சிவநாத் சாஸ்திரி கல்லூரி

சிவநாத் சாஸ்திரி கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் 1879 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்களுக்கான இளங்கலை கல்லூரியாகும், தென்நகர காலைக் கல்லூரி( south city morning) என்று பிரபலமாக குறிப்பிடப்படும் இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [1].

சிவநாத் சாஸ்திரி கல்லூரி
Other nameகள்
நகரக்கல்லூரி
குறிக்கோளுரைஶ்ரத்ததாவான் லபதே ஜ்ஞானம்
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்1961; 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1961)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்முனைவர் ரூனா பிஸ்வாஸ்
முதல்வர்முனைவர் சியூலி சர்க்கார்
அமைவிடம்
23/49, கரியாஹாட் சாலை, தாகுரியா, கன்குலியா, ஜோத்பூர் பார்க்,
, , ,
700029
,
22°30′56″N 88°22′5.52″E / 22.51556°N 88.3682000°E / 22.51556; 88.3682000
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
சிவநாத் சாஸ்திரி கல்லூரி is located in கொல்கத்தா
சிவநாத் சாஸ்திரி கல்லூரி
Location in கொல்கத்தா
சிவநாத் சாஸ்திரி கல்லூரி is located in இந்தியா
சிவநாத் சாஸ்திரி கல்லூரி
சிவநாத் சாஸ்திரி கல்லூரி (இந்தியா)


வங்காளத்தின் புகழ்பெற்ற பிரம்ம சமூக சீர்திருத்தவாதியான மறைந்த பண்டிட் சிவநாத் சாஸ்திரி பாரம்பரியத்தையும் பெருமையையும் நினைவுகூரும் வகையில் இப்பெயர் பெற்றுள்ளது. இது ஹெராம்பா சந்திரா கல்லூரி (பொதுவாக தென்நகர பகல் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது) மற்றும் பிரபுல்லா சந்திரா கல்லூரி (பிரபலமாக தென்நகர மாலைக்கல்லூரி என்று அழைக்கப்படுகிறது) ஆகியவைகளுடன் தன் கல்லூரி வளாகத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

வரலாறு

வங்காளத்தின் பழமையானதும் முதல் தர கல்லூரிகளில் ஒன்றானதுமான இக்கல்லூரி,1879 ஆம் ஆண்டில் மறைந்த ஆனந்த மோகன் போஸ் தலைமையில் நிறுவப்பட்டது. மனிதநேயம் மற்றும் ஒரு சில அறிவியல் பாடங்களில் கற்பித்தலைத் தவிர, இளங்கலை மட்டம் வரை முழு அளவிலான வணிகக் கல்விக்கான ஏற்பாடுகளையும் கொண்டுள்ள இக்கல்லூரியானது கொல்கத்தாவில் உள்ள பெண் மாணவர்களிடையே வணிகக் கல்வியை வழங்குவதில் முன்னணியான ஒன்றாக விளங்கிவருகிறது.

துறைகள்

வணிகப்பிரிவு

  • வணிகம் (கவுரவப்பட்டம் மற்றும் பொது)
  • கணக்கியல் (கவுரவப்பட்டம் மற்றும் பொது)

கலைப்பிரிவு

  • வங்காளம் (கவுரவப்பட்டம் மற்றும் பொது)
  • ஆங்கிலம் (கவுரவப்பட்டம் மற்றும் பொது)
  • வரலாறு (கவுரவப்பட்டம் மற்றும் பொது)
  • அரசியல் அறிவியல் (கவுரவப்பட்டம் மற்றும் பொது)
  • புவியியல் (கவுரவப்பட்டம் மற்றும் பொது)

சிறப்புகள்

இக்கல்லூரியின் நூலகம் இதன் சிறப்புகளில் ஒன்றாகும். 1961 ஆம் ஆண்டில் இருந்தே மிக நேர்த்தியான, வளமான புத்தகங்களின் தொகுப்பைக் கொண்டிருந்த இது, தற்போது கல்லூரியில் கற்பிக்கப்படும் அனைத்து பாடங்கள் மற்றும் தொடர்புடைய பாடங்கள் கொண்ட 41,000க்கும் மேற்பட்ட நூல்களை கொண்டுள்ளது.[2]

இந்நூலகம் ஐந்து தனித்தனி அலகுகளைக் கொண்டுள்ளது:

  1. மைய நூலகம்
  2. கவுரவப்பட்ட நூலகம்
  3. பணியாளர் அறை நூலகம்
  4. புவியியல் துறை நூலகம் மற்றும்
  5. தாவரவியல் துறை நூலகம்.

அங்கீகாரம்

இந்த சாஸ்திரி கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவினால்[3] அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) அங்கீகாரமும் இந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

  • இந்திராணி தத்தா
  • கொனீனிகா பானர்ஜி

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்