சாம்ப்ஸ் லையீஸ் தாக்குதல், ஜூன் 2017

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் காவலர்களின் வாகனத்தின் மீது ஆயுதங்களைக் கொண்ட மற்றொரு வாகனத்தினை மோதித் தாக்குதல் நடத்தப்பட்டது. 19 ஜூன் 2017 அன்று நடைபெற்ற இத்தாக்குதலில் தாக்குதல்தாரி கொல்லப்பட்டார். இசுலாமிய அரசு இத்தாக்குதலுக்கு உடனடியாகப் பொறுப்பேற்றுக்கொண்டது.

சாம்ப்ஸ் லையீஸ் தாக்குதல், ஜூன் 2017
இடம்சாம்ப்ஸ் லையீஸ், பாரிஸ்
நாள்19 ஜூன் 2017
பிற்பகல் 3:40
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பாதுகாப்புப்படையினர்
தாக்குதல்
வகை
தாக்கிவிட்டு ஓடுதல்
ஆயுதம்மகிழுந்து
இறப்பு(கள்)1 (தாக்குதல்தாரி)
தாக்கியோர்தியாசிரி ஆதம் லோத்ஃபி (Djaziri Adam Lotfi)

பின்புலம்

பிரான்ஸ் நாட்டின் காவலர்களை ஜிகாதிகள் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்துகின்றனர். 2012 முதல் 2017 வரை 17 முறை இம்மாதிரியான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.[1] காவலர்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீதான இம்மாதிரியான தாக்குதல்களை இசுலாமிய அரசு தீவிரவாத அமைப்பு ஊக்குவிக்கிறது.[2][3] 2015 முதல் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் பிரான்ஸ் நாட்டில் 239 பேர் கொல்லப்பட்டுனர்.

தாக்குதல்

உள்ளூர் நேரப்படி 15:40 மணிக்கு காவல் வாகன ரோந்தினூடே தாக்குதல்தாரி தனது வாகனத்தைச் செலுத்தியதன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தாக்குதல்தாரியின் வாகனம் உடனடியாகத் தீப்பற்றிக் கொண்டது.[4] அவ்வாகனத்தில் ஆ.கே 47 வகைத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் வாயு உருளைகள் இருந்தன.[5] The attack vehicle also contained a quantity of explosives sufficient to "blow this car up."[6] தாக்குதல்தாரி இந்நிகழ்வில் கொல்லப்பட்டார்.

தாக்குதல்தாரி

பிரான்ஸ் காவல் துறையினரால் 31 வயதுடைய தியாசிரி ஆதம் லோத்ஃபி (Djaziri Adam Lotfi) எனும் தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டார்.[7] இவர் வட பிரான்ஸைச் சார்ந்தவராவார். இவரின் உறவினர்கள் நால்வரை காவல் துறையினர் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

கருத்துகள்

மீண்டுமொருமுறை நமது பாதுகாப்புப்படையினர் குறிவைக்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரார்டு கூலும்ப் (Gerard Collomb) தெரிவித்துள்ளார்.[8]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்