சிறு சுண்டாத் தீவுகள்

(சுந்தா சிறு தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுந்தா சிறு தீவுகள் (Lesser Sunda Islands) அல்லது நூசா தெங்காரா (Nusa Tenggara)[1] ("தென்கிழக்குத் தீவுகள்") ஆத்திரேலியாவிற்கு வடக்கே கடல்சார் தென்கிழக்காசியாவில் உள்ள தீவுக் கூட்டமாகும். மேற்கிலுள்ள சுந்தா பெருந்தீவுகளுடன் இவை சுந்தா தீவுகள் எனப்படுகின்றன. இவை சாவகக் கடலில் சுந்தா கடலடிப் படுகுழி ஒட்டி கீழமிழ்ந்து உருவான சுந்தா வளைவு எனப்படும் எரிமலை வளைவின் அங்கமாக உள்ள தீவுகளாகும்.

சுந்தா சிறு தீவுகள்
புவியியல்
அமைவிடம்பந்தா கடல், புளோரெசு கடல், திமோர் கடல், தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்9°00′S 120°00′E / 9.000°S 120.000°E / -9.000; 120.000
தீவுக்கூட்டம்சுந்தா தீவுகள்
நிர்வாகம்
மாநிலங்கள்பாலி
மேற்கு நூசா தெங்காரா
கிழக்கு நூசா தெங்காரா
மாலுக்கு (பரத் தய்யா தீவுகள் , தனிம்பர் தீவுகள் மட்டுமே)
சுந்தா சிறு தீவுகளின் நிலப்படம்
சுந்தா சிறு தீவுகளின் செய்மதி ஒளிப்படம்
சுந்தா சிறு தீவுகளின் பந்தா தீவு

சுந்தா சிறு தீவுகளில் முதன்மையானவை மேற்கிலிருந்து கிழக்காக: பாலி, லொம்போ, சும்பாவா, புளோரெஸ், சும்பா, திமோர், அலொர் தீவுக்கூட்டம், பரத் தய்யா தீவுகள், மற்றும் தனிம்பர் தீவுகள்.

நிர்வாகம்

சுந்தா சிறு தீவுகள் பல தீவுகளை உள்ளடக்கி உள்ளது; இவற்றில் பெரும்பாலானவை இந்தோனேசியாவின் அங்கமாகும். இந்தோனேசிய மாகாணங்களான பாலி, மேற்கு நூசா தெங்காரா, கிழக்கு நூசா தெங்காரா மற்றும் மாலுக்கு இவற்றை நிர்வகிக்கின்றன.

திமோரின் கிழக்குப் பகுதி, தனிநாடான கிழக்குத் திமோரின் அங்கமாகும்.

நிலவியல்

சுந்தா சிறு தீவுகள் நிலவியலில் இரண்டு தனித்த தீவுக்கூட்டங்களால் ஆனது.[2] பாலி, லொம்போ, சும்பாவா, புளோரெஸ் மற்றும் வெதார் அடங்கிய வடக்குத் தீவுக்கூட்டம் எரிமலை வலயத்தில் உள்ளது. இதில் லொம்போவிலுள்ள ரிஞ்சனி எரிமலை இன்னமும் செயற்பாட்டில் உள்ளது; ஆனால் புளோரெசிலுள்ள கெலிமுத்து எரிமலை, மூன்று வண்ணமிக்க எரிமலைக்குழிகளில் உருவான ஏரிகளுடன், செயலற்று உள்ளது. வடக்குத் தீவுக்கூட்டம் சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலிய புவித்தட்டுக்கும் ஆசியப் புவித்தட்டுக்கும் இடையேயான மோதலால் உருவானவை.[2] சும்பா, திமோர் மற்றும் பாபர் தீவுகளடங்கிய தெற்குத் தீவுக்கூட்டம் எரிமலைகளற்ற தீவுகளாகும்; இவை ஆத்திரேலியப் புவித்தட்டைச் சேர்ந்தவை.[3] வடக்குத் தீவுக்கூட்டத்தின் நிலவியலும் சூழலியலும் தெற்கு மலுக்குத் தீவுகளுடன் வரலாறு, பண்புகள், செயற்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது; இவை ஒரே எரிமலை வளைவில் உள்ளன.

இந்தோனேசியாவில் டச்சுக் குடியேற்ற காலம் முதல் இப்பகுதியில் பல நிலவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் நிலவியல் உருவாக்கமும் முன்னேற்றமும் இதுவரை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்த தீவுகளின் உருவாக்கம் குறித்த நிலவியல் கோட்பாடுகள் பல பெரும் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது.[4]

இரண்டு தட்டுப் புவிப்பொறைகளின் மோதலால் உருவான சுந்தா சிறு தீவுகள் நிலவியலில் உலகின் மிகவும் சிக்கலான, செயற்பாட்டிலுள்ள பகுதியாக விளங்குகின்றன.[4]

சுந்தா சிறு தீவுகளில் பல எரிமலைகள் உள்ளன.[5]

சூழலியல்

சாவகம் அல்லது சுமாத்திரா போன்றன்றி சுந்தா சிறு தீவுகள் பல சிறு தீவுகளால் ஆனவை; சில தீவுகளுக்கிடையே ஆழமான கடலடிப் பள்ளங்கள் உள்ளன. தீவுகளுக்கிடையே தாவர, விலங்கின வகைகளின் நடமாட்டம் குறைந்தளவிலேயே உள்ளது. இதனால் மிக உயர்ந்தளவில் உள்ளக இனங்கள் உருவாகியுள்ளன; மிகவும் அறியப்பட்ட கொமோடோ டிராகன் இத்தகையதொன்றாகும்.[4] மலாய் தீவுக்கூட்டம் என்ற தமது நூலில் ஆல்ஃவிரடு அரசல் வாலேசு விவரித்துள்ளபடி பாலிக்கும் லொம்போவிற்குமிடையே வாலசு கோடு செல்கின்றது; லொம்பாக் நீரிணையின் கிழக்கிலுள்ள பகுதிகளில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலேசிய இனங்களை துவக்கமாகக் கொண்ட உயிரின வகைகளைக் காணலாம்.[6] சுந்தா சிறு தீவுகளில் வெபர் கோட்டிற்கு கிழக்கில் ஆசிய உயிரின வகைகள் மிகுந்துள்ளன. இந்தத் தீவுகள் இந்தோனேசியாவிலேயே மிகவும் வறண்ட காலநிலையை கொண்டுள்ளது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்