சம்பல் பிரதேசம்

இந்தியாவின் ஒரு பிரதசம்

சம்பல் பிரதேசம் அல்லது சம்பல் பள்ளத்தாக்கு (Chambal) என்பது இந்தியாவில் யமுனை ஆறு மற்றும் சம்பல் ஆற்றின் சமவெளிகளில் பரந்துள்ள தென்கிழக்கு இராஜஸ்தான், தென்மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடமேற்கு மத்திய பிரதேசத்தின் புவியியல் மற்றும் பண்பாட்டைக் குறிக்கும் பிரதேசமாகும். வறண்ட நிலப்பரப்புக் கொண்ட சம்பல் பள்ளத்தாக்கு எண்ணற்ற கொள்ளைக் கூட்டத்தவர்கள் மற்றும் பிற சமூக விரோத கூறுகளைக் கொண்டுள்ளது. இப்பள்ளதாக்கின் நடமாடும் கொள்ளையர்களின் பயத்தால் இப்பகுதியில் எவ்வித தொழிற்சாலைகளும் நிறுவப்படுவதில்லை. மேலும் இவ்வனப்பகுதிகள் வெளியாட்களின் சுரண்டலிருந்து காக்கப்படுகிறது. [1]

வட-மத்திய இந்தியாவின் சம்பல் பிரதேசம்

புவியியல்

சம்பல் வறன்ட நிலப்பரப்புகள் விந்திய மலைத்தொடரின் நீட்சியாகும். [2]சம்பல் பிரதேசத்தில் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டம், பாரான் மாவட்டம், சவாய் மாதோபூர் மாவட்டம், கரௌலி மாவட்டம் மற்றும் தோல்பூர் மாவட்டம், உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டம், பிரோசாபாத் மாவட்டம், இட்டாவா மாவட்டம், ஔரையா மாவட்டம், ஜாலவுன் மாவட்டம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முரைனா மாவட்டம்.‎ சியோப்பூர் மாவட்டம் மற்றும் பிண்டு மாவட்டங்களைக் கொண்டது.

சம்பல் பிரதேசம் 5 இலட்சம் ஹெக்டேர் பரப்பு கொண்ட குறு மணற்குன்றுகளாலான வறண்ட நிலப்பரப்புகளைக் கொண்டது. இது விந்திய மலைத்தொடரின் வடமேற்கு பீடபூமி ஆரவல்லி மலைத்தொடரின் தென்கிழக்குப் பகுதிகளைக் கொண்டது. சம்பல் பிரதேசத்தில் சம்பல் ஆறு, காளி சிந்து ஆறு, பார்வதி ஆறு (இராஜஸ்தான்) மற்றும் பார்வதி ஆறு (மத்தியப் பிரதேசம்) பாய்கிறது.[2]

பண்பாடு

ஆயுதமேந்திய ஜௌரா நகர இளைஞர்கள், மத்தியப் பிரதேசம்

சம்பல் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ஹரௌதி மொழி, இராஜஸ்தானி மொழிகள் பேசும் மீனா எனும் சமூகத்தினர் அதிகம் வாழ்கின்றனர்.கிழக்கு சம்பல் பிரதேசத்தை ஒட்டிய புந்தேல்கண்ட் பிரதேசத்தில் புந்தேலி மொழி பேசப்படுகிறது. சம்பல் பகுதியில் மீன் பிடித்தல், காட்டு வேளாண்மை பயிரிடுதல் மற்றும் வேட்டையாடுதல் முக்கியத் தொழிலாகும். சம்பல் பள்ளத்தாக்கு எண்ணற்ற கொள்ளைக் கூட்டத்தவர்கள் மற்றும் பிற சமூக விரோத கூறுகளைக் கொண்டுள்ளது.

சம்பல் பிரதேசத்தின் நான்கில் ஒரு பங்கினர் மீனா மக்கள் எனும் பட்டியல் மக்களே. சஹாரிய மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் இராஜபுத்திரர் மற்றும் குஜ்ஜ்ர் இன நிலக்கிழார்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், கொள்ளைக் கூட்டத்தினரை அடக்கவும் ஆயுதமேந்திய தனிப்படைகள் வைத்துள்ளனர். இதனால் நிசாதர்கள் மற்றும் குர்மி எனும் ஏழை மக்களில் ஒரு பகுதியினர் கொள்ளைக் கூட்டத்தவர்களாக மாற நேரிட்டது. இப்பகுதியின் புகழ் பெற்ற கொள்ளைக் கூட்டத் தலவைர்களில் பூலான் தேவி மற்றும் மான் சிங் ஆவர்.

தற்போது சம்பல் பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கு ராஜபுத்திரர், மீனா மக்கள், குஜ்ஜர்கள், குர்மிகள், தலித்துகள் மற்றும் பிராமணர்கள் தங்களுக்கு என தனிப்படைகளை வைத்து பராமரிக்கின்றனர். ஒரு சமூகத்தின் தனிப்படையினர் பிற சமூகத்தினரின் ஆதிக்கத்தை அழிப்பதற்கு அவர்களது சொத்துக்களை கொள்ளையடிப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். [3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சம்பல்_பிரதேசம்&oldid=3869238" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்