சிரியனான எபிரேம்

சிரியனான புனித எபிரேம் (சிரியம்: ܡܪܝ ܐܦܪܝܡ ܣܘܪܝܝܐ, கிரேக்கம்: Ἐφραίμ ὁ Σῦρος; இலத்தீன்: Ephraem Syrus; சுமார். 306 – 373) என்பவர் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிரிய திருத்தொண்டரும் சிரிய மொழியில் புலமைப்பெற்ற பாடலாசிரியரும், இறையியலாளரும் ஆவார்.[1][2][3][4] இவரின் படைப்புகள் கிறித்தவர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாய் இருந்தன. பல கிறித்தவப் பிரிவுகள் இவரை புனிதர் என ஏற்கின்றன. திருச்சபையின் மறைவல்லுநர் என கத்தோலிக்க திருச்சபையில் ஏற்கப்படுகின்றார். சிரிய மரபுவழி திருச்சபையில் இவருக்கு மிக முக்கிய வணக்கம் செலுத்தப்படுகின்றது.

சிரியனான புனித எபிரேம்
திருத்தொண்டர், மறைப்பணியாளர், மறைவல்லுநர்
பிறப்புc. 306
நிசிபிஸ் (துருக்கி)
இறப்பு9 ஜூன் 373
மெசபோடாமியா
ஏற்கும் சபை/சமயங்கள்எல்லா கிறித்தவ பிரிவுகளும்
திருவிழா28 சனவரி (கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள்)

உயிர்ப்பு ஞாயிறுக்குப் முன்வரும் 7ஆம் சனி (சிரிய மரபுவழி திருச்சபை)
ஜூன் 9 (கத்தோலிக்க திருச்சபை)

ஜூன் 18 (மாரோனைட் திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைதிராட்சைக் கொடி மற்றும் ஏட்டுச் சுருள், திருத்தொண்டர் உடையில் தூப கலசத்தோடு; புனித பெரிய பசீலோடு; யாழினால் பாட்டமைப்பது போல
பாதுகாவல்ஆன்ம வழிகாட்டிகள்

எபிரேம் பாடல்கள், கவிதைகள், மறைஉரைகள் மற்றும் உரைநடை வடிவில் விவிலிய விளக்க உரைகள் பல எழுதி உள்ளார். இவை துன்பவேளையில் திருச்சபையை சீர்திருத உதவும் வகையில் நடைமுறை இறையியல் படைப்புக்களாக இருந்தன. எனவே மக்கள் பல நூற்றாண்டுகளாக இவரது மரணத்திற்கு பின்னரும், இவரது பெயரில் பல நூல்களை (pseudepigraphal) எழுதினார். இவரின் படைப்புகளில் மேற்கு சிந்தனைகளின் தாக்கம் சிறிதாகவே இருப்பதால் அவை கிறித்தவத்தின் துவக்க வடிவத்தைக் காட்டுகின்றது. இவர் சிரிய மொழி பேசும் திருச்சபை தந்தையர்களுல் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.[5]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிரியனான_எபிரேம்&oldid=3650459" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்