சார்லசு டிகால் வானூர்தி நிலையம்

பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம் (Paris Charles de Gaulle Airport, பிரெஞ்சு மொழி: Aéroport Paris-Charles de Gaulle, ஐஏடிஏ: CDGஐசிஏஓ: LFPG), மேலும் ருவாய்சி வானூர்தி நிலையம் (அல்லது பிரான்சியத்தில் சுருக்கமாக ருவாய்சி) என அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் பிரான்சின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் உலகின் முதன்மை வான்வழி மையங்களில் ஒன்றும் ஆகும். இது ஐந்தாவது பிரெஞ்சு குடியரசின் நிறுவனரும் கட்டற்ற பிரெஞ்சுப் படையின் தலைவருமான சார்லஸ் டி கோல் (1890–1970) நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது பாரிசின் வடகிழக்கே 25 km (16 mi)[2] தொலைவில் அமைந்துள்ளது. ஏர் பிரான்சின் முதன்மை முனைய நடுவமாக சேவையாற்றுகிறது.

பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம்

Aéroport Paris-Charles-de-Gaulle

ருவாய்சி வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்பாரிசின் வானூர்தி நிலையங்கள் நிறுவனம்
சேவை புரிவதுபாரிஸ், பிரான்சு
அமைவிடம்பாரிசின் வடகிழக்கில் 25 km (16 mi)
மையம்
கவனம் செலுத்தும் நகரம்
  • ஏர் மெடிட்டரேன்
  • ஈசிஜெட்
  • ஐரோப்பா ஏர்போஸ்ட்
உயரம் AMSL392 ft / 119 m
இணையத்தளம்www.aeroportsdeparis.fr
நிலப்படம்
பிரான்சில் இல் ட பிரான்சு வட்டாரப் பகுதியின் அமைவிடம்
பிரான்சில் இல் ட பிரான்சு வட்டாரப் பகுதியின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீட்டர்அடி
08L/26R4,21513,829அசுபால்ட்டு
08R/26L2,7008,858பைஞ்சுதை
09L/27R2,7008,858அசுபால்ட்டு
09R/27L4,20013,780அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2019)
பயணிகள்76,150,007
வானூர்தி இயக்கங்கள்498,175
சரக்கு (மெட்ரிக் டன்)2,156,327
மூலங்கள்: பிரான்சின் வான்வழித் தரவுகள் வெளியீடு,[2] வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு[3][4]

2012இல் இந்த நிலையம் 61,556,202 பயணிகளையும் 497,763 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது.[5] உலகின் ஏழாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் ஐரோப்பாவில் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தரவரிசையில் உலகின் பத்தாவதாகவும் ஐரோப்பாவில் முதலாவதாகவும் விளங்குகிறது. 2011இல் சரக்கு போக்குவரத்தில் 2,087,952 மெட்றிக் டன்களை கையாண்ட இந்த நிலையம் உலகளவில் ஐந்தாவதாகவும் ஐரோப்பாவில் பிராங்க்புர்ட் வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவதாகவும் உள்ளது.[5]

மேற்சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

பொது
2ஈ முனையம் உருக்குலைந்தது குறித்து
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்