சித்ரலதா அரண்மனை

தாய்லாந்திலுள்ள அரண்மனை

சித்ரலதா அரண்மனை (Chitralada Royal Villa) என்பது துசித் அரண்மனைக்குள் அமைந்துள்ள ஒரு அரச மாளிகையாகும். இந்த மாளிகை, தாய்லாந்தின் மிக நீண்ட கால மன்னர் பூமிபால் அதுல்யாதெச்(பத்தாம் ராமா ) மற்றும் ராணி சிறிகித் ஆகியோரின் அதிகாரப்பூர்வமற்ற நிரந்தர இல்லமாகும். பெரிய அரண்மனையில் தனது மூத்த சகோதரர் எட்டாம் ராமா இறந்த பிறகு இவர் அங்கு சென்றார். அரண்மனை மைதானத்தில், ஒரு அகழியால் சூழப்பட்டும், காவலர்களால் பாதுகாக்கப்பட்டிருக்கும். இங்கு சித்ரலதா பள்ளியும் உள்ளது. இது ஆரம்பத்தில் அரச குடும்பத்தின் குழந்தைகளுக்கும், அரண்மனை ஊழியர்களுக்காகவும் நிறுவப்பட்டது. இவ்வளாகத்தில் சித்ரலதா தொடருந்து நிலையமும் உள்ளது. இது மாளிகையில் வாழ்ந்த அரச குடும்பத்திற்கு சேவை செய்தது. இளவரசர் தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி சித்ரலதா பள்ளியில் ஒரு மாணவராக இருந்தார். இந்த பள்ளி தாய்லாந்தில் மிகவும் பிரத்தியேகமாக கருதப்படுகிறது.

2012இல் சித்ரலதா அரண்மனை

வரலாறு

அரண்மனையின் பிரதான கட்டிடம் இரண்டு மாடி கட்டிடத்தைக் கொண்டுள்ளது. இது ஆறாம் ராமரின் ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும், அரண்மனை ஆறாம் ராமரின் வசிப்பிடமாகவும் இருந்தது. சித்ரலதா பள்ளி, 1958 இல் நிறுவப்பட்டது.

மன்னர் பூமிபால் அதுல்யாதெச் விவசாயத்திலும், விவசாயத் தொழில்களிலும் ஆர்வம் காட்டியதால் இங்கு ஒரு பால் பண்ணையும், அதுசார்ந்த தொழிற்சாலைகளும் கட்டப்பட்டன. விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க விவசாய பொருட்கள் குறித்த ஆய்வு மையங்களும் நிறுவப்பட்டன. அரண்மனையிலிருந்து பல தயாரிப்புகளுக்கு வகைக்குறி பெயராக "சித்ரலதா" பயன்படுத்தப்படுகிறது. [1]

பார்வையாளர்கள் நுழைய அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சித்ரலதா_அரண்மனை&oldid=3770033" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்