சார்ல்ஸ் நிர்மலநாதன்

இருதயநாதன் சார்ல்சு நிர்மலநாதன் (Iruthayanathan Charles Nirmalanathan; பிறப்பு: 24 நவம்பர் 1975) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

சார்ல்ஸ் நிர்மலநாதன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிவன்னி மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதிவன்னி மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இருதயநாதன் சார்ல்ஸ் நிர்மலநாதன்

24 நவம்பர் 1975 (1975-11-24) (அகவை 48)
குடியுரிமைஇலங்கையர்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)எழுதூர், மன்னார்

வாழ்க்கைக் குறிப்பு

நிர்மலநாதன் 1975 நவம்பர் 24 இல் பிறந்தார்.[1] இவர் பருத்தித்துறை, வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.[2] இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராவார்.[3][4]

அரசியலில்

நிர்மலநாதன் 2013 வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளில் நான்காவதாக வந்ததால் வட மாகாண சபைக்குத் தெரிவாகவில்லை.[5][6] பின்னர் அவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் (34,620) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[7][8] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[9][10][11]

தேர்தல் வரலாறு

சார்ல்சு நிர்மலநாதனைன் தேர்தல் வரலாறு
தேர்தல்தொகுதிகட்சிகூட்டணிவாக்குகள்முடிவு
2013 வடமாகாணசபை[6]மன்னார் மாவட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு12,153தெரிவு செய்யப்படவில்லை
2015 நாடாளுமன்றம்[12]வன்னி மாவட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு34,620தெரிவு
2020 நாடாளுமன்றம்[13]வன்னி மாவட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு25,668தெரிவு

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்