81736.6539
ரக்த8/5745.8621
சண்டிபிணி5/3776.9397
அளபினிஷுத்த தைவத்27/16786.6514
மட்னிகோமல் நிஷாத்16/9828.7356
ரோகினி9/5839.0948
ரம்யா15/8874.0571
உக்ரஷுத்த நிஷாத்243/128884.9828
க்ஷோபீனிஷட்ஜா2932.3276
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுருதி&oldid=3205399" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்