சுபாங் ஜெயா மாநகராட்சி

சுபாங் ஜெயா மாநகராட்சி அல்லது சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம்; (மலாய்: Majlis Bandaraya Subang Jaya; ஆங்கிலம்: Subang Jaya City Council); (சுருக்கம்: MBSJ) என்பது மலேசியா, சிலாங்கூர், சுபாங் ஜெயா மாநகரத்தையும்; பெட்டாலிங் மாவட்டத்தின் தென் பகுதிகளையும் நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.

சுபாங் ஜெயா மாநகராட்சி
Subang Jaya City Council
Majlis Bandaraya Subang Jaya
Local Government Act 1976
வகை
வகை
மாநகர் மன்றம்
of சுபாங் ஜெயா
தலைமை
நகர முதல்வர்
சொகாரி அனுவார்
Johary Anuar
நகரத் துணை முதல்வர்
சுல்கர்நாயின் அலி
Mohd Zulkurnain Che Ali
கட்டமைப்பு
அரசியல் குழுக்கள்
மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
கூடும் இடம்
சுபாங் ஜெயா மாநகராட்சி தலைமையகம்
MBSJ Headquarters, Persiaran Perpaduan, USJ 5, UEP Subang Jaya
வலைத்தளம்
portal.mbsj.gov.my
அடிக்குறிப்புகள்
முன்பு சுபாங் ஜெயா நகராட்சி என்று அழைக்கப்பட்டது (20 அக்டோபர் 2020 வரை)[1]

பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; போன்ற செயல்பாடுகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது.

வரலாறு

1970-களில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் உள்ளாட்சி சட்டம் 1976-இன் பிரிவு-4 இன் (Local Government Act 1976) கீழ் பெட்டாலிங் மாவட்ட மன்றத்தை (மலாய்: Majlis Daerah Petaling -MDP; ஆங்கிலம்: Petaling District Council) நிறுவியது.

1994-ஆம் ஆண்டில், மாநில அரசாங்கம் அந்த அதிகாரத்தை ஒரு நகராட்சி மன்ற (Municipal Council) நிலைக்கு உயர்த்த முடிவு செய்தது. பின்னர் அதற்கு சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (Subang Jaya Municipal Council) என்று மறுபெயரிட்டது. சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் 1 ஜனவரி 1997-இல் உருவாக்கப்பட்டது

சுபாங் ஜெயா நகராட்சி மன்றம்

பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்றம் (Petaling Jaya Municipal Council - MBPJ); மற்றும் சா ஆலாம் நகராட்சி மன்றம் (Shah Alam Municipal Council - MPSA) ஆகிய இரு நகராட்சி மன்றங்களில் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட சில பகுதிகள்; அப்போதைய சுபாங் ஜெயா நகராட்சி மன்றத்தில் இணைக்கப் பட்டன.

டிசம்பர் 2019-இல், சுபாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் நகராட்சி மன்றத் தகுதி; மாநகராட்சி தகுதிக்கு உயர்த்தப் பட்டது. சுபாங் ஜெயா மாநகராட்சி (Subang Jaya City Council) என்று பெயர் மாற்றம் கண்டது. 20 அக்டோபர் 2020-இல் மலேசிய அரசிதழில் வெளியிடுவதற்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டது.[2]

சுபாங் ஜெயா நகராட்சி முதல்வர்கள்

எண்முதல்வர்தொடக்கம்முடிவு
1டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ அகமது புவாட் இசுமாயில்19972003
2டத்தோ ஸ்ரீ அப்துல் அக்கிம் பின் போர்கான்20032005
3டத்தோ முகமட் ஆரிப் பின் அப்துல் ரகுமான்20052006
4டத்தோ ஸ்ரீ அட்னான் பின் பின் இக்சான்20062011
5டத்தோ அசுமாவி பின் கசுபி20112014
6டத்தோ நோர் இசாம் பின் அகமது தசுலான்20152017
7நோராயினி ரோசுலான்201830 டிசம்பர் 2021
8சொகாரி அனுவார்8 பிப்ரவரி 2022பொறுப்பாளர்

அலுவலகங்கள்

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்