சிறுசில்லி

வளைவரைகளின் வகையீட்டு வடிவவியலில் சிறுசில்லி (Roulette) என்பது வளைவரைகளில் ஒரு வகையாகும். வட்டப்புள்ளியுருக்கள், வெளிவட்டப்புள்ளியுருக்கள், உள்வட்டப்புள்ளியுருக்கள், சில்லுருக்கள், வெளிச்சில்லுருக்கள், உட்சில்லுருக்கள் மற்றும் கூம்பிகள் ஆகிய வளைவரைகள் சிறுசில்லி வகையைச் சேர்ந்தவை.

வரையறை

சிறுசில்லி வரையப்படுதல்

ஒரு வளைவரையானது மற்றொரு வளைவரை மீது நழுவாமல் உருளும் போது உருளும் வளைவரையின் மீதுள்ள ஒரு புள்ளியின் பாதையை வரைந்தோமானால் கிடைக்கும் வளைவரை சிறுசில்லியாகும். அப்புள்ளி சிறுசில்லியின் உருவாக்கி அல்லது துருவப்புள்ளி எனப்படும்.படத்தில் நிலையான வளைவரை ஒரு பரவளைவு (நீலம்) உருளும் வளைவரையும் ஒரு சமமான பரவளைவு (பச்சை) உருளும் வளைவரையின் உச்சியின் பாதை (சிவப்பு) ஒரு சிறுசில்லி வளைவரை. இந்தச் சிறுசில்லி, டையோக்ளசின் சிசாய்ட் (cissoid of Diocles) ஆகும்.[1]

சிறப்பு வகைகள்

  • உருளும் வளைவரை ஒரு கோடாக இருந்தால் உருவாக்கும் புள்ளி அக்கோட்டில் அமையும். இதில் சிறுசில்லி நிலையான வளைவரையின் கூம்பி என அழைக்கப்படும்.
  • உருளும் வளைவரை ஒரு வட்டமாகவும் நிலையான வளைவரை கோடாகவும் இருந்தால் சிறுசில்லி சில்லுருவாகும்.
  • உருளும் வளைவரை ஒரு வட்டமாகவும் நிலையான வளைவரை கோடாகவும் இருந்து உருவாக்கும் புள்ளி, அவ்வட்டத்தின் மீது அமைந்தால் சிறுசில்லி வட்டப்புள்ளியுருவாகும்.

எடுத்துக்காட்டு

இப்படிமத்தை சொடுக்கினால் கவிழ்த்தப்பட்ட சங்கிலியத் தொடர்களின் மீது எளிதாக உருளும் சதுரச் சக்கரத்தின் அசைப்படத்தைக் காணலாம்.

நிலையான வளைவரை சங்கிலியமாகவும் உருளும் வளைவரை கோடாகவும் கொண்டால்:

கீழுள்ளவாறு அமையும்படி கோட்டினை அளபுருவாக்கம் செய்ய:

மேலுள்ள வாய்ப்பாட்டினைப் பயன்படுத்த:

p = −i எனில், இதன் கற்பனைப் பகுதி மாறாத ஒன்றாகவும் சிறுசில்லி கிடைமட்டக் கோடாகவும் இருக்கும். சங்கிலிய வளைவுத் தொடர்களாலான பாதையில் ஒரு சதுரச் சக்கரம் எகிறாமல் உருள்வது இதன் ஒரு சுவாரசியமான பயன்பாடு.

சிறிசில்லிகளின் பட்டியல்

நிலையான வளைவரைஉருளும் வளைவரைஉருவாக்கும் புள்ளிசிறுசில்லி
ஏதேனுமொரு வளைவரைகோடுகோட்டின் மீதமையும் புள்ளிவளைவரையின் கூம்பி
கோடுவட்டம்ஏதேனுமொன்றுசில்லுரு
கோடுவட்டம்வட்டத்தின் மீதமையும் புள்ளிவட்டப்புள்ளியுரு
கோடுகூம்பு வெட்டுகூம்பு வெட்டின் மையம்Sturm roulette[2]
கோடுகூம்பு வெட்டுகூம்பு வெட்டின் குவியம்டிலோனா சிறுசில்லி (Delaunay roulette)[3]
கோடுபரவளைவுபரவளைவின் குவியம்சங்கிலியம் (Catenary)[4]
கோடுநீள்வட்டம்நீள்வட்டத்தின் குவியம்நீள்வட்டச் சங்கிலியம்[4]
கோடுஅதிபரவளைவுஅதிபரவளைவின் குவியம்அதிபரவளையச் சங்கிலியம்[4]
கோடுஅதிபரவளையம்அதிபரவளையத்தின் மையம்செவ்வக மிகை வளைவடிவம் (Rectangular elastica)
கோடுஉள்வட்டப்புள்ளியுரு அல்லது வெளிவட்டப்புள்ளியுருமையம்நீள்வட்டம்[5]
வட்டம்வட்டம்ஏதேனுமொன்றுமையப்படுத்தப்பட்ட சில்லுரு[6]
பரவளைவுசமபரவளைவு (எதிர்த்திசையில்)பரவளைவின் உச்சிCissoid of Diocles[1]
சங்கிலியம்கோடுபார்க்க:எடுத்துக்காட்டுகோடு

குறிப்புகள்

மேற்கோள்கள்

  • Besant, W. H. Notes on Roulettes and Glissettes, Deighton, Bell & Co., 1890. Online
  • Weisstein, Eric W., "Roulette", MathWorld.

மேலும் படிக்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிறுசில்லி&oldid=3093472" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்