சலீல் அங்கோலா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சலீல் அசோக் அங்கோலா (Salil Ashok Ankola, பிறப்பு: மார்ச்சு 1. 1968, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1997 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இவர் 28 வயதாக இருக்கும் போது இடது காலில் எலும்பு புற்றுநோய் ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இவர் பல இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

சலீல் அங்கோலா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுஒ.நா
ஆட்டங்கள்120
ஓட்டங்கள்634
மட்டையாட்ட சராசரி6.003.77
100கள்/50கள்-/--/-
அதியுயர் ஓட்டம்69
வீசிய பந்துகள்180807
வீழ்த்தல்கள்213
பந்துவீச்சு சராசரி64.0047.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
--
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-n/a
சிறந்த பந்துவீச்சு1/353/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/-2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ஆரம்பகால வாழ்க்கை

அங்கோலா இந்தியா, கருநாடகத்தில் கொங்கனி குட்ம்பத்தில் 1968 ஆம் ஆண்டில் பிறந்தார்.[1]

முதல்தரத் துடுப்பாட்டம்

தனது 20 ஆம் வயதில் மகாராட்டிர மாநிலத் துடுப்பாட்டா அணிக்காக தனது முதல், முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். 1988-89 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவர் குசராத் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் அரிமுகமானார்.[2] அந்தப் போட்டியில் மட்டையாட்டத்தில் 43 ஓட்டங்களையும் பந்துவீச்சில் ஆறு இலக்குகளையும்க் கைப்பற்றினார். அதில் ஹேட்ரிக்கும் அடங்கும்.[3][4] அதே தொடரில் பரோடா அனிக்கு எதிரான போட்டியில் 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார்.[5] முடிவில் 27 இலக்குகளைக் கைபற்றினார். அவரின் பந்துவீச்சு சராசரி 20.18 ஆகும். மேலும் அதில் ஐந்து இலக்குகளை அவர் ஒரு போட்டியில் கைப்பற்றினார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஹ்கிறனை வெளிப்படுத்தியதன் மூலம் தேர்வாளர்களின் கவனத்திற்கு வந்தார். 1989-90 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கு இவர் தேர்வானார். பாக்கித்தான் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது முதல் ஆட்டப் பகுதியில் இவர் 77 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இரு இலக்குகளைக் கைப்பற்றினார். மொத்தமாக இவர் எட்டு இலக்குகளைக் கைப்பற்றினார்.[6]

சர்வதேசப் போட்டிகள்

1989-90 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. கராச்சியில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அனிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பிற்காலத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரகளாக அறியப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மற்றும் வக்கார் யூனிசு ஆகியோருக்கும் அதுவே முதல் போட்டியாகும்.[7][8][9] தனது முதல் போட்டியில் 128 ஒட்டங்களை விட்டுக் கொடுத்து இரு இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டி சமனில் முடிந்தது.[2]

அந்தத் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் சமனில் முடிந்தது. பின் இவர் அதே அணிக்கு எதிரான ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். மூன்று போட்டிகள் கொண்ட அதொடரின் இரண்டாவது போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தியத் துடுப்பாட்ட அணியின் வெற்றிக்குஒரு ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இந்துயாவின் வசம் இரு இலக்குகள் இருந்தன. பத்தாவது வீரராகக களம் இறங்கினார். இம்ரான் கான் வீசிய ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் ஆறு ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.[10] அடுத்த போட்டியில் இவர் 2.3 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் ரசிகர்கள் இடையூறு செய்ததால் அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இவர் இந்திய அணியில் சில காலம் தேர்வாகவில்லை.[11]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சலீல்_அங்கோலா&oldid=3718830" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்