சின்ன பச்சைக்காலி

பறவை இனம்

சின்ன பச்சைக்காலி (Marsh Sandpiper) என அழைக்கப்படுவது உள்ளான்களில் ஒரு சிற்றினமாகும். இது ஒரு கரையோரப் பறவையாகும்.

சின்ன பச்சைக்காலி
குளிர் காலத்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
Tringa
இனம்:
T. stagnatilis
இருசொற் பெயரீடு
Tringa stagnatilis
(பேச்செடேயின், 1803)

பெயர்கள்

தமிழில்  :சின்ன பச்சைக்காலி

ஆங்கிலப்பெயர்  :Marsh Sandpiper

அறிவியல் பெயர் :Tringa stagnatillis[2]

உடலமைப்பு

25 செ.மீ. - சாம்பல் பழுப்பு நிற உடல் கொண்ட இதன் முன் நெற்றி, கண்புருவம், தலையின் பக்கங்கள், பின்முதுகு, பிட்டம் ஆகியனவும், மார்பு, வயிறு, வாலடி ஆகியனவும் தூய வெள்ளை நிறங் கொண்டவை.

காணப்படும் பகுதிகள் ,உணவு

குளிர்காலத்தில் வலசை வரும் இதனைக் குளங்கள், ஏரிகள் ஆகியவற்றின் நீர்ப்பரப்பின் ஓரங்களிலும் நீர்தேங்கி நிற்கும் நெல்வயல்களிலும் பரவலாகக் காணலாம். சிறிது உப்பான நீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரும்பித் திரிவது. ஆகஸ்ட் இறுதியில் வரத் தொடங்கும் இவை மே முதல் வாரத்தில் திரும்பிவிடும். இனப் பெருக்கம் செய்வதில் ஈடுபடாத சில, கோடையிலும் இங்கே தங்கிவிடுகின்றன. 1962இல் கோடியக்கரையில் காலில் வளையம் அணிவிக்கப்பட்ட இரு பறவைகள் 5100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் ரஷ்யாவில் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளன. தலையும் அலகும் முழுவதும் மூழ்கும்படி நீர் பரப்பில் இறங்கி இரை தேடவும் செய்யும். சிறுநத்தை, புழு பூச்சிகள் இதன் முக்கிய உணவு எழுந்து பறக்கும் போது ச்சீ வீப், ச்சி வீப் எனக் குரல் கொடுக்கும்.[3]

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tringa stagnatilis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சின்ன_பச்சைக்காலி&oldid=3850556" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்