சாகர்பாசியா மாகாணம்

சாகர்பாசியா மாகாணம் (Zakarpatska Oblast), உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைநகரம் உசரோத் நகரம் ஆகும். கார்பேத்திய மலைத்தொடரில் அமைந்த சாகர்பாசியா மாகாணம், போலந்து, அங்கேரி, உருமேனியா, சுலோவாக்கியா என 4 நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கில் உக்ரைனின் லிவீவ் மாகாணம் மற்றும் ஐவானோ பிராங்கிவ்ஸ்க் மாகாணங்களுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.

சாகர்பாசியா மாகாணம்
Закарпатська область
மாகாணம்
சாகர்பாட்ஸ்கா மாகாணம் [1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 48°25′N 23°17′E / 48.41°N 23.29°E / 48.41; 23.29
நாடு உக்ரைன்
நிறுவப்பட்ட நாள்22 சனவரி 1946[2]
தலைநகரம்உசரோத் நகரம்
அரசு
 • ஆளுநர்பெட்ரோ டோப்ரோமில்ஸ்கி (தற்காலிகம்)[3]
 • சாகர்பாசியா மாகாண மன்றம்64 உறுப்பினர்கள்
 • தலைவர்மிகைலோ ரிவிஸ்
பரப்பளவு
 • மொத்தம்12,777 km2 (4,933 sq mi)
 • பரப்பளவு தரவரிசை23-வது இடம்
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம் 12,50,129
 • தரவரிசை15-வது இடம்
Demographics
 • அலுவல் மொழிஉக்குரேனிய மொழி
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் குறியீடு
88-90xxx
வட்டார குறியீடு+380-31
ஐஎசுஓ 3166 குறியீடுUA-21
மாவட்டங்கள்6
நகரங்கள் (மொத்தம்)11
• மண்டல நகரங்கள்5
நகர்புற குடியிருப்பு பகுதிகள்19
கிராமங்கள்579
FIPS 10-4UP25
இணையதளம்www.carpathia.gov.ua
www.rada.gov.ua

13,000 சதுர கிலோமீட்டர்கள் (5,000 sq mi) பரப்பளவு கொண்ட சாகர்பாசியா மாகாணம், உக்ரைன் நாட்டின் பரப்பளவில் 23-வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் 15-வது இடத்தில் உள்ளது. 2001-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,54,614 ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,60,129 ஆகும்.

புவியியல்

கார்பேத்திய மலைத்தொடரின் தென்மேற்கில் 80% பகுதியில் சாகர்பாசியா மாகாணம் 12,800 km2 (4,942 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது.[4] சாகர்பாசியா மாகாணம், போலந்து, அங்கேரி, உருமேனியா, சுலோவாக்கியா என 4 நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணத்தில் திசா ஆறு, போர்சவா ஆறு மற்றும் டெரிபிலியா ஆறுகள் பாய்கிறது..[5]இம்மாகாணத்தின் துர்குல் மலையின் சரிவில், 1,750 மீட்டர்கள் (5,740 அடி) உயரத்தில், 3,000 சதுர மீட்டர்கள் (32,000 sq ft) பரப்பளவில் நன்னீர் ஏரி உள்ளது. இதன் கோடைக்கால சராசரி வெப்பம் +21 °С (70 °F) மற்றும் குளிர்கால வெப்பம் −4 °С (25 °F) ஆக உள்ளது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்

ஆகஸ்டு, 2020 பின்னர் சாகர்பாசியா மாகாணத்தின் 6 மாவட்டங்கள்
2020க்கு முன்னர் சாகர்பாசியா மாகாணத்தின் மாவட்டங்கள் மற்றும் நகரங்கள்

சாகர்பாசியா மாகாணத்தில் 13 மாவட்டங்கள் இருந்தது. 18 சூலை 2020 அன்று இதனை 6 மாவட்டங்களாக குறைக்கப்பட்டது.[6][7]இம்மாகாணம் 11 நகரங்கள், 579 கிராமங்கள் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011- சாகர்பாசியா மாகாணத்தின் இனக்குழுக்கள்
   உக்ரேனியர்கள்
  அங்கேரியர்கள்
  உருமேனியர்கள்
   உக்ரைன்&உருசிய கலப்பினத்தவர்கள்

2016-ஆம் ஆண்டில் இம்மாகாணத்தின் மக்கள் தொகை 12,59,158 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 80.50% ஆகவுள்ளனர்.[8]

அங்கேரி மொழி பேசுபவர்கள் 12.1%, உருமோனிய மொழி பேசுபவர்கள் 2.6%, உருசிய மொழி பேசுபவர்க்ள் 2.5%, சுலோக்கிய மொழி பேசுபவர்கள் 1.1% மற்றும் பிற மொழிகள் பேசுபவர்கள் 08% ஆக உள்ளனர்.

இதனையும் காண்க

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zakarpattia Oblast
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்